Header Ads



இந்து பாடசாலையில், முஸ்லிம் அடிப்படைவாதத்தை கண்டிக்கிதாம் இந்து சம்மேளனம்

-ஊடக அறிக்கை-

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லுரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் திடீரென ஹபாயா அணிந்து வந்ததன் பின்னர் அங்கு தோன்றியுள்ள குழப்பகரமான நிலைமைகள் கவலையளிப்பதாக உள்ளது. திட்டமிட்ட மதவாத செயற்பாடுகளின் ஆரம்பமாக இந்து சம்மேளனம் இதைக் கருதுகின்றது.

இவ்வாறான மதவாதசெயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இலங்கையில் காணப்படும் பாடசாலைகளில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் பண்பாடு,கலாச்சாரம் இனவிகிதாசாரம் என்பவற்றிற்கு ஏற்பவே அங்கு கடமை புரியும் ஆசிரியர்களும் தம்மை அதற்கேற்றவாறு உருமாற்றிக்கொண்டு மாணவர்களை ஒழுக்கமிக்கவர்களாக வழிநடத்திவருகின்றனர்.

எனினும் சவூதி அரேபியாவில் முஸ்லிம் பெண்கள் ஆடையணிவது போன்று இலங்கையிலும் குறிப்பாக திருகோணமலை ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரியிலும் அணியவேண்டும்  என்பது கடும் கண்டனத்திற்குறியது. இதன் பின்னனியில் ஒரு அரசியல் வாதி உள்ளார் என்பதுவும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பொன்று செயற்படுவதாகவும் பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இது தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரிக்கவேண்டும். தமிழ்  முஸ்லிம் மக்களுக்கிடையே மிகப்பெரிய விரிசலை உருவாக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இது பரிணமிக்க வாய்ப்புள்ளது.இவை அனைத்திற்கும் அப்பால் மத அடிப்படைவாதிகள் சிலர் பாடசாலையினுள் அத்துமீறி பிரவேசித்து அதிபரை அச்சுருதியுள்ளது இந்நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் சத்தம் இல்லாமல் பரவி வருவதை கோடிட்டுக்காட்டுகின்றது.

எனவே இது தொடர்பாக பொலிஸ்மா அதிபர் உடனடியாக தலையிட்டு அதிபரின் பாதுகாப்பை உருதிசெய்வதோடு பாடசாலையினுள் புகுந்து அதிபரை அச்சுருத்தியவர்களை  உடனடியாக கைதுசெய்யவேண்டுமென இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

18 comments:

  1. இவர்களை தென் பகுதிக்கு அனுப்பி திருத்தி எடுக்க வேண்டும் அல்லது தமிழர்களின் தாராள மனப்பாங்கை எள்ளி நகையாடத்தான் மனம் வரும். இது ஒரு அரசியல் பிட்புல சிபாரிசு என்றால் எத்தனை முஸ்லீம் பாடசாலைகள் உள்ளன அங்கே போய் கற்று கொடுக்க வேண்டியதுதானே? நாங்கள் தூர விலகி நின்றாலும் நீங்கள் தான் எங்களை சோதித்து பார்க்க எத்தனிக்கிறீர்கள்

    ReplyDelete
  2. Ennayya moola sari illama poitiruchcha? Every one has freedom to choose their dress.

    ReplyDelete
  3. To All my non Muslim brothers and sisters for your kind attentio.

    We Muslim will not exhibit our mother and sisters in the public. So we have a decent dress code for our sisters to keep them safe from anti social elements.

    We consider our sisters and mothers as ajewelry, we will safeguard our jewelry from outsider devil eyes.

    ReplyDelete
  4. Anusath, are you braindead? No any teacher can work in a school they wish to. They have to work in the station where they are appointed to or when they get annual tranfer. Is there any written law that Muslim teachers should work in Muslim schools and Hindu teachers should work in Tamil schools? Three teachers got annual transfer recently to Sanmuga vidyalaya and they were asked to remove abaya by the administration and they refused, that is what happened there. As you say if Hindu teachers working in Muslim schools are asked to wear abaya,will they do it or will you find it right. Your comment has proved how childish and braindead you are.

    ReplyDelete
  5. முஸ்லிம்களுக்கு எதிராக களமிறக்கப்பட்ட ஹிந்து தீவிரவாதியான இவன் தமிழ் முஸ்லீம் ஒற்றுமை பற்றி பேசுகின்றான். இலங்கைக்கு -லம் அல்ல வந்த இவன் கூட்டம் முஸ்லிம்களின் கலாச்சாரம் பற்றி பேசுவது வேடிக்கை. முஸ்லிம் பாடசாலைகளுக்கு பொட்டு வைத்து வரும் தமிழ் அடிப்படைவாத ஆசிரியர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்பதை தமிழ் பயங்கரவாதிகள் எமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றனர்

    ReplyDelete
  6. இந்து பாடசாலைகளுக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அனிந்து வருவது தவறு என உங்கள் கண்களுக்கு புலப்பட்டு ஆர்ப்பாடம் செய்கின்றீர்கள்.
    அதேவேளை எத்தனையோ முஸ்லிம் பாடசாலைகளில் இந்து மற்றும் கத்தோலிக்க ஆசிரியைகள் கடமை புரிகின்றனறார்கள். அவர்கள் அனைவரும் எங்கள் பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை மீறுகின்றனர் எனவே அவர்கள் அனைவரும் அபாயா அல்லது முழு உடலையும் மூடும் விதமாகத்தான் ஆடை அனியவேண்டும் என்று முஸ்லிம்களும் போர்க்கொடி தூக்கினால் நிலமை எவ்வாறு அமையும் என்பதையும் சற்று சிந்தித்து பாருங்கள்.
    அவரவர் மத கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு ஆடையனிவதில் என்ன தவறு உள்ளது மாணவர்கள் அங்கு ஆடை அலங்காரங்களை பார்ப்பதற்கு வரவில்லை படிப்பதற்கே வருகின்றனர் அவ்வாரனவர்களின் நெஞ்சினிலில் தீங்கள்தான் இனமதவாதத்தை வழர்க்கின்றீர்கள்.

    ReplyDelete
  7. Find 'Anusath Jayabal'; the (hard-core racist like BBS) in his fb page as above:

    ReplyDelete
  8. @Ali Mowlana,
    I don't post racial comments like you or your ppl in FB, you can checkout. I am always trying to bridge the community by eliminatung the fundamentalism.

    ReplyDelete
  9. now you can see who is responsible for racial tensions,why you have to cover your face and body in school where you have only ladies. and is it a srilankan muslim culture? From when,I have studied in zahira college colombo long time before and never seen any muslim where this ,now muslims are becoming fanatics in srilanka trying to show they are from saudi arabia,Pl go and do this there ,you are most welcome,

    ReplyDelete
  10. முஸ்லிம் ஆசிரியை தமிழ் பாடசாலைக்கு அபயா அணிந்துவருவதோ அல்லது தமிழ் ஆசிரியை முஸ்லிம் பாடசாலைக்கு பூவும் பொட்டுமாகவருவது அவர் அவர் இருப்பம். இதில் பிரச்சினை ஏதுமில்லை. பிரச்சினை பார்க்கிறவர்கள் மனசில் உள்ள இன்வாத வக்கிரம்தான். இவற்றை வாசிகும்போது கவலையாய் இருக்கு.

    ReplyDelete
  11. Mr Jeyawarmen - Muslims have the total right what to wear and not to wear in schools.

    Muslims need not to have any lessons from outsiders.

    ReplyDelete
  12. Mr Jeyapalan,

    Thanks a million for your simple advice.

    ReplyDelete
  13. Jayapalan has spoken my heart & mind.

    ReplyDelete
  14. இப்ப என்னவாம் இவங்களுக்கு, என்ன கெட்டுப்போச்சாம். பொட்டு வைத்துக்கொண்டு, பூவும் வைத்து, இடுப்பை கட்டிக்கொண்டு முஸ்லீம் பாடசாலைகளில் படிப்பிக்கின்ற தமிழ் ஆசிரியைகளுக்கு அபாய அணிந்து வாருங்கள் என்று நாங்கள் கட்டளை இட்டால், அல்லது ஆர்ப்பாட்டம் செய்தல் எப்படி இருக்கும் இவர்களுக்கு. படிப்பிக்கின்ற மட்டத்திலேயே இப்படியோமே துவேஷ மனப்பான்மையா? எப்ப திருந்தப்போரிங்க?

    ReplyDelete
  15. அபாய என்பது இனவாதமாடா? முட்டாளே. அது ஒரு ஆடை டா பன்னாட.

    ReplyDelete
  16. அனுசாந்து பொலம்பினாலும் அதிலயும் சில உண்மைகள் இருக்கிறது தமிழ் பாடசாலைகளுக்கு ஏன் முஸ்லிம் ஆசிரியைகள் போடப்பட வேண்டும் அவர்களை மாற்றிவிட்டு மஸ்லிம் ஆண் ஆசிரியர்களை அவர் கோருகிறார் போலும் தம்பிக்கு பரியல அது பெண் பாடசாலை என்று அப்ப ஆண் ஆசிரியர்கள் வோணுமாக்கம் அனுப்பினாப் போச்சி.
    நாங்க மரியாதiயா பெண்புள்ளைகள் படிக்கிற இடத்துல ஆணடகளட போடப்போடாது எண்டு பார்த்து பெண்கள அணுப்பினா உங்களுக்கு பெண்கள் வேணாம் ஆண்களா தேவைப்படுது?

    ReplyDelete
  17. ஹபாயா அணிந்து வரக்கூடாது என்பது முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது.ஏன் சேலை அணிந்து தான் வர வேண்டும் என்று சொல்கின்ற அந்த அதிபரையும், அதனை விரும்புவோர்களையும் தொப்பிள் வயிறு தெரிய ஆடை அணிந்து கொண்டு வாங்க என்றா வருவார்களா?இதில அடுத்த பெண்களின் அவயங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்கிற வக்கிர எண்ணத்தை தவிர வேறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலைபெறவும் ஹிஜாப் இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.

    ReplyDelete
  18. Poem
    1. காதலியை தழுவ உடையும் ஒரு தடை தான் தானே உடையாய் மாறிட தவிக்கும் காதலன் உள்ளம் அதன் விளைவாய் பெண்ணின் நாணம் வெட்கப்படும் பெண் தான் எத்தனை அழகு.அவளை வெட்கப்பட வைக்க தெரிந்த ஆணுக்கு அதுவே கொள்ளை அழகு
    2. ஏன் இவங்க கூடலாம் நாம பழகலனு நம் மனதை ஏங்க வைத்தவர்களை விட ஏண்டா இவங்க கூடலாம் பழகுனோம்னு நம் மனதை வலிக்க வைத்தவர்களே அதிகம்.
    3. நீ என்னை எத்தனை முறை காயப்படுத்தினாலும்,நான் உன்னை மறப்பேன் தவிர...என் இதயம் உன்னை மறக்காது...ஏன் என்றால் இதயத்தில் தான் நீ இருக்கிறாய்...
    4.
    முஸ்லிம்களுடைய ஆடை விடயத்தில் காழ்ப்புணர்வை கக்கக் கூடிய சஹோதர்ர்களிடத்திலே கேட்கிறேன்,நீங்கள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஆடை இருக்க வேண்டும் என்று போராடுகிறீர்களா? பெண்களின் ஆடை விடயத்தில் கட்டுப்பாடு இருக்கக் கூடாது என்கறீர்களா?அப்படியெனில் (மன்னிக்கவும் இப்படி கேக்கறத்துக்கு) வயலில் வேலை செய்யக்கூடிய ஒரு ஆண் மேலாடை எதுவுமின்றி வேலை செய்வது போல் உங்கள் பெண்களையும் அனுமதிப்பீர்களா!வீட்டில் நீங்கள் இருக்கும் போது உங்கள் அம்மா,மனைவி,மகள்,சஹோதரிக்கு முன்னால் வெறும் அரைக்கால் உடுப்போடு இருப்பீர்கள் அதே போன்றே அவர்களையும் உடுக்க வற்புறுத்தூவீர்களா! அல்லது ஆடை விடயத்தில் அவர்களுக்கு கட்டுப்பாடு வேண்டும்,மறைக்க வேண்டிய பகுதிகள் மறைக்கப்பட வேண்டும் எண்பீர்களா! ஏன் சிந்திக்க மாட்டேன் என்கீர்கள்....

    ReplyDelete

Powered by Blogger.