Header Ads



கண்டி வன்முறை நடந்த பகுதிகளில், இராணுவம் சுத்திகரிப்பு பணி

கண்டியில் அண்மையில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவத்தினர் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இராணுவத்தைச் சேர்ந்த 150 படை சிப்பாய்கள் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை இந்த சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன தலைமையில் கண்டி மற்றும் குருணாகல் நகர பிரதேசத்தில் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பணிப்புரைக்கமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியினால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 28ஆம் திகதி திகன, கேகாலை வீதி இரு பக்கங்களிலும் படையினர் குண்டசாலை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

திகன, அகுரன, கலகா, கடுகஸ்தொட,மெனிக்கின்ன, அம்பதென்ன, பூஜாபிடிய போன்ற பிரதேசங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

4 comments:

  1. it is heart breaking and unfathomable to see how a very few racists only in hundreds can cause this much destruction for days while we have the best security forces in the world who crushed the LTTE, and now doing the cleaning job. what a pity ?

    ReplyDelete
  2. கூடி நின்று தீவைத்து விட்டு இப்போது அனுதாபம் தேடுகின்றனர். உண்மையான மக்களாக இருந்தால் அவர்கள் விட்டுச்சென்ற தடயங்களை அழிக்காதீர்கள்

    ReplyDelete
  3. Do not believe the Sri lanka Armies or STF they are the main front liner to protect the Sinhala mob attack.

    ReplyDelete
  4. Cunning deception. So army couldn't prevent the destruction?
    They were more than capable. They sat back, relaxed and watched. Now trying to be good guys to the media.

    ReplyDelete

Powered by Blogger.