Header Ads



என்னை கொலை செய்தாலும், ஆசிபா வழக்கில் இருந்து பின்வாங்க போவதில்லை - வழக்கறிஞர் தீபிகா ஆவேசம்

காஷ்மீர் மாநிலத்தில் ஆசிஃபா என்ற 8 வயது சிறுமி காமுகர்கள் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலையும் செய்யப்பட்டார். இந்த குற்றத்தை செய்தவர்களில் போலீஸ் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் அடங்குவர் என்பதும் இவர்களை காப்பாற்ற ஆட்சியில் இருப்பவர்களே முயற்சி செய்கின்றனர் என்பதும் வருத்தத்திற்குரிய செய்தியாக உள்ளது.

இந்த நிலையில் ஆசிஃபா வழக்கில் இளம்பெண் செல்வி தீபிகாசிங் ராஜ்வத் என்பவர் வாதாடுகிறார். ஆனால் வழக்கறிஞர்களின் ஒரு பிரிவினரே இவர் இந்த வழக்கில் ஆஜராக கூடாது என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் தடுப்பதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்ந்து தீபிகாவிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையிலும் இவர் துணிச்சலாக ஆசஃபா வழக்கில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்காமல் விடமாட்டேன்' என்று கூறியுள்ளார்.

என்னை கொலையே செய்தாலும் இந்த வழக்கில் வாதாடியே தீருவேன் என்று துணிச்சலுடன் போராடும் தீபிகாவுக்கு சமூக இணையதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

2 comments:

  1. Well don sister
    Keep it up

    ReplyDelete
  2. BE SAFE. May Allah give you protection and blessings...

    ReplyDelete

Powered by Blogger.