Header Ads



புதுவருடப் பிறப்புக்கு முன், அமைச்சரவை மாற்றம் - அசாத் சாலி

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பின்னரான சூழ்நிலையில் புதுவருடப் பிறப்புக்கு முன் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாமென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் இரு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி தெரிவித்தார்.

இது தொடர்பில் அசாத்சாலி கருத்துத் தெரிவிக்கையில்; நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஜனாதிபதியின் ஒரு பிரிவினர் எதிர்த்து பிரதமரை காப்பாற்றியுள்ளனர். இவ்வாறான நிலையில் ஐ.தே.க உறுப்பினர்கள் சிலர் பிரேரணைக்கு ஆதரவு அளித்த அமைச்சர்களை நீக்க வேண்டுமெனக் கோரி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முயற்சித்தனர்.

இந்நிலையில் பிரதமர் இது கட்சியின் தீர்மானம் இல்லையென்பதால் இதனை கைவிட வேண்டுமென கோரியுள்ளார். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரக் காரணம் தமக்கு பிரதியமைச்சை பெறும் எண்ணமேயாகும்.

இதேவேளை சுதந்திர கட்சி மற்றும் ஐ.தே.க இணைந்து அமைச்சரவை மாற்றம் தொடர்பில் குழுவொன்று அமைத்துள்ளது. இதன் பிரகாரம் அமைச்சரவை மாற்றம் புதுவருடப் பிறப்பிற்கு முன்னர் இடம்பெறும் என நம்பிக்கை வெளியிட்ட அசாத்சாலி இரு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

5 comments:

  1. நாக பாம்பு படம் எடுத்து ஆடும்போது சாரைப்பாம்பு தென்னை மட்டையை கட்டி ஆடிக்காம் அதே போன்று இவர் பார்லிமென்ட்டில் பார்வையாலை மண்டபத்தில்இருந்துகொண்டு அமைச்சரவை மாற்றம் பற்றி பேசுகிறார்.எடுத்ததே 550 கேவலம் இன்னும் படிக்கவில்லை.

    ReplyDelete
  2. ஆசாத் சாலி அவர்களே, நாய்க்கு எந்த நேரமும் என்னெவோ சாப்பிடுகின்ற எண்ணம்தானாம் என்பார்கள்... ஒரே மந்திரிசபையில் இருந்து கொண்டு, அந்த மந்திரி சபையை நியமிக்கும் அதிகாரத்தை வைத்திருக்கும் மைத்திரியும் எப்படி ஒரு பிரதம மந்திரிக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவாக இயங்க முடியும். இப்போது அந்த பிரேரணை தோக்கடிக்க பட்டு விட்டதே.. ஆகவே ஆதரவளித்த அனைவரும் மந்திரி பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டியது தான் தார்மிக கடமையும் பொறுப்பும் ஆகும். அது சரி நீங்கள் எதுக்கு மைத்திரியின் ------- சொறிஞ்சி கொண்டு திரிகிரிகள்... மைத்திரி மாபெரும் துரோகம் முஸ்லிம்களுக்கு செய்து கொண்டு வருகிறார்.... அவருக்கு பின்னால் இருந்து கொண்டு..... தேவை தானா???.. கொஞ்சம் இருக்கின்ற பெயரையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
  3. நரி ஊருக்குள் வந்ததே தப்பு அதுக்குள் ஊளை வேற

    ReplyDelete
  4. The Sri Lanka Muslims in Colombo District have understood who this "BIGGEST MUSLIM MUNAAFIKK POLITICAL ACTIVIST IS (this guy is not a politician as he claims). That is why he got only 550 votes. GOD ALLMIGHTY ALLAH WILL DESTROY THIS FELLOW AND HIS POLITICAL INVOLVEMENTS COMPLETELY VERY SOON, Insha Allah. AZAD SALLY WILL NOW LOOSE THE MONTHLY ALLOWANCE ABOUT Rs. 60,000/= PAID SINCE (around) MARCH 2015 AS A COORDINATOR/ADVISER TO MATHIRIPALA SIRISENA AND ALSO THE VEHICLE PRIVILEGES GIVEN WILL ALSO BE WITHDRAWN BECAUSE HE IS NOW AN SLFP COUNCIL MEMBER AND HE CANNOT ENJOY THESE PRIVILEGES ANYMORE. IT IS AGAINST THE LAW. The President was smart to get rid of this fellow by making him a Municipal Councillor. Maybe he will make some money by corruption, who knows?
    "The Muslim Voice".

    ReplyDelete
  5. obtained only 552 votes and a pina MMC and talking about national politics. JOKER.

    ReplyDelete

Powered by Blogger.