Header Ads



சந்திரிக்கா மீது, மைத்திரிபால அதிருப்தி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி மக்கள் அளித்த ஆணை தொடர்பில் சந்திரிக்கா வெளியிட்டு வரும் கருத்துக்கள், ஜனாதிபதியை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது சந்திரிக்கா, கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். அரசாங்கத்தில் தொடர்ந்தும் சுதந்திரக் கட்சி அங்கம் வகிக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.

எவ்வாறெனினும், 2015ம் ஆண்டில் ஏனைய சக்திகளுக்காக மக்கள் வாக்களிக்கவில்லை எனவும், தலைமைத்துவத்திற்காகவே வாக்களித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏன் ஓர் வேட்பாளரை களமிறக்க முடியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சந்திரிக்கா மத்திய செயற்குழுக் கூட்டங்களில் அடிக்கடி பங்கேற்பதில்லை எனவும் இதனால் கொள்கை விவகாரங்களில் அவருக்கு போதியளவு தெளிவில்லை எனவும் ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளார்.

3 comments:

  1. its not for leadership, its frustration. unpers didnt have choice. they wanted only to change mahinda. not m3 even for animal people would have voted

    ReplyDelete
  2. ஹ்ம்ம் மகா ஜனங்களே ஜனாதிபதியின் சொல்லை பார்த்தீர்களா அவரின் கூற்றுப்படி தளமைதுவதுக்கே மக்கள் வாக்களித்ததாக பிதற்றுகின்றார் உண்மையில் மக்கள் வாக்கு அளித்தது நாட்டில் இருந்த கொள்ளையர்களை ஒழித்து நாட்டில் நல்ல ஆட்சியை கொண்டு வருவதற்கே நாட்டின் அணைத்து நல்ல உள்ளங்களும் சேர்ந்து இவரை ஆதரித்து இந்த பதவிக்கு கொண்டு வந்தது இவர் கனவிலும் நினைத்து இராத இந்த பதவி. ஆனால் இவர் இப்பதவியை பெற்று கொண்டதும சில மாதங்களில் இவர் எவர்கள் இவரை தூசித்து இவருக்கு எதிராக இருந்தனரோ அத்தனை நாய்களையும் சேர்த்து கொண்டு சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பையும் இவர் தலையில் கட்டி கள்வர் கூட்டம் இவரை எங்கும் எதுவும் செய்ய முடியாதபடி கைகளை கட்டி விட்டனர் இதற்கு முன்னால் ஆட்சி செய்தவர்களின் மறைமுக பங்கு இதற்கு நிறையவே உண்டு இவரை சுற்றி இருக்கும் கள்வர் கூட்டம் இவர் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதபடி நன்றாக இவரை கட்டி போட்டுகொண்டனர்.
    இப்போது இவரின் பேச்சும் போக்கும் பதவி எடுக்கும் பொது சொன்னதுகளும் செய்வதுகளும் நேர் எதிர் மாற்றமே. இனி வரும் காலங்களில் இலங்கை மக்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும்.
    அரசியல் வாதியின் சொல்லும் குடி காரனின் சொல்லும் விடிந்த பின் நேர் எதிர் மாற்றமே

    ReplyDelete
  3. இதுவும் சொல்வார் இதுக்கு மேலையும் சொல்வார்.ரணிலுக்கு இத விட என்ன வேண்டும் ஐக்கிய தேசிய கட்சி இன்னும் ரோசம் உள்ள கச்சியாக இருந்தால் இதோடு இவர்களின் உறவை முறித்துக்கொள்ள வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.