Header Ads



காரைதீவு பிரதேச சபை வரலாற்றில், முதல் முஸ்லிம் பிரதித் தவிசாளர் ஜாஹிருக்கு வரவேற்பு!


காரைதீவு பிரதேச சபையின் வரலாற்றில் முதல் முஸ்லிம் பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாளிகைக்காடு அமைப்பாளர் ஏ.எம்.ஜாஹிருக்கு மாளிகைக்காடு அல்-ஹூசைன் வித்தியாலயத்தினால் வரவேற்பளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (26) இடம்பெற்றது.

அல்-ஹூசைன் வித்தியாலய அதிபர் ஏ.எம்.எம்.நழீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம்.அஷ்ரஃப் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது காரைதீவு பிரதேச சபை பிரதித் தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் மாணவர்களால் வரவேற்கப்பட்டு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் குழாமினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மாளிகைக்காடு முதலாம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தோடம்பழ சுயேற்சை குழு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளின் மும்முனை போட்டிக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏ.எம்.ஜாஹிர் போட்டியிட்டு வெற்றிபெற்றதுடன் காரைதீவு பிரதேச சபையின் வரலாற்றில் முதல் முஸ்லிம் பிரதித் தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(றியாத் ஏ. மஜீத்)

3 comments:

  1. தமிழர் பிரதேசங்களில் மீண்டும் ஒரு ஹபாயாவுக்கான அடிக்கல்

    ReplyDelete
  2. தமிழரின் இந்து மதம் போலியானது.

    தமிழர் இஸ்லாத்தைத் தழுவுவது, வெகு தூரத்தில் இல்லை.

    சாவதற்கு முன், நீரும் இஸ்லாத்தை தழுவுவதுதான் நல்லது.

    இல்லாவிடில், மறுமையில் நிரந்தர நரகத்தில் இருப்பாய்.

    ReplyDelete
  3. Mr anusad, mind your word.
    We never force any indu to puton abaya.
    We don't care if you peoples roaming without dress.

    ReplyDelete

Powered by Blogger.