Header Ads



சுபுஹூ தொழச்சென்ற போது, பலஸ்தீன் அறிவியலாளர் கொலை - மொசாட் மீது சந்தேகம்

பலஸ்தீன அறிவியலாளர் கலாநிதி பாதி அல் பத்ஷ் கோலாலம்பூரில் இனந்தெரியா நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது கொலைக்கு, இஸ்ரேலிய மொசாத் தான் காரணம் என்று அவரது குடும்பம் குற்றம் சாட்டியுள்ளது.

அவர் தமது உறுப்பினர் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.

இலக்ரிகள், இலக்ட்ரோனிக் எஞ்சினியரிங் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர் அல்குர்ஆனை மனனம் செய்து மஸ்ஜிதில் இமாமாகவும் இருந்துள்ளார். கண்டுபிடிப்புகளுக்காக பல பரிசில்களைப் பெற்றுள்ளார். பல்கலைக் கழக விரிவுரையாளராகவும் கடமையாற்றுகின்றார்.

கொலை நடந்த பின் மலேசியப் போலீசார் நடந்து கொண்ட விதம் குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

35 வயதான பாதி மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

சிறந்த அரபு ஆய்வாளர் என்ற புலமைப்பரிசில் மலேசிய திறைசேரியால் இவருக்கு கிடைத்தது.

பஜ்ர் தொழுகைக்கு இமாமத் செய்ய சென்ற வேளையில் இருபதுக்கும் அதிகமான ரவைகளால் இவர் சுடப்பட்டுள்ளார்.

சக்தி வளம் குறித்த சர்வதேச மாநாடு ஒன்றுக்கு தலைமை தாங்க அவர் நாளை -22- துருக்கிக்கு பயணமாக தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இப்படியான அறிவியல் வளங்கள் தமக்கு ஆபத்து என்று அறிந்த சியோனிச மொசாட்டின் சன்னங்கள் அவரை சுவர்கத்துக்கு அனுப்பி விட்டன.

رحمك الله يا شهيد العلم المقاوم
رحمه الله وغفر له وتقبله عنده في الشهداء والصالحين وحسن أولئك رفيقا..

Mah Jabeen


No comments

Powered by Blogger.