April 25, 2018

திருமலை அபாயா சம்பவம், நம் கண்களைத் திறக்குமா..?

-சட்டத்தரணி YLS ஹமீட்-

தற்போதைய மிகவும் பிந்திய பேசுபொருள் திருமலை சண்முகா வித்தியாலய ‘அபாயாவுக்கெதிரான போராட்டம்’. இதை ஒரு தனிப்பட்ட சம்பவமாகவோ ( isolated incident) அல்லது வெறுமனே அபாயாவுக்கெதிரான போராட்டமாகவோ பார்ப்போமானால் நாம் சரியான தளத்தில் இருந்து பிரச்சினைகளை அடையாளம் காணத்தவறுகின்றோம்; என்பது பொருளாகும்.

கடந்த காலங்களில் தமிழ்ப் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் நீளக்காற்சட்டை, பர்தா போன்றவை அணிவதற்கெதிராக பிரச்சினைகள் கிளப்பப் பட்டிருக்கின்றன. முஸ்லிம் ஆசிரியர்களுக்கு ஜும்ஆவுக்கு செல்வதற்கு நேரம் வழங்குவது பிரச்சினைக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றது.

வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் காலத்தில் கையகப்படுத்தப்பட்ட பத்தாயிரம் ஏக்கரிற்கும் அதிகாமான முஸ்லீம்களின் காணிகள் இன்னும் தமிழ்த்தரப்பினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

தமிழ்த் தலைமைகள் இன்றுவரை இவைதொடர்பாக குரல் கொடுக்கவில்லை. தற்போதைய அபாயா விவகாரம் ஒரு நியாயமற்ற போராட்டம்; என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் தமிழ்த் தலைமைகள் மௌனம் காக்கின்றன.

பேரினவாதத்திற்கெதிராக தூக்கப்பட்ட ஆயுதங்கள் அப்பாவி முஸ்லிம்களுக்கெதிராக திருப்பப்பட்டன.  இவை அனைத்தையும் ஒரே தளத்திலிருந்து ஆராயத்தவறினால் நாம் பிரச்சினையின் ஆணிவேரை அடையாளம் காணத்தவறிவிடுவோம்.

இவை அனைத்துக்கும் பின்னால் இருப்பது முஸ்லிம்களுக்கெதிரான தமிழ் இனவாத உணர்வாகும். இது முஸ்லிம்களுக்கெதிரான சிங்களப் பேரினவாதத்திற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல என்பது மாத்திரமல்ல; அதைவிடவும் ஒரு படி மேலானது; என்றால்கூட தவறில்லை. இந்த இனவாத உணர்வினை முஸ்லிம்கள் அன்று உணர்ந்ததன் விளைவுதான் அவர்கள் தங்களை தனியான சமூகமாக அடையாளம் காணத்தூண்டியது.

அண்மையில் அறிவிப்பாளர் B H அப்துல் ஹமீட் “ தான் முதலாவது ஒரு தமிழன் அதன் பின்புதான் முஸ்லிம்” என்று கூறியதாக ஒரு கூற்று சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்கள் இனத்தால் நாம் தமிழர்களா? என்ற ஒரு வாதப்பிரதிவாதத்தை தோற்றுவித்திருந்தது.

கலிமாச்சொன்ன ஒருவன் முதலாவது முஸ்லிம். இரண்டாவதுதான் அவன் அறபியா? பாரசீகனா? இந்தியனா? பாகிஸ்தானியா? என்பதெல்லாம். இதன் மாற்றொழுங்கு கலிமாவைப் பின்தள்ளுவதாக அமைந்துவிடும். இஸ்லாமிய அடிப்படை அறிவுத் தட்டுப்பாட்டின் காரணமாக சிலருக்கு இது புரிவதில்லை.

தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பாலும் இனத்தால் தங்களை தமிழர்களாகவே அடையாளம் காணுகின்றார்கள். அந்த அடிப்படையில்தான் அன்றைய இந்திய இணை அமைச்சர்களான சிதம்பரம் பண்டாரி போன்றவர்கள் இலங்கை முஸ்லிம்களையும் ஒரு தனித்துவ சமூகமாக அடையாளம்காண மறுத்தார்கள்.

தமிழ்நாட்டு முஸ்லிம்களைப்போல் இலங்கை முஸ்லிம்களும் இனரீதியாக தங்களை “ தமிழர்கள்” என்று அடையாளம் காண்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. தந்தை வழியில் நம்மை சோனகர் என்று அடையாளம் காணமுடியுமென்றால் ( போத்துக்கீசர் அவ்வாறு அழைத்தபோதிலும்) தாய்வழியில் தமிழர் என்றழைப்பதில் தவறேதுமில்லை. ஆனாலும் எங்களுக்கென்று எம்மார்க்கத்தின் அடிப்படையிலான கலாச்சார, வாழ்வியல் மற்றும் நடைமுறைகளில் தனித்துவமுண்டு. அந்த தனித்துவத்தை “ தமிழினம்” ஒன்ற பொதுமை சொற்பதத்திற்குள் தொலைத்துவிட முடியாது.

அன்று அந்தத் தனித்துவம் விலைபேசப்பட்ட வலாறுதான் முஸ்லிகளை “ தமிழன்” என்ற பொதுமை அடையாளத்தில் இருந்து பிரித்து “ முஸ்லிம்” என்ற தனித்துவ அடையாளத்திற்கான முத்திரையை குத்தவைத்தது.

அன்று “ தமிழன்” என்ற பொதுப்பதத்திற்குள் அழிக்க முடியாமல்போன முஸ்லிம்களின் தனித்துவத்தின்மேல் உள்ள வெறுப்பு நீறுபூத்த நெருப்பாக இருந்துவந்ததே தவிர அணைந்துவிடவில்லை.

19 கருத்துரைகள்:

பாடசாலைக்குச்சென்று இவ்வாறு உத்தரவிட வேண்டாம் என்றும் தமது மனைவியரான ஆசிரியைகள் அபாயா அணிந்தே வருவர் என அதிபரிடம் எடுத்துரைத்த கணவன்மாரை பாராட்டுகிறோம். மனைவி கடைவிரித்து இடுப்பை காட்டுவதை பார்த்துக்கொண்டிருக்கும் போக்கற்ற கணவன்மார் மத்தியில் இவர்களின் செயற்பாடு பாராட்டுக்குரியதாகும்.

ஒரு மொழி தான் தேசியத்தை தீர்மானிக்கும். இதனை முஸ்லீம் நாடுகள் உள்ளனவே அவர்களை ஒரே தேசமாக குறைந்தது இரு தேசங்களையாவது ஒரு நாடாக்கி பாருங்களேன். அவர்கள் முஸ்லீம் பக்கம் போவார்களா அல்லது மொழியின் பால் போவார்களா என்று இவளவு ஏன் பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷ் பிரிந்தது ஏன்? ஒன்றாக இருக்க வேண்டியது தானே. இலங்கையிலும் முஸ்லிம்கள் என ஒரு தேசியஸியம் அல்ல. முதலில் தேசத்துக்கான வரைவிலக்கணத்தை தெரிந்து கொள்ளுங்கள். தனித்துவமான மொழி,தொடர்ச்சியான நிலம் இவை யாவும் அற்று சும்மா இல்லாத ஒன்றை தேடுவது நியாயமற்றது. தமிழ் தேசியதோடு போர் புரிய முப்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் சிந்தித்து பாருங்கள் முஸ்லீம் தேசியம் என்பது போராக மாறினால் ஓரிரு நாட்களில் விழுங்கப்டுவிடும். தமிழர்களுடன் இணைந்து பயணிப்தே சால சிறந்தது. முஸ்லீம் தேசியத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியவர்கள் மலே இனத்தவர்களே அதுவும் அவர்களுடைய சுய லாபத்துக்காக.

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிபந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
(அல்குர்ஆன் : 3:186)
www.tamililquran.com

100% இனவாத கட்டுரை

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக பயணிக்காத வரை சிங்கள பேரினவாதத்தின் கோரப்பிடிக்குள் இரு இனமும் சிக்கி தவிக்கும், தன்மானம் இழந்து, தமது உரிமைகளை இழக்க நேரிடும். இரு இனமும் சிந்தித்து செயட்பட வேண்டும் என்பது எமது தாழ்மையான கருத்தாகும்.

ungalathu thai mozli ethu????????

Why Abdul Hameed calls himself Tamil first and Muslim second is for business reasons. His income depends on diaspora Tamils. What he had been doing these days are compering the stage shows of South Indian celebrities organised by Sri Lankan Tamil diasporas in European, Mideast and North American countries.

Mr. Anusath,

தனி நாடுகளாக அவை பிரிந்தத அவை ஒரே மொழி பேசுபவைதான்.. ஆக மொழியும் அல்ல தனி தேசியம்.. கலாச்சாரம், பன்பாடு என்று பல.. எதையும் வரையறுக்க முடியாது..
மக்கள் நலனே முக்கியம்.. இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் தனி தேசிய இணமாகவே இருந்து வந்துள்ளார்கள், எங்களோடு கலந்துவிடு தேவையானதை போடுகிறோம் பொறுக்கிக்கொள் என்பதல்ல ஒற்றுமை.. வேறுபாடுகளை ஏற்று கூடி வாழ்வதே

@ Kuruvi,

ஒற்றுமை என்பது எல்லோரோடும் இருக்க வேண்டும், தமிழர்களும், முஸ்லிம்களும், சிங்களவர்களும்..
பிரித்தாள நினைப்பவர்களை மக்கள் இணம்கான வேண்டும்.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல.. இப்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்துத்துவா கும்பலை மக்கள் விரட்ட வேண்டும்.. சிவசேனா, ஆர்.எஸ்.எஸ் போன்ற கிருமிகளை

Habaya problem amicably to be solved . Unity co existences Muslims and Tamil community is paramount importance today as we minorities not given their due place by all Singhala political parties
Our unity only will determine future

உண்மையில் இது ஓர் இனவாதக் கட்டுரை. அதாவது இனத்தின் உரிமையை வாதிக்கின்ற கட்டுரை. மாறாக இது இனத் துவேஷக் கட்டுரை அல்ல. தமிழ் நாட்டில் 'தமிழர்கள்' என்ற பொதுமை காணப்படுவது போல் இங்கு இல்லாதிருப்பதற்குரிய முழுப் பொறுப்பும் அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பொதுப்படையாக எல்லாத் துறைகளிலும் தமிழர் எனப்படுவோரிடம் காணப்பட்ட மாற்றாந் தாய் மனப்பான்மையும்¸ செயற்பாடுகளும் தான் பிரதான காரணம். சேர்ந்து அல்லது சேர்த்து வாழும் மனோநிலை இருந்ததில்லை என்பதே உண்மை. தங்களுக்குள் ஆயிரமாகப் பிரிந்து வாழ்ந்தது போன்று மொழியால் ஒன்றுபட்டிருந்தும் சமய நம்பிக்கையைக் கொண்டு முஸ்லிம்களை பிரித்தே பார்த்தார்கள். இறுக்கமான சமய வரையறைகள் மீதுள்ள மனமொத்த ஏற்றுக்கொள்ளுகை காரணமாக 'ஐயோ¸ ஆளைவிட்டால் காணும்" என்று முஸ்லிம்கள் பிரிந்தே நிற்கின்றார்கள். இதற்கான வரலாற்றுச் சம்பவங்கள் ஏராளம். ஏராளம்.(அருமை பெருமையாக நல்லெண்ணம் கொண்ட தலைவர்களும் தனியாட்களும் இருந்திருக்கின்றார்கள். இருக்கின்றார்கள்). தம்பி¸ வரைவிலக்கணம் ஒன்றும் எமக்குத் தேவையில்லை. நல்லெண்ணம் மட்டுமே தேவை. இது கிடைக்காத போது ஒரே மொழிக் குழுமம் என்றாலும் தனிவழி செல்வது மட்டுமே தீர்வு என்றாகிவிட்டது. நீண்டகால வரலாற்றின் ஆழ்ந்த கறைகளை இலகுவில் போக்குவது கடினம்.

முதலில் நான் தமிழன். அதன்பின்தான் முஸ்லீம் என்றாராம் அப்துல் ஹமீது.

இப்படிப்பட்ட கோடாரிக் காம்புகளும் அங்கொன்றும் இங்கொன்றாக நமது சமூகத்தில் இருக்குதுகள்.

சில வருடங்களுக்கு முன், தமிழ்ப் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரும் இப்படிச் சொன்னதாக என் நினைவு.

முதலில் நான் தமிழன், அதன்பின்தான் நான் ஒரு கிறிஸ்தவன் என்று.

இதை கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான சிங்களக் கிறிஸ்தவப் பாதிரியார், இயேசுவைவிட தமிழன்தான் அவருக்குப் பெரிதாக இருக்கிறது என்று அவரை நக்கல் அடித்து கண்டித்து பேசி இருக்கிறார்.

எதிரியை நம்பினாலும் துரோகியை நம்பக்கூடாது இருந்தும் கூட உங்களை நம்பினோம் ஏன் என்றால் நீங்களும் எங்கள் மொழியை பேசுவதால் .
இப்போது நடக்கும் பிரச்சனைக்கும் நீங்கள்தான் காரணம் வேறு யாரும் இல்லை அத்துடன் உங்களின் தொப்பி பிரட்டி புத்தியை மாற்றுங்கள் எதிர்காலத்திலாவது
இது எங்களின் நன்மைக்காக இல்லை உங்களின் நன்மைக்காகவே மாறவிட்டால் உங்களை காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள் இது எமக்காக இல்லை உங்களுக்காகவே சொல்லுகின்றோம் நினைவில் கொள்ளவும்

தந்தை செல்வாகூட, முஸ்லிம்களை தொப்பி பிரட்டி என்று சொன்னவர்தானே!

தேவைப்படும்போது, இஸ்லாமியத் தமிழன் என்று அணைப்பதும், காரியம் முடிந்த பிற்பாடு - நீ தமிழன் இல்லை, தொப்பி பிரட்டி என்று வசைபாடுவதும் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

முஸ்லிம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழர்களையோ அவர்களின் இனத்தையோ சாடியதில்லை.

முஸ்லீம் அரசியல்வாதிகள்கூட அப்படி நடந்து கொண்டது இல்லை.

இந்துக்களின் கலாசார வாழ்வு முறைக்கு எந்தவிதத்திலும் முஸ்லிம்கள் குந்தகம் விழைத்தார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அதேபோல், நமது கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளித்தால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

This comment has been removed by the author.

@Sampanthan TNA
முஸ்லிம்கள் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொன்னால் காரி உன் முஞ்சியிலேயே துப்புவேன். சத்துருக்கொண்டான் படுகொலையில் உங்களுடைய வகிபாகம். காத்தான்குடி மற்றும் சம்மாந்துறைகளில் நிகழ்ந்த படுகொலைகளுக்கும் இன சுத்திகரிப்பிட்கும் முஸ்லிம்மலின் பங்கு. தமிழர்களை மொழியை பயன்படுத்தி ரகசியங்களை மற்றும் உளவு பார்த்தது. நில அபகரிப்பு , அரசியல் அடாவடித்தனம் கள்ள காணியில் பள்ளிவாசல் பெரும்பணயித்தவருடன் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக ஸ்ருதி பாடுதல். சொல்ல போனால் என்பதை மூன்று கலவரத்தில் அரைவாசி தமிழர்கள கொல்ல காரணமாக இருந்தவர்கள் இந்த முஸ்லிம்கள்தான். உங்களை தொப்பி பிரட்டி அல்ல அதைவிட கேவலமான வார்த்தையால் திட்டினாலும் நீங்கள் செய்த பாவம் அழியாது. கள்ள காணியில் பள்ளிவாசல் கட்டி அங்கே ஒரு நாளைக்கு ஐந்து அல்ல பாத்து முறை ஓதினாலும் இறைவன் காதுக்கு கேட்காது. இனியாவது மதத்தின் பேரில் அராஜகம் செய்யாமல் நல்ல மனிசனாகத்தான் வள முடிய விட்டாலும் ஒரு மிருகமாகசரி வாழ்ந்து விட்டு போங்கள்

உங்களின் தமிழ்ப் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் எல்லாம் நாம் சிறிதும் மறந்து விடவில்லை.

உங்களை போன்ற இந்திய நாய்களின் எச்சங்களுக்கு முன்னும் பின்னால் சென்று, இலங்கைத் தமிழனை அழித்தது போதாதென்று, இந்துத் பயங்கரவாதத்தையும் இங்கே முளைக்கச் செய்வதற்கு கனவு காணாதே!

தமிழ் நாட்டுத் தமிழனையே இந்திய அரசு, சாதி குறைவாகப் பார்க்கும் இந்த இலட்சணத்தில், இலங்கைத் தமிழன் ஒரு கொசுவிற்கும் பெறுமதி இல்லை அவர்களிடத்தில்.

இந்தியக் காவிகளின் பின்னால் சென்றால், முழுத் தமிழனுக்கும் அழிவுதான்.!

@Sampanthan Tna,
தமிழர் என்பது தேசிய இனம் அதில் கிறிஸ்தவம் இஸ்லாம் சைவம் மற்றும் என்னை போன்ற சமய நமபிக்கை அற்றவர்களும் இருக்கிறார்கள். பல்வகைமை கொண்டது தான் தேசியம். முஸ்லீம் என்பது இனவாதம் இஸ்லாமியர்கள் மட்டுமே இருப்பார்கள் பிற இனத்திலே சமயத்தை வேறுபடுத்தி பார்ப்பார்கள் அவர்களுடைய கண்ணுக்குத்தான் யார் யார் என்ன சமயம் என்ற அடிப்படைவாத சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும். நான் சத்தியமாக ஒரு நாத்திகன் அனாலும் தமிழன் என்பதில் பெருமை கொள்பவன். நீங்கள் இல்லாத ஒன்றை இருக்கு என்ன கிறிக்கொண்டிருக்கும் இனத்திலே நாத்திகன் என கூற எவனுக்கு தைரியம் உள்ளது.

Post a Comment