Header Ads



பாதிக்கப்பட்ட ஆசிரியைகளுக்கு, உதவத் தயார் - சட்டத்தரணி சறூக்

மத்திய அரசின் வளங்களை நேரடியாக பெறும் திருமலையிலிருக்கும் 6 தேசிய பாடசாலைகளில் ஒன்றான ஸ்ரீ சண்முகா ஹிந்து மகளிர் கல்லூரி நிர்வாக த்தின் அண்மைய செயற்பாடுகள் அனைத்தும் இலங்கைச்சட்டவரையறைகளுக்குட்பட்டவைகளா? எனப்பார்ப்போம் 

ஆரம்பத்தில் அதிபரின் வற்புறுத்தலில் 3 முஸ்லிம் ஆசிரியைகள் தமது உடையான ஹபாயாவை அணிவதைத் தவிர்த்து  சாரி அணிந்து பணிபுரிந்துள்ளனர்.புதிதாக இடமாற்றம் பெற்ற 5 முஸ்லிம் ஆசிரியைகளில் ஒருவர் மாத்திரம்(சட்டம் தெரிந்தவர்) சாரி அணியும் படியான அதிபரின் வற்புறுத்தலுக்கு இணங்காத போது பாடசாலை நிர்வாகத்தால் அனைத்து முஸ்லிம் ஆசிரியைகளும் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

இதன் உச்சக்கட்டமாக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் பழைய மாணவிகள் சங்கம் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோர் பாடசாலைக்கு முன்னால் நடத்தியிருந்தனர்.

அதன் பின்னரான கல்வி உத்தியோகத்தினர்களுடனான  பேச்சுவார்த்தையில் கல்வியமைச்சின் முடிவு வரும் வரை தற்காலிக இடமாற்றத்திற்கு சமூகத்தின் சுமூக வாழ்வு (இயலாமைக்கு மறுபெயர்) க்காக  விருப்பமின்றி முஸ்லிம் ஆசிரியைகளால் ஒத்துக்கொள்ளப்பட்டது. 

ஆனால் மறுநாள் "பாடசாலையின் நிர்வாகத்தினருடன் முரண்பட்டதால் தற்காலிக இடமாற்றத்திற்கு நாம் ஒத்துக்கொள்கிறோம்" என்ற வட்டாரக்கல்வி அதிகாரியின் கடிதத்திற்கு ஒப்பமிடமுடியாது என முஸ்லிம் ஆசிரியைகள் மறுத்துள்ளனர்.

இவைகளே  இதுவரை (28.04.2018) கிடைத்த தகவல்கள்.

இனி சட்ட நிலைமையைப்பார்ப்போம் 

எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) (2)ன் படி சட்டத்தின் முன்பு எல்லோரும் சமமானவர்கள் என்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கு எல்லோரும் உரித்துடையவர்கள் என்றும் இனம்,மதம்,மொழி,சாதி,பால்,அரசியல் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக எவரும் ஓரங்கட்டப்படலாகாது என்றும்,

உறுப்புரை 14(1) (உ),(ஊ) படி ஒவ்வொரு பிரஜையும் தனது  மதத்தை ,நம்பிக்கையை, கலாச்சாரத்தை (ஹபாயா உடை) பின்பற்றும் மேன்படுத்தவும் உரித்துடையவர் எனவும் 

கல்விச்சட்டத்தில் ஆசிரியைகள் சீரிய உடை அணிய வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. 

எனவே பகிரங்க அலுவளர்களான அதிபர் மற்றும் ஆசிரியர்கள் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு ஹபாயா அணிவதற்கு மறுப்புத்தெரிவித்தால் அவர்களுக்கு எதிராக மேற்கூறப்பட்ட  அடிப்படை உரிமை மீறலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கிடமுடியும்.

மேலும் தண்டனைச்சட்டக்கோவை பிரிவு 183 படி பகிரங்க அலுவலர் தனது சேவையை செய்ய தடை (அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள்) விதித்தால் விதிப்பவருக்கு 3 மாதங்கள் வரை மறியல் தண்டனையும் ,184 படி ஒரு பகிரங்க அலுவளருக்கு பணிபுரிய உதவி செய்யும் பொறுப்புடையவர் (அதிபர்) அதனைச்செய்யாது விட்டால் குறித்த நபருக்கு 1 மாதம் மறியல் தண்டணையை நீதவானிடமிருந்து பெற்றுத்தரமுடியும்.

எனவே முஸ்லிம் ஆசிரியைகளை விரட்டியவர்கள், staff அறையில் அடைத்து வைத்தவர்கள் அனைவருக்கும் மேற்கூறப்பட்ட தண்டனையை முஸ்லிம் ஆசிரியைகள் ஒத்துழைத்தால்  வாங்கிக்கொடுக்கலாம்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களில் பெரும்பாலானவர்கள் அரச சேவையாளர்கள்.

கலாச்சாரம் பேசும் கண்ணாடி போட்ட பெண்மணி ஒரு கிராம உத்தியோகத்தர் என்பது தெரிய வருகிறது 

"வேலை செய்ய வேண்டிய நேரத்தில் என்ன ஆர்ப்பாட்டம் "என அவருக்கெதிராகவும் வழக்கிடலாம்.

ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்திருந்தால் அத்தியாவசிய சேவையாகிய ஆசிரிய சேவை தொடர்பாகவும் வழக்கிடலாம்.

மேலும் முஸ்லிம் ஆசிரியைகளின் கணவர்களும் அத்துமீறி பாடசாலைக்குள் பிரவேசித்தால் அவர்களுக்கெதிராகவும் வழக்கிடலாம்.

எனவே ஸ்ரீ சன்முகா ஹிந்து மகளிர் கல்லூரியின் செயற்பாடுகள் அனைத்தும் சட்டவரையறை க்குட்பட்டவையல்ல.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகள் இறைவனுக்கு மாத்திரம் பயந்தவர்களாக எம்மை தொடர்பு கொண்டால் உதவ தயாராகவுள்ளேன்.

சட்டத்தரணி சறூக் கொழும்பு

3 comments:

  1. இஸ்லாம் மன்னிப்பை அதிகம் விரும்புகிறது,,உரியவர்களுக்கு நிபந்த்னை அடிப்படைல் மன்னிப்பளித்து ,ஒற்றுமையை நிலவ செய்யவேண்டும் .இறைவன் போதுமானவன் .

    ReplyDelete
  2. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தமகென்று இல்லாவிட்டாலும் முஸ்லிம் சமூகத்திற்காக இது போன்று வேறு எங்கும் நடைபெறாமல் தடுக்க இந்த சகோதரனின் வேண்டுகோளுக்கு ஒத்தழைக்கவும்

    ReplyDelete
  3. Be careful of taking legal action against it. It will affect most of muslim community badly. Think about it.

    ReplyDelete

Powered by Blogger.