April 10, 2018

"ஒரு முஸ்லிமின் நன்கொடை - கண்டியின் அடையாளமாகவும், உலக மரபுக் கட்டிடமாகவும் மாறி இருக்கின்றது"


-Mufizal Aboobucker-

இத்தேசம் எமக்கு ஏன் இவ்வாறு  செய்து கொண்டிருக்கின்றது?....  என்று  நாம் ஏங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இத்தேசத்திற்கு எம்முன்னோர் எவ்வாறான சேவைகளைச் செய்து தம்மையும் தம் சமுகத்தையும் பாதுகாத்திருக்கின்றார்கள் என்பதற்கு இப்பதிவு   சிறந்த உதாரணம்.

KANDY  இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான நகரம் ,  உலகில் உள்ள  மரபுரீதியான நகரங்களில் கண்டி நகரும் உள்ளடக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டு வருகின்றது. ......... தூர பிரதேசங்ககளில் இருந்து கண்டிக்கு  வரும்  எல்லோருக்கும் தெரிந்த ஒன்று "கண்டி முஸ்லிம் ஹோட்டல்" ஆனால் அதற்கு முன்னால் வானுயர உயர்ந்து இருக்கும் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையேயான தொடர்பு .... பற்றி  எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்..

இம்மணிக்கூட்டுக்கோபுரம் ஹாஜி முஹம்மது  இஸ்மாயில் அவர்களால்  1947. August 14 ல் இவ் உலகை விட்டுப்பிரிந்த  "MOHAMED ZACKY ISMAIL "என்ற தனது அன்பு மகனின் நினைவாக , 23 December 1950ல் கண்டி மா நகர மக்களுக்காக அன்பளிப்புச் செய்யப்பட்டது, இதன் திறப்பு விழாவுக்கு அன்றைய இலங்கையின் முதல்  பிரதம மந்திரி Hon. DS SENANAYAKE  அவர்கள்வருகை தந்துள்ளார்..

இலங்கை  சுதந்திரம் அடைந்து  இரண்டு வருடங்களுக்குள் இவ்வாறான ஒரு பாரிய பணியை ஒரு முஸ்லிம் தனவந்தர் செய்திருப்பது இந் நாட்டின் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் எந்தளவு நெருக்கமாக இருந்துள்ளார்கள் என்பதற்கான  ஆதாரங்களில் ஒன்றாகும். அதனை அன்றைய. விழாவில் பிரதமரும் இதனைச் சுட்டிக் காட்டியதாகவும் கூறப்படுகின்றது. 

அன்று  ஹாஜி முஹம்மது இஸ்மாயில் அவர்கள்  செய்த சேவை இன்று முழு முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல, முழு நாடும் பெருமைப்படும் விடயமாகவும்,  கண்டி நகரின் மரபு அடையாளமாகவும மாறி இருக்கின்றது. பௌத்தர்களின் இதயமாக்க் கருதப்படும் தலதா மாளிகையில் இருந்து சுமார் 200 M தூரத்தில் இருக்கும் இந்த  Clock tower,  கண்டி நகரின் வர்த்தகத்திலும் , வாழ்வியலிலும் முஸ்லிம்கள் பலமான நிலையில் இருந்திருக்கின்றார்கள் என்பதற்கான ஒரு வரலாற்றுச் சான்றாகும். 

இக் கோபுரத்தின் அழகியல் வேலைப்பாடுகள் கண்டிய கட்டிட கலை அமைப்பைப்  பிரதிபலிப்பதுடன், அதில்காணப்படும் " மலர்களுடனான யானைகள் " அறிவுக்கான அவசியத்தையும், "புன்கலசம்" நாட்டின்  செழிப்பையும் குறிக்கின்றது , இதனை ஒத்த யானை வடிவம் _University of Peradeniya வின் 'கலை மண்டபத்திலும் (AT) காணப்படுகின்றது . ஸக்கி இஸ்மாயில் அவர்களின் சிறிய புகைப்படமும், இதில் காணப்படும் மலர்வடிவிலான கலை வேலைப்பாடுகளும் முஸ்லிம் சாயலைப் பிரதி பலிக்கின்றது.

   இனறு கண்டி நகரின் மத்தியில் இவ்வாறான ஒரு  கோபுரத்தை  நிர்மாணிக்கலாம் என்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாகும்......

ஒரு தேசத்து  மக்கள் அத்தேசத்திற்கான பங்களிப்பினைப் பல வழிகளில் செய்து தம்மையும் தம் இருப்பையும் எவ்வாறு  அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு  இக் கோபுரமும், ஹாஜி இஸ்மாயில் அவர்களின் அணுகு முறையும் சிறந்த ஒரு முன் உதாரணமாகும்.......

இலங்கையில் ஒரு வர்த்தக சமூகமாக க்   கருதப்படும்  முஸ்லிம்களின்
" ஸதக்கா" நன்கொடைகள் ஒரு சமூகத்திற்கு உள்ளேயே 'புழங்க '  வேண்டியதில்லை அது பொதுச்சமுகத்திற்கான பயன்பாட்டில் கட்டாயம் கலந்திருக்க வேண்டும் என்பதில் எம் முன்னோர் பல்வேறு உதாரணங்களை  செய்து காட்டியுள்ளனர். அதே போல் ஏனைய சமுகத்தைச் சேர்ந்தவர்களும் செய்துள்ளனர்
உ+ம்   
அண்மையில் திஹாரிய முஸ்லிம்   பாடசாலைக்கு ஒரு" பௌத்த பிக்கு" தனது சொந்தச் செலவில் ஒரு பாடசாலைக் கட்டிடத்தை  நிர்மாணித்து கொடுத்திருந்தார். 

எனவே தான் ஒரு மனிதர் செய்த நன்கொடை இன்று கண்டி நகரின் அடையாள மாக மட்டுமல்ல உலக மரபுக் கட்டிடமாகவும் மாறி இருக்கின்றது, 

முஸ்லிம்கள் தமது செல்வத்தை  "  தமது பள்ளி வாசல் , மதரஸா   என்பனவற்றிற்கு  மட்டுமே  பயன்படுத்தும் ஒரு "மூடிய சமூகம்" என்ற குற்றச்சாட்டுகளில் இருந்து மீள, இவ்வாறான பொதுச்சேவைகளை செய்வதும்  மார்க்கத்தில் நன்மையை    வழங்கும் செயல்  என்பதோடு, ..............அவை தம் எதிர்கால இருப்பிற்கான அம்சங்களில் ஒன்றாகவும் அமைந்துவிடும் ..... 

இனியாவது.................

.........கண்டிக்கு  வருவோர் எம்முன்னோரின் சேவைகளால் தலை நிமிரட்டும்....

MUFIZAL ABOOBUCKER..

பேராதனைப்பல்கலைக்கழகம்.

3 கருத்துரைகள்:

Can't we design our masjids incorporating features of Sri Lankan traditional architecture.

Can't we design our masjids incorporating features of Sri Lankan traditional architecture.

pradeniya university government property arasa selavil nirmanikkappattadu

Post a Comment