Header Ads



ரொஹிங்கிய மக்கள் திரும்பும் சூழல், மியன்மாரில் இல்லை

ரொஹிங்கியர்கள் மறுகுடியமர்த்துவதற்கு ஏற்ற சூழல் மியன்மாரில் இல்லை என ஐ.நா உதவிப் பொதுச்செயலாளர் உர்சுலா முல்லர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் ரகைன் மாநிலத்தில் உள்ள ரொஹிங்கியர் மீது இராணுவத்தினர் முன்னேடுத்த நடவடிக்கையை அடுத்து ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட ரொஹிங்கியர்கள் பங்களாதேஷுக்கு புலம்பெயர்ந்தனர்.

அவர்களை மியன்மாருக்குத் திருப்பி அனுப்புவது குறித்து இரு நாடுகளிடையே பேச்சுக்கள் நடைபெற்றன. இதையடுத்து ஐ.நா மனிதாபிமான நடவடிக்கைக்கான உதவி பொதுச்செயலாளர் உர்சுலா முல்லர் மியன்மாரின் ரகைன் மாநிலத்தில் பயணம் செய்து ரொஹிங்கியர்கள் வாழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்டார்.

அதன்பின் யங்கோனில் பேசிய அவர், ரொஹிங்கியர்களை மறுகுடியமர்த்தும் வகையில் அவர்கள் ஏற்கனவே வாழ்ந்த இடங்களில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.