Header Ads



நமது அடையாளங்களை, இனம்காணுகிற நேரம்


திருமண வீடுகளில் தற்போது உள்ள ட்ரெண்ட் ,இந்திப்படங்களில் வருகிற ஆடைகளை ,அதை அணிகிற கதா நாயகர்களை 'காப்பி' பண்ணுவது என்பது சமீப  கால திருமண வீடுகளுக்கு சென்றவர்களுக்கு தெரியும் . 

பத்து வருடங்கள் பின்னோக்கி இதே கல்யாண வீடுகளுக்கு சென்றால் கிருஸ்தவ ஆலயங்களில் முழங்காலில் நின்று நெஞ்சில் நொண்டிக்கோடு விளையாடுவதை தவிர அனைத்து சம்பிரதாயங்களும் செய்யப்பட்டன . வெள்ளை வெளீரென கண்ணாடி ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுகள், கோர்ட்டும் சூட்டுமாக மாப்பிளை  , மோதிரம் மைமாறுதல் , கையை பிடித்து மாமனார் அழைத்து வருதல் என்று தொடரும் அந்த பட்டியல் ..

நாம் ஏனைய சமூகங்களை விட சிறப்பான  , மேலான சமூகமாக அல்லாஹ்வால் படைக்கப்பட்ட போதும் நமக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையால் பிற சமூகங்களை காப்பி அடித்துக்கொண்டு இருக்கிறோம் ?.

பிறந்த நாளைக்கு கேக்கு வெட்டுவது தொடங்கி வேலண்டைன்ஸ் டே கொண்டாடுவது , வெடிங் அனிவேசரி கோலாகலமாக நடத்துவது , திருமண வீடுகளில் ரிசெப்ஷன் நடத்துவது ,
கிருஸ்மஸ்ஸுக்கு மரம் நாட்டுவது என்று 'காப்பி' கல்ச்சர்களை அடுக்கிக்கொண்டே போகலாம் .
பிறரை பின்பற்றி வருகின்ற நாம் எப்போது திருந்த போகிறோம். .?

சண்முகாவில் சேலை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை, நம்மை விழித்தெழ வைக்க வேண்டும் . நமது அடையாளங்களை நாமே தேட வைக்க வேண்டும் .

நனறாக ஞாபகம் இருக்கிறது .

கணவனை இழந்த பெண் வெள்ளைப்பிடவை கட்டுவதும் திருமணத்தில் தாலி கட்டுவதும் ,சாமத்தி வீடுகளில் வைபவங்கள் நடத்துவதும் நாள் பார்த்து நல்லது செய்வதும் 90 க்கு முன்னர்  இந்துக்களை  அண்டி வாழ்ந்த யாழ்ப்பாண முஸ்லீம்களிடம் இருந்து வந்த வழக்கம் ஆனால் இன்றோ அவை அடையாளம் தெரியாமல் மறைந்து விட்டன . 

தொடர்ச்சியான அடக்கு முறைக்கு உள்ளான ஓரு சமூகம் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கப்படும்  தாழ்வு மனப்பான்மையானது  பிற சமூகங்களின் பழக்க வழக்கங்களை காப்பி பண்ண வைக்கும் ...

நாம் அடையாளத்தை தொலைத்த சமூகமா ? தாழ்வு மனப்பன்மைக்கு உள்ளாகிய  சமூகமா ?

விழித்தெழ வேண்டிய தருணம் இது ..

ராஜி 

No comments

Powered by Blogger.