Header Ads



ஜனாதிபதிக்கு எதிராக, யானைகளின் திட்டம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் தயாராகி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோல்வியடைய செய்து பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கையை உறுதி செய்ய முடிந்தால் ஐக்கிய தேசிய கட்சி இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி தரப்பில் அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் உள்ள முக்கிய கதாபாத்திரம் ஒன்று ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை தயாரித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

மைத்திரிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சட்டத்தரணிகள் சிலர், மஹிந்த தரப்பினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

தேசிய அரசாங்கத்திற்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமையால் கொழும்பு அரசியல் ஸ்திரமற்ற நிலையை அடைந்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளமையால் அரசியல் தளத்தில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

5 comments:

  1. இலங்கையில் நல்ல ஜோக் நடக்குது.அரசியல் அராஜகமாக மாறி அடுத்த கட்டமாக யா நப்சி என்னை காப்பாற்று என்ற நிலை உருவாகியுள்ளது.முஸ்லிம்களை கருவர்க்கும் சிந்தனை உள்ளத்தில் இருக்கும் வரை எந்த அரசாங்கத்துக்கும் எந்த அரசியல்வாதிக்கும் மனதில் நிம்மதியா அல்லாஹ் கொடுக்க மாட்டான்.இதுதான் உண்மை.

    ReplyDelete
  2. அதுதான் உண்மை. அதனை சகல மொழிகளிலும் சகல மக்கள் மத்தியிலும் கொண்டு செல்ல வேண்டும்.

    ReplyDelete
  3. தமிழக அரசினை கோமாளிக்கூட்டம் என்று கூறினார்கள் இப்போதுஇவர்கள் கோமாளிகளாகி விட்டார்கள்

    ReplyDelete
  4. தமிழக அரசினை கோமாளிக்கூட்டம் என்று கூறினார்கள் இப்போதுஇவர்கள் கோமாளிகளாகி விட்டார்கள்

    ReplyDelete
  5. IF no confidence motion against My3 will be brought by UNP, this will be the only thing that UNP has done good for the people of SL.

    ReplyDelete

Powered by Blogger.