Header Ads



ஐ.தே.க. செயலாளராக, அகிலவிராஜ் நியமனம் (Exclusive)

(ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்)

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக கல்வியமைச்சர் அகிலவிராஜ் நியமிக்கப்படவுள்ளார்.

இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.க. யின் எம். பி. ஒருவர் இச்செய்தியை சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

இன்று (19) நடைபெற்ற ஐ.தே.க. மறுசீரமைப்புக் கூட்டதிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காருக்கு, ஐ.தே.க. செயலாளராக வருவதற்கான ஆதரவு அதிகம் காணப்பட்ட போதிலும் பிரதமர் ரணிலுக்கு நெருக்கமானவர் என்றவகையில் அகிலவிராஜ் ஐ.தே.க. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அறியவருகிறது.

No comments

Powered by Blogger.