Header Ads



குண்டை வெடிக்க வைத்த கூட்டு எதிர்க்கட்சி - நிஷாந்த முத்துஹெட்டிகம

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகம் பலமானதாக இருப்பதாகவும் அவரை பதவியில் இருந்து நீக்கும் போராட்டம் முடிந்து விட்டதாகவும் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

காலியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சிலரே காட்டிக்கொடுத்து விட்டனர். இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவுப்பட்டது.

இதனால், நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடையும் என்பதால், வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து விட்டு, அது வெற்றி பெற இடமளித்து விட்டு வெறுமனே இருந்து விட்டனர்.

4 ஆம் திகதி காலை நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடையும் என்பதை அறிந்து கொண்டேன். தோல்வியடையும் ஒன்றுக்கு வாக்களித்து விட்டு சங்கடப்படுவதை விட வாக்களிக்காமல் இருப்பது சிறந்தது என நினைத்து வாக்களிக்கவில்லை.

குண்டு ஒன்றை வெடிக்க வைத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் கூறினர், அவர்கள் வைத்த குண்டு அவர்கள் பக்கமே வெடிக்கட்டும் என்று நாங்கள் இருந்து விட்டோம் என நிஷாந்த முத்துஹெட்டிகம குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.