Header Ads



"அபாயாவுக்கு தடை" அதிபரின் தவறா..? பாடசாலையின் தவறா..??


திருகோணமலை சன்முகா கல்லூரி நிரவாகத்தின் ஹபாயா தடையை அடுத்து தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் முகநூல் கருத்து முரன்பாடுகள் அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது. 

அதுவும் பெண்களுக்கு ஆடை அணிவிக்கவும்  அணிந்த ஆடையை களையவும் முகநூளில் போராட்டம். 

இலங்கையில் ஹபாயாவுக்கு தடைவிதித்த ஒரே பாடசாலை திருகோணமலை சன்முகா ஹிந்து கல்லூரி மாத்திரம் அல்ல. 

கொழும்பு றோயல் கல்லூரிக்கு எந்த ஆசிரியராவது, ஹபாயா அணிந்து செல்ல முடிமா ? 

ஏன் விஷாகா மகளிர் கல்லூரி ?

Buddhist Ladis College ?

Holly family convent ?

இது போன்ற நூற்றுக்கணக்கான பாடசாலைகள் இலங்கையில் ஹபாயாவுக்கு தடை விதித்துத் தான் இருக்கின்றது.  

இப்பாடசாலைகளுக்கு எதிராக எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் தனிநபர்களும் ஆரப்பாடம் நடத்தவும் இல்லை முகநூளில் போர் கொடி தூக்கவும் இல்லை. 

ஏன் என்றால் அப்பாடசாலைகள் அவ்விடயத்தை அனுகிய விதமும்  நிர்வாக முறைமை மற்றும் யுக்திகளை கையாண்ட விதமும் தான். 

திருகோணமலை ஹிந்து மகளிர் இலங்கை யின் சிறந்த பாடசாலை விருதை மூன்று முறை பெற்றுக் கொண்ட ஒரு பாடசாலை. 

தொடர்ந்தும் சிறந்த பேறுபேறுகளை தேசிய மட்டத்தில் தனதாக்கி வரும் பாடசாலை 

சன்முகா கல்லூரியின் இயற்கை அலகு , வகுப்பறைகளின்  நேர்த்தி,  5S  நிர்வாக கட்டமைப்பு மாணவிகளின் ஒழுக்கவியல் மிகவும் போற்றத்தக்கது. சன்முகாவின் இந்த வளர்ச்சியில் அதிபர் சுலோச்சனா ஜெயபாலன் அவரது நிரவாக திறமை போற்றத்தக்கது. 

ஆனால் இவ்வளவு ஆற்றல்களை தன் அகத்தே கொண்ட அதிபர் ஜெயபாலன் தனது பாடசாலையின் தனித்துவத்தை பாதுகாக்க கையான்ட முறை அதிபரின் ஒட்டு மொத்த ஆழுமையையும் கேள்விக் குறியாக்கியது. 

திருகோணமலை சன்முகாவின் இந்த சம்பவத்தினை நான் கேள்வியுற்றதும் என்னால் நம்ப முடியாது இருந்தது. ஏன் என்றால் திருகோணமலை சன்முகாவுக்கு நான் பல முறை சென்றிருக்கிறேன். 

எனது ஒரு சில நன்பர்களும், நானும் இனைந்து பல முஸ்லிம் பாடசாலைளின் அதிபர்களை சன்முகா கல்லூரிக்கு  அலைத்துச் சென்று அவர்களது நிர்வாக திரன் பாடசாலை கட்டமைப்பு போன்றவற்றை ஒரு exposure visit ,ஊடாக lesson learn session களை ஏற்படுத்தி கொடுத்திருந்தோம். 

இந்த பாடாலை அதிபர் தனது சமூக பாரம்பரியத்தை கையான்ட விதம் அவரா இப்படி செயற் பட்டார்? அல்லது அதிபரையும் மீரிய வெளிச் சக்திகள் இந்த விடயத்தை அனுக முனைந்தா  என்ற கேள்வி  எனது உள்ளத்தில் எழுகின்றது.  
பாடசாலையின் தனித்துவத்தை பாதுகாக்க ஹபாயா ஒரு தடையாக இருக்கிறது என்று கருதியிருந்தால் அதனை நிர்வாக கட்டமைப்பின் ஊடாகவே மேற்கொண்டு இருக்க முடியும். இது ஒரு தேசிய பாடசாலை இப்பிரச்சினையை இன்னும் இலகுவாகவே தீர்வு கண்டு இருக்கவும் முடியும். இந்த நிர்வாக செயற்பாடுகளை  நான் மதிக்கும்  அதிபர் ஜேயபாலன் அவர்களும் அரியாது அல்ல. 

-யு.எச். ஹைதர் அலி-

7 comments:


  1. Racism in schools hurts both individuals and the learning and working environment. It generates tensions that distort cultural understanding and narrow the educational experiences of all students. It affects: • Educational outcomes • Individual happiness and self-confidence • School climate • Cultural identity • School-community relations • Student behaviors.


    Suppose two sisters who are twins, and who are equally beautiful, walk down the street. One of them is attired in the Islamic hijab i.e. the complete body is covered, except for the face and the hands up to the wrists. The other sister is wearing western clothes, a mini skirt or shorts. Just around the corner there is a hooligan or ruffian who is waiting for a catch, to tease a girl. Whom will he tease? The girl wearing the Islamic Hijab or the girl wearing the skirt or the mini? Naturally he will tease the girl wearing the skirt or the mini. Such dresses are an indirect invitation to the opposite sex for teasing and molestation. The Qur’an rightly says that hijab prevents women from being molested.

    ReplyDelete
  2. அப்படியானால் என்ன நடந்தது வெளியில் யாரும் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனவா

    ReplyDelete
  3. யு எச் ஹைதர் அலி அவர்களே, நீங்கள் பிழையான உதாரணத்தை முன் வைத்துள்ளீர்கள். அந்த பிழையான உதாரணத்தை முன்னிறுத்தி தங்களது உரிமைக்காக போராடும் நபரையோ அல்லது சமூகத்தையோ கேள்விக்குட்படுத்துவது அறிவுசார்ந்த விடயமாக இருக்காது. இந்த நாட்டின் சட்டம், தனிமனித உரிமை இவை இரண்டும் மிகத்தெளிவாக உள்ளது. அந்த உரிமை மறுக்கப்பட்டால் அதட்காக போராடலாம். நீதி மற்றம் போகலாம். அப்படி போராடுபவருக்கு ஆதரவாக முஸ்லீம் சமூகம் நிட்சயம் பின்னால் நிட்கும். ஹிட்லர் நல்ல போர்வீரன் என்று உங்களால் கூற முடியுமா? அவனது வெற்றிகளை வைத்துக்கொண்டு...!!. இந்த பதிவின் நோக்கம் தான் என்ன? அதாவது அந்த பாடசாலையில் நீங்கள் அதிபராக இருந்திருந்தால் அந்த முஸ்லீம் ஆசிரியைகளுக்கு காதும் காதும் வைத்தால் போல் இடமாற்றம் செய்திருப்பீர்களா??? அப்போ மத உரிமை, தனி மனித உரிமை என்ற விடயம் எல்லாம் என்ன?? ஒருவரை அவரை தெரியாமல் ஏமாற்றலாம் என்கிறீர்களா?? சமூக உணர்வு, மார்க்க உணர்வு என்பது இதுதானா?? உங்களது அகராதியில் நேர்மை, மனித நேயம் என்பவைகளின் அர்த்தங்கள் தான் என்ன?
    சற்று சிந்தியுங்கள்.....!!! இந்த நாட்டில் உள்ள அடிப்படை பிரச்சினையே உங்களை போன்றவர்களின் நேர்மையற்ற சிந்தனைதான். கல்விக்காக மதம் மாறி படித்தவர்கள் தான் இந்த நாட்டின் தலைவர்களாக இருந்துள்ளார்கள் ( J.R, SWRD..etc). இதையெல்லாம் காரணம் காட்டி இந்து மதத்துக்கு மாற சொல்வீர்களா??? மடத்தனம்.

    ReplyDelete
  4. யு எச் ஹைதர் அலி அவர்களே, நீங்கள் பிழையான உதாரணத்தை முன் வைத்துள்ளீர்கள். அந்த பிழையான உதாரணத்தை முன்னிறுத்தி தங்களது உரிமைக்காக போராடும் நபரையோ அல்லது சமூகத்தையோ கேள்விக்குட்படுத்துவது அறிவுசார்ந்த விடயமாக இருக்காது. இந்த நாட்டின் சட்டம், தனிமனித உரிமை இவை இரண்டும் மிகத்தெளிவாக உள்ளது. அந்த உரிமை மறுக்கப்பட்டால் அதட்காக போராடலாம். நீதி மற்றம் போகலாம். அப்படி போராடுபவருக்கு ஆதரவாக முஸ்லீம் சமூகம் நிட்சயம் பின்னால் நிட்கும். ஹிட்லர் நல்ல போர்வீரன் என்று உங்களால் கூற முடியுமா? அவனது வெற்றிகளை வைத்துக்கொண்டு...!!. இந்த பதிவின் நோக்கம் தான் என்ன? அதாவது அந்த பாடசாலையில் நீங்கள் அதிபராக இருந்திருந்தால் அந்த முஸ்லீம் ஆசிரியைகளுக்கு காதும் காதும் வைத்தால் போல் இடமாற்றம் செய்திருப்பீர்களா??? அப்போ மத உரிமை, தனி மனித உரிமை என்ற விடயம் எல்லாம் என்ன?? ஒருவரை அவரை தெரியாமல் ஏமாற்றலாம் என்கிறீர்களா?? சமூக உணர்வு, மார்க்க உணர்வு என்பது இதுதானா?? உங்களது அகராதியில் நேர்மை, மனித நேயம் என்பவைகளின் அர்த்தங்கள் தான் என்ன?
    சற்று சிந்தியுங்கள்.....!!! இந்த நாட்டில் உள்ள அடிப்படை பிரச்சினையே உங்களை போன்றவர்களின் நேர்மையற்ற சிந்தனைதான். கல்விக்காக மதம் மாறி படித்தவர்கள் தான் இந்த நாட்டின் தலைவர்களாக இருந்துள்ளார்கள் ( J.R, SWRD..etc). இதையெல்லாம் காரணம் காட்டி இந்து மதத்துக்கு மாற சொல்வீர்களா??? மடத்தனம்.

    ReplyDelete
  5. இந்த தலைப்புக்கான விடையை வடமாகாண உறுப்பினராக தவறிவிழுந்த தறுதலை ஐயூப் அஸ்மின் என்ற தமிழ் டயஸ் போறாவின் பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டவரிடம் கேட்டுருக்கலாம்.

    ReplyDelete
  6. @Kuruvi, உங்கள் comments தவறானது. கட்டுரை சுப்பர்.

    ஏன் மேற்குறிப்பிட்ட பௌத்த பாடசாலைகளுக்கு எதிராக போராடவில்லை? பயம்

    ReplyDelete
  7. Buddhist Ladies collegeஇல் தலையை மறைத்து தான் முஸ்லீம் மாணவிகள் கல்வி கற்கிறார்கள்(google it). தனி பெண்களாகவே இருப்பதென்றால் அதுவும் தேவை இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.