April 19, 2018

இலங்கைத் தேசத்திற்காக, உயிர் தியாகம்செய்த முஸ்லிம்கள்..!

(முபிஸால் அபூபக்கர் பேராதனைப் பல்கலைக்கழகம்)

ஒரு நாட்டில் வாழும் மக்கள் அந்நாட்டின் மீதான பற்றினை பல் வேறு வழிகளிலும் வெளிப்படுத்துவர்.அந்த வகையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இலங்கை நாட்டிற்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி ,தமது உயிரைத் துறந்த  இரு வேறுபட்ட உணர்ச்சி பூர்வமான உண்மை வரலாற்றைக்கூறும் சம்பவங்களின்  பதிவே இதுவாகும்.

****புரட்சியாளன் சரதியல்

இலங்கையை பிரிட்டிஷார் ஆட்சி செய்து கொண்டிருந்த 1800 களில் வாழ்ந்த" டிகிரி  கேவாகே சரதியல்" என்ற இயற் பெயரையும்,தான் வாழ்ந்த இடமான இலங்கையின் KEGALLE மாவட்டத்தின் MAWANELLA  பிரதேசத்தின் மலைப்பிரதேசமான UTTUWAN KANTA என்பதையும் இணைத்து  "உதுவான்கந்த SARADIEL....(25 th March 1832-7th May 1864) என அழைக்கப்பட்ட சிங்கள உள்நாட்டு புரட்சியாளனும்" SRILANKAN ROBBIN HOOD"எனவும் அழைக்கப்படும் "சரதியல்" காலனித்துவ ஆட்சியின் போது இந்நாட்டில் பிரிட்டிஷாரினால் ஏற்படுத்தப்பட்டிருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து வாழ்ந்த ஒரு வழிப்பறி கொள்ளைக்காரனாகும்..

பிரிட்டிஷாருடன் இணைந்து அப்பாவி மக்களின் செல்வங்களால் சுகபோகம் அனுபவித்த உயர் தட்டு பிரபுக்களினதும், முதலாளி களினதும் சொத்துங்களைக் கொள்ளை இட்டு, இந்நாட்டின் ஏழை எளிய மக்களுக்குப் பங்கிட்டு, அவர்களுக்கு உதவி புரிந்த்தன் மூலம், வறிய மக்களிடையே  தனக்கான சிறந்த பெயரினை சரதியல் பெற்று இருந்தான்.

அக்கால , கண்டி -கொழும்பு பிரதான வீதி,மற்றும் புகை வண்டி களில் பயணம் செய்த தனவந்தர்களிடமும், வியாபாரிகளிடமும் சொத்துக்களைக் கொள்ளை இட்டு ஏழை மக்களுக்கு உதவி செய்த இவன் அக்கால ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியதோடு,பல முறை கைது செய்யப்பட்டாலும் அவற்றில் இருந்தும் தந்திரமாகத் தப்பி வந்தான்.

மலைக் குகைகளிலும், காடுகளிலும் வாழ்ந்து வந்த சரதியலுக்கு, சிறிது கால இராணுவப் பயிற்சியும், ஆயுதங்களைப் பாவிக்கக் கூடிய திறனும் இருந்ததுடன், தன்னை யாராலும் இலகுவில் வீழ்த்த முடியாது என்ற  உறுதியான நம்பிக்கையும்,  அவனிடம் இருந்ததுடன், மக்களும் அவனை ஓர் அற்புத மனிதனாகவே நோக்கினர்.

****மம்மலி மரைக்கார்...

இத்தனை ஆற்றல் கொண்ட, மக்களுக்கு உதவி புரிந்த ,சரதியலின் உள்நாட்டு "பொருளாதார கலகத்தின்" பின்னால் அவனுக்கு  உதவியாகவும், நம்பிக்கையாகவும் இருந்தவர்கள் அவனது கூட்டத்தைச் சேர்ந்த நண்பர்களே. அதில், சிறிமல, உக்கின்த,மோதர தனகெந்த,எனும் சிங்களவர்களும், மம்மலி மரைக்கார்,மகமது ஸவாத், நஸார்டீன், என்ற முஸ்லிம் நண்பர்களும் அடங்குவர்.இதில் சரதியலின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக இருந்தது மம்மலி மரிக்கார்  ஆகும்.

சரதியலின் அனைத்துப் புரட்சிகளுக்குப் பின்னாலும் அவனைப்  பாதுகாக்கவும், வழிப்படுத்தவும் உதவி புரிந்த "விசுவாச மான" நண்பனாக மம்மலி இருந்தார்.சரதியலின் குடும்ப உறவுகள், மற்றும் தொடர்புகள் அனைத்தும் மம்மலியினாலேயே நிர்வகிக்கபபட்டன.

சரதியலைவிட சற்று வயதில் இளையவரான மம்மலி , சரதியலின் ஒவ்வொரு அசைவுகளிலும் உதவி புரிந்ததனால் இளவயதினரான இரு புரட்சியாளர்களும்,  தமது வழிப்பறி, மற்றும் பயிற்சி விடயங்களில் மிகவும் அவதானமாக இருந்த்தோடு ,ஏனைய நண்பர்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை வழி நடததுபவர்களாகவும் காணப்பட்டனர். சரதியலுக்கு நிகரான பலத்தினை மம்மலி பெற்றிருந்தாலும்,  சரதியலின் படைக்கு "மம்மலி "விசுவாசமான தளபதியாக இருந்தார் எனலாம்.

****அரச நெருக்கடி

சரதியலின் உதவியினால் மக்கள் மத்தியில் அவனுக்கு இருந்த ஆதரவு, POLHAGAWALA, RAMPUKKANA,KURUNAGALA, போன்ற பல இடங்களுக்கும் பரவி, இலங்கைத்தீவில் அவனது செயற்பாடும் , செல்வாக்கும் அதிகரிப்பதை அறிந்த ஆட்சியாளர்கள் அவனை அவசர ,அவசரமாக பிடித்து விட வேண்டும் என முயன்று தோற்றனர், இறுதியில் ,சரதியலையும், மம்மலியையும் பற்றிய தகவல்களைத் தருவோருக்கு" இருநூறு பவுண் " சன்மானம் தருவதாகவும் பகிரங்கமாக பொதுமக்களுக்கு  அறிவித்தனர்( படம்-4)

***இறுதி வேட்டை

அரசின் பணச் சன்மானத்திக்கு மயங்கிய சரதியலின்  நண்பனான "சிறிமல" சரதியல் மற்றும் மம்மலி தொடர்பான தகவல்களை பொலிசாருக்கு வழங்கியதன் பிரகாரம் 1864 மார்ச் 21அன்று மாவனல்லையில் உள்ள ஒரு வீட்டில் சரதியல் இருப்பதாக்க் கிடைத்த தகவலை அடுத்து பொலிஷார் சுற்றி வளைத்தனர், அவ்வேளை சரதியலுடன் மம்மலியும் உடன் இருந்தார்.

வீட்டைச் சுற்றி வளைத்த அக்கால  பொலிசில் கடமையாற்றிய சாஜன் AHAMATH என்பவர் மறைந்திருந்து சரதியலைச் சுட்டுக் காயப்படுத்தினார்.தனது உயிர் நண்பனான சரதியலுக்கு காயம் ஏற்பட்டதைக் கண்ட "மம்மலி " தனது கையில் இருந்த துப்பாக்கியினால் பொலிஷாரை நோக்கிச் சுட்ட போது அங்கு கடமையில் இருந்த  பொலிஸ்CONSTABLE, SAHABAN  என்ற முஸ்லிம் பொலிஸ் கான்ஸடபில் உயிர் இழந்தார்.

சம்பவம் அறிந்து அக்கால கேகாலை மாவட்ட  உதவிஅரசாங்க அதிபராக(AGA) கடமை புரிந்த F.R. SAUNDERS அவசரமாக விஷேட படையணியை வரவழைத்ததன் ஊடாக சரதியலும் ,மம்மலியும் கைது செய்யப்பட்டனர்.

****இலங்கை பொலிஸ் தினம்

தனது சிங்கள  புரட்சித் தலைவனா சரதியலின்  யின்   உயிரைக் காப்பதற்காக "மம்மலி " நடமத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்த பொலிஸ் கான்ஸ்டபில் "ஸஹ்பானே"  இலங்கைப் பொலிஸ் வரலாற்றில் முதன் முதலாக  கடமை நேரத்தில்  உயிர் இழந்தவர் என்ற அந்தஸ்த்தைப் பெறுகின்றார்.இவரின் நினைவாகவே March 21, ஒவ்வொரு வருடமும்  பொலிஸ் தினமாக நினைவு கூரப்படுகின்றது..

***மரண தண்டனை

கைது செய்யப்பட்ட சரதியலும், மம்மலி மரைக்காரும் குற்றவாளிகள் என வாதிட்ட அரச சட்டத்தரணியான RICHART MORGAN னின் வாதத்தின் படி, அக்கால நீதிபதி THOMPSON என்பவரினால் 1864 MAY 7 அன்று 32 வது வயதில் இருவருக்கும் மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது.

தண்டனை  நிறைவேற்றப் படும்  இடத்தில் இவர்கள் இருவரையும் பார்வை இட பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடினர்.அவர்களியையே  இலங்கையின் சுய நிர்ணயம் தொடர்பாக பேசிய  சரதியல்,தனது உயிர் நண்பனான மம்மலியின் "விசுவாசத்திற்கும்" கண்ணீருடன் நன்றி தெரிவித்தான்.

இலங்கையின் சுய நிர்ணயத்திற்கும் பொருளாதார சமத்துவத்திற்காகவும்  போரிட்டதனால், இன்று இலங்கை அரசினால் தேசிய வீரராக (National Hero) மதிக்கப்படும்  தனது சிங்கள  நண்பனின் மீதான  "நேசத்திற்கு" மம்மலி மரைக்காரும்,...  தான் பணிபுரியும் "தேசத்தின்"சட்ட ஒழுங்கினைப் பாதுகாக்க "முஹம்மது ஸஹ்பானும் " தமது உயிர்களை அர்ப்பணித்து  சேவையாற்றி இருப்பது  இலங்கை மீதான விசுவாசத்தினைக்  வெளிப்படுத்தியுள்ள  முஸ்லிம் முன்னோர்களின்   இரு வேறுபட்ட அணுகு முறைகளாகும்.

இது சிங்கள முஸ்லிம் உறவினை மட்டுமல்ல, இந் நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலை நாட்ட முஸ்லிம்கள் மேற் கொண்ட அர்ப்பணிப்பினதும் வரலாற்று பொக்கிசமாகும்... 

குறிப்பு:-  இவ் வரலாறு தொடர்பான பூரண ஆதாரங்களுடன் கேகல்லையில் "சரதியல் கிராமம்" அமைக்கப்பட்டுள்ளது ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்வை இட முடியும்.

3 கருத்துரைகள்:

It will useful if is in sinhala language

Oh dear.
What a joke to get example from these people. I wonder why we need this example ..bad guys are bad always ..
So; if bad Muslim friends get on well with bad sinahslese friends is it good for humanity at all.
No .
Please do not bring this into light now to display our unity with Sinhalese community at all.

mashaAllah very good intormation .

Post a Comment