April 24, 2018

சவூதிக்குச் சென்ற மகள் குறித்து தாயின் கதறல்

மத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவின் பிரேதசமான தம்மாம் பகுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தரகர் ஒருவரின் உதவியோடு சென்ற தனது மகளை உடனடியாக இலங்கைக்கு வரவழைக்க அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தின் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண்ணின் தாய் விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக சென்றுள்ள ஹட்டன் குடகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான  சுப்பையா விக்னேஷ்வரி என்பவரை கடந்த 13 வருட காலமாக பிரிந்துள்ள நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்ட விதிகளை மீறி எனது மகளை நாட்டுக்கு திருப்பி அனுப்பாமல் வைத்துள்ளமையை அரசாங்கம் ஆராய்ந்து உரிய தீர்வினை பெற்றுத் தரும்படி தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஹட்டன் - குடகம பகுதியில்  சாதாரண குடும்பத்தை சேர்ந்த சுப்பையாக விக்னேஷ்வரி என்பவர் தனது 23ஆவது வயதில்  வறுமை காரணமாக மத்தியகிழக்கு நாடான சவூதி தம்மாம் பிரதேசத்திற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கம்பளையில் உள்ள வெளிநாட்டு முகவர் நிலையத்தின் தரகர் ஒருவர் கூட்டிச்சென்று கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றின் ஊடாக குறித்த நாட்டுக்கு 2005ஆம் ஆண்டு 8ம் மாதம் 12ம் திகதி  அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக தொலைபேசித் தகவல்  ஒன்று உறவினர்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கு பிறகு கடந்த 13 வருட காலமாக மூன்று முறை மாத்திரமே தொலைபேசி அழைப்புகள் உறவினர்களுக்கு கிடைத்துள்ளது.

குறித்த பெண் சவூதி நாட்டுக்கு சென்றதையடுத்து ஒரு வருட காலப்பகுதியில் இவரின் தந்தை சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த பெண்ணின் வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை என தாய் தந்தையினருடன் வறுமை கோட்டின் கீழ் வசித்து வந்துள்ளனர். குடும்பத்தை பாதுகாக்க தகுதியுடைய ஆண் மகன் திருமணம் முடித்து அதே வீட்டில் ஓர் அறையில் வசித்து வருகின்றார்.

வெளிநாட்டுக்கு சென்ற பெண் இன்று வரை தமக்கு பணங்கள் அனுப்பாமல் தொலைத் தொடர்புகளும் சீராக இல்லாமல் இன்று வருவார், நாளை வருவார் என்ற ஏக்கத்துடன் வாழும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தனது கணவர் உயிரிழக்கும் பொழுது கையில் நூறு ரூபாய் மட்டுமே வைத்துக்கொண்டு இறுதிக் கிரியைகளை உறவினர்களின் உதவிகளோடு செய்து முடித்ததாகவும், தந்தை உயிரிழந்த விடயம் கூட இதுவரை காலமும் மகளுக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.

அதேவேளையில் தொலைபேசி மூலமாக தன்னுடைய மகளுக்கு தொடர்பை ஏற்படுத்தும் பொழுது ஸ்ரீலங்கா என்ற வசனத்தை கேட்டவுடனேயே என் மகள் வசிக்கின்ற வீட்டிலிருந்து பதில் ஏதும் கிடைக்காமல் தொலைபேசியை துண்டித்து விடுகின்றனர்.

இருந்தபோதிலும் கடைசியாக கிடைத்த தொலைபேசி ஊடாக  கடந்த வருட இறுதிக்குள் தான் இலங்கைக்கு வந்துவிடுவதாக மகள் ஊடாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரையும் மகள் நாடு திரும்பவில்லை. இதனால் அச்சம் அடைந்துள்ள நிலையில் பலரிடமும் இது தொடர்பாக தெரிவித்த போதிலும் எவரும் எமக்கு உதவுவதாக தெரியவில்லை.

இந் நிலையிலேயே கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் மகளை வெளிநாட்டிற்கு அனுப்பிய முகவர் நிலையத்தோடு தொடர்பு  கொண்டும்  பிரயோசனம் அற்ற நிலையில் வாழ்வதாக அவர் தெரிவித்தார்.

13 வருட காலமாக மகள் உழைத்த பணம் கூட எமக்கு தேவையில்லை. மகளை மாத்திரம் நாட்டுக்கு கொண்டு வந்தால் போதும் என்ற நிலைமைக்கு தான் ஆளாகியுள்ள நிலையில் அரசாங்க அதிகாரிகள் மற்றும்  அரசியல்வாதிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாக குறித்த தாய் மேலும் தெரிவித்தார்.

7 கருத்துரைகள்:

பெண்களை இஸ்லாமியவாத நாடுகளுக்கு அனுப்புவதால் ஏட்படும் விளைவுகள் தான் இவை மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்பும் பொது கவனம் வேண்டும்.

Want to arrest and give big punishment to those agents who selling our women to GCC.... What Buddhist country is this???
Very Shameful act of Our Government....

@Truealf,
Thanks fir accepting members of Gulf Cooporation are worst in humanitarian and the matter of feminism

Mr. Anusath, have u been in gulf??

@anusath எல்லா நாடுகளிலும், எல்லா மதத்தினரிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெடடவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் செய்யும் தவறுக்கு முழு சமூகத்தையும் குறை கூற முடியாது. ஏன், இந்தியாவில் ஒரு சில இந்துக்கள் இதைவிட கேவலமாக கோயிலிலேயே கற்பழிக்கின்றனர். அதற்காக முழு இந்துக்களையும் குறை கூற முடியுமா?

அப்பா அனுசாந்து (Anusath) ஒன்ட பெலம்பல் தாங்க முடியலடா இலங்கையில இருந்து பத்து லட்சம் பேர் அளவில் வெளிநாட்டில் தொழில் புரிகின்றனர் இவர்களின் 70 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வீட்டுப்பணிப்பெண்கள் அதிலும் 80 வீதத்திற்கும் அதிகமானவர்கள் மத்தியகிழக்கில் வேலைபார்க்கின்றனர் அதில் எத்தனை வீதமானவர்களுக்கு இவ்வாறு நடக்கின்றது? அதுவே நீங்கள் பெரும்பான்மையான நாட்டில் வீட்டுப்பணிப்பெண்கள் இருந்தால் அனைவரையும் உங்கள் காவிகள் கற்பிணியாக்கிருப்பார்கள் அல்லது கோவிலில் வைத்து கற்பழித்துக் கொலை செய்திருப்பார்கள் (உங்கள் நாடுகளில் உள்ளநாட்டுப் பிரசைகளுக்கே பாதுகாப்பு இல்ல).
மத்தியகிழக்கு நாடுகளில் இஸ்லாம் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலையில் ஓரளவுக்கேனும் கௌரவமாக இருக்கிறார்ரகள் மற்றைய நாடுகளில் சுற்றுலாப் பணயிகளுக்கே பாதுகாப்பு இல்ல அதுல வீட்டுப்பணிப்பெண்களுக்கு வேற பாதுகாப்பு வேண்டிக் கிடக்கு!

ஒங்கள்ப் போல இனவாதிகளுக்கு சோனியின் வீழ்ச்சிதான் வாழ்க்கை

Post a Comment