Header Ads



மெய் சிலிர்க்கவைக்கும், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு


(A.J.M.Nilaam. சிரேஷ்ட முஸ்லிம் ஆய்வாளர்)

கிரா சந்­தே­சய (கிளி­வி­டு­தூது) எனும் சிங்­களக் காவியம் கி.பி.140 ஆம் ஆண்டு எழு­தப்­பட்­ட­தாகும். இது பேரு­வளை நகரைப் பற்றி பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கி­றது. "பல வகைக் கொடி­க­ளாலும் பல­வா­றாக அலங்­க­ரிக்­கப்­பட்ட வீடு­க­ளோடு அழகு நகை­களால் நிரம்­பிய கடை­களும் அதி­க­மாக இருக்கும் பேரு­வ­ளைக்குள் கடல் வழி­யாக மன­நி­றை­வோடு நீ நுழை­வா­யாக! அங்கு சுங்­கத்­தோ­டுகள் அணிந்த சோனகப் பெண்கள் வாழ்­கின்­றனர்" எனக் காணப்­ப­டு­கி­றது.

இதன் மூலம் இக்­கா­வி­யத்தை எழு­திய ஆசி­ரியர் தூது போகும் கிளி­யிடம் அது போக வேண்­டிய திசையைக் குறிப்­பிட்டு வழியில் பேரு­வ­ளைக்கும் போகு­மாறு கூறி­யி­ருக்­கிறார் அல்­லவா? இவ­ருக்கு பேரு­வ­ளையில் வாழ்ந்த சோன­கப்­பெண்­களும் அவர்கள் அணிந்­தி­ருந்த தோடு­களும் கவர்ந்­தி­ருக்­கின்­றன. அதனால் தான் அவர் கிளி­யிடம் பேரு­வ­ளைக்குப் போகு­மாறு கூறி தூது­விட்­டி­ருக்­கிறார். 

நபி (ஸல்) பிறந்து இற்­றைக்கு ஏறத்­தாழ 1400 ஆண்­டு­கள்­தானே ஆகி­றது. அப்­ப­டி­யானால் 1850 ஆண்­டு­க­ளுக்கு முன் சோனகர் என்று யாரை இவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அர­பி­க­ளையே இவர் சோனகர் என்று குறிப்­பிட்­டி­ருக்க வேண்டும். அப்­ப­டி­யானால் நபி (ஸல்) பிறப்­ப­தற்கு முன்பே பேரு­வ­ளையில் அர­பிகள் வாழ்ந்­தி­ருப்­பது தெளி­வா­கி­றது. அப்­ப­டி­யானால் இத்­த­கைய அர­பிகள் யார் என நீங்கள் வின­வலாம்.

அக்­கா­லத்தில் யம­னிய அர­பி­களே சிறந்த கட­லோடி வணி­கர்­க­ளாக இருந்­தார்கள். தோணி, படகு, வள்ளம், நாவாய், பாய்க்­கப்பல் ஆகி­ய­வற்றைச் செலுத்­து­வ­திலும் வர்த்­தகம் புரி­வ­திலும் ஆளுமை படைத்­தி­ருந்த இவர்கள் இலங்கைத் தீவை நோக்கி வந்­ததில் வியப்­பில்லை. ஆக சிங்­க­ளத்தில் யோன­க­, யொவுன், யொன்னு என்றும் தமிழில் சோனகர் என்றும் கூறப்­ப­டு­வது அந்த அர­பி­க­ளையே ஆகும். ஆக யமன் எனும் அரபிச் சொல்லே இவ்­வா­றெல்லாம் திரி­பா­கி­யி­ருக்­கி­றது. இவர்கள் பினி­ஷீயர் என அழைக்­கப்­பட்­டனர்.

ஆக, இலங்­கையில் அர­பி­க­ளாக மட்­டுமே வாழ்ந்த இவர்­க­ளுக்கு நபி (ஸல்) பிறந்த பிறகு தான் இஸ்லாம் கிடைத்­தது. இஸ்­லாத்தை அறிந்து வர இவர்கள் ஒரு குழுவை அனுப்­பி­வைத்த போது அந்த குழு­வுக்கு கலீபா உமர் (ரழி) அவர்­க­ளையே காணக்­கி­டைத்­தது. அதன்­படி இலங்­கையில் இஸ்­லாத்தை அறி­மு­கப்­ப­டுத்த உமர் (ரழி) தனது தோழர் வஹப் இப்னு அபீ­ஹப்ஸா (ரழி) அவர்­களை அனுப்­பி­ய­தாக அறிஞர் சித்தி லெப்பை குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அதன் பிறகு கலீபா ஹாரூன் ர­ஷீதின் ஆட்சிக் காலத்தில் காலித் இப்னு பகாயா எனும் பெரியார் இலங்­கைக்கு அனுப்­பப்­பட்டு இஸ்லாம் நாடு முழுக்க எத்­தி­வைக்­கப்­பட்­ட­தாக அறிஞர் ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ் குறிப்­பி­டு­கிறார்.

மேலும் அவர் இது பற்றி விரி­வாகக் கூறு­கையில், இந்த காலித் இப்னு பகா­யாவே கொழும்பில் ஒரு பள்­ளி­வா­சலைக் கட்­டி­ய­தா­கவும் அவர் இறந்­ததும் அப்­பள்­ளி­வா­சலில் அரு­கி­லேயே அடக்கம் செய்­யப்­பட்ட தாகவும் அவ­ரது மண்­ணறை மீது நடப்­பட்­டி­ருந்த நடுகல் ஒல்­லாந்­தரின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே கொழும்பு திஸா­வையால் அகற்­றப்­படும் வரை 800 ஆண்­டுகள் இருந்­த­தா­கவும் கூறு­கிறார்.

இக்­கால கட்­டத்­தில்தான் சின்­னா­சிய கோனி­யாவைச் சேர்ந்த சுல்தான் ஆப்­தீனின் மக­னான இள­வ­ரசர் ஷேக்­ஜ­மால்தீன் கி.பி 800 ஆம் ஆண்டு பேரு­வ­ளையில் குடி­யேறி மருத்­துவத் தொழிலில் ஈடு­பட்டார். சிங்­கள சிற்­ற­ரசன் மூன்றாம் காப்­பு­லவின் மருத்­துவக் கல்­லூ­ரியில் இவர் பணி­யாற்­றினார். அவ­ரோடு சிலரும் வந்­தி­ருந்­தார்கள். 15ஆம் திகதி  ஒக்­டோபர் மாதம் 1906 ஆம் ஆண்டு டைம்ஸ் ஒப் சிலோன் எனும் பத்­தி­ரிகை கொழும்பைச் சேர்ந்த எம்.ஏ.சி.முஹம்மத் என்­பவர் பேரு­வ­ளையில் கண்­டு­பி­டித்­ததைப் பிர­சு­ரித்­தி­ருந்­தது. அவர் பேரு­வ­ளை­யி­லி­ருந்த ஒரு மண்­ண­றையின் நடு­கல்லில் ஹிஜ்ரி 331 எனப் பொறிக்­கப்­பட்­டி­ருந்­ததை கண்­டாராம். ஆக ஷேக் ­ஜ­மால்தீன் (ரஹ்) வாழ்ந்த காலத்தைப் பார்த்தால் அந்த மண்­ணறை அவ­ரு­டை­யதே என்­பது தெளி­வா­கி­றது. 1016 ஆம் ஆண்டு பேரு­வ­ளையை ஆட்­சி­பு­ரிந்த சிற்­ற­ரசன் ராஜ­வீர புஹ்மன் பெரிய முத­லி­ம­ரிக்­கா­ருக்கு ஒரு செப்­புப்­பட்­ட­யத்தை வழங்­கி­யி­ருந்தான். பேரு­வ­ளையில் கப்­பல்­களை நங்­கூ­ர­மிட்­ட­தற்­கா­கவும் அவற்றை ஏனைய நாடு­க­ளுக்கு பேரு­வ­ளையை முன்­னேற்றிச் செழிப்­பாக்கி அபி­வி­ருத்தி செய்ய அனுப்­பி­ய­தற்­கா­கவும் அரசன் மகிழ்­வுற்­றி­ருக்­கிறான்.

எனவே, இவற்­றுக்குப் பக­ர­மாக இவ­ரது மகன்மார், பேரர்கள், கொள்­ளுப்­பே­ரர்கள் ஆகியோர் உயிர் வாழும் வரை அர­சுக்­காகப் பல்­லக்­கைத்­தூக்கும் ராஜ காரி­யத்தைச் செய்­வதோ பணத்­துக்கு வரி செலுத்­து­வதோ தேவை­யில்லை. இவ­ரது பெயரும் புகழும் எப்­போதும் போற்­றப்­பட வேண்டும். இவர்கள் தமது மதக்­க­ட­மை­களைச் செய்ய விண்­ணப்­பித்தே பள்­ளி­வா­சல்­களைக் கட்­ட­வுள்­ளனர்.

அப்­பள்­ளி­வா­சல்கள் காக்­கப்­ப­டு­வ­தோடு அவற்றைக் கட்­டு­வ­தற்­காக அவர்­களால் விண்­ணப்­பிக்­கப்­படும் எந்த நிலமும் கொடுக்­கப்­பட வேண்டும். இவர் பேரு­வளை முழுதும் கப்பல் வணிகம் செய்ய அனு­ம­திக்­கப்­ப­டு­கிறார் என அதில் காணப்­ப­டு­கி­றது. சரித்­திர சான்­று­க­ளின்­படி பெரிய முத­லி­ம­ரிக்­கா­ருக்கு ராஜ­வீர புஹ்மன் வழங்­கி­யது செப்­போலைப் பத்­தி­ர­மாகும். அவர் இத்­தனை சிறப்­பு­க­ளையும் பெற்­றி­ருந்தார். தச்சர், நெச­வாளர், கொத்­த­னார்கள் எனப் பல்­வேறு தரப்­பி­னரும் இலங்­கைக்கு வந்­தனர். இவ­ருக்கும் இவ­ரது சந்­த­திக்கும் குற்ற விலக்கு அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. விரும்­பிய இடத்தில் பள்­ளி­வா­சல்­களைக் கட்­டிக்­கொள்­ளலாம் என அனு­ம­தியும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அவரை எல்­லோரும் கௌர­விக்க வேண்டும் என அரச உத்­த­ரவும் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

1288 ஆம் ஆண்டு முதல் 1290 ஆம் ஆண்டு வரை குரு­ணா­க­லையை ஆட்சி புரிந்த மூன்றாம் புவ­னே­க­பா­குவின் தாயார் பேரு­வ­ளையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்­ணாவார். இந்த புவ­னே­க­பா­குவின் பெயர் வஸ்­து­ஹி­மி­ராஜ கலே­பண்­டார என்­ப­தாகும். இயற்­பெயர் குராஷான் செய்யித் இஸ்­மாயில். பேரு­வ­ளையில் வஸ்­து­ஹி­மி­புர எனும் ஓர் இடம் இன்றும் இருக்­கி­றது. 'குரு­ணாகல் விஸ்­த­ரய' எனும் நூல் இந்த சரித்­தி­ரத்தைக் குறிப்­பி­டு­கி­றது. மகா­வம்சம் விப­ரிக்­கையில் இம்­மன்னன் அறம் செய்­வதன் மூலம் நன்மை பெற முயன்ற ஒரு ஆட்­சி­யாளன். முஸ்­லி­மா­யினும் தினமும் 1000 பிக்­கு­க­ளுக்கு தானம் வழங்­கு­வதைக் கட­மை­யாகக் கொண்­டி­ருந்தான். என்­றெல்லாம் சிறப்­பித்துக் கூறு­கி­றது.

குறு­கி­ய­கால இரு வரு­டத்தில் அவர் சூழ்ச்­சியால் மலை உச்­சி­யி­லி­ருந்து வீழ்த்­தப்­பட்டுக் கொல்­லப்­பட்டார். இவ­ரது பாட்­டனார் முதலாம் புவ­னே­க­பாகு. தந்தை இரண்டாம் புவ­னே­க­பாகு. இப்­போதும் கூட வஸ்­து­ஹி­மி­ரா­ஜ­புர எனும் கிராமம் பேரு­வ­ளையில் இருக்­கவே செய்­கி­றது. குரு­ணா­க­லையில் அடக்­கஸ்­தலம் இருக்­கி­றது. சிங்­கள மக்கள் கலே பண்­டார தெய்யோ எனக் கூறி வழி­ப­டு­கி­றார்கள். கச்­சேரி வீதியில் காணப்­படும் இதற்­குப்போய் வழக்­கா­ளி­களும் சத்­தியம் செய்­கி­றார்கள்.

1410 ஆம் ஆண்டு கொழும்பு முகத்­து­வா­ரத்­தி­லி­ருந்த முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு கதீப் தேவைப்­பட்­டதால் அவர்கள் பேரு­வ­ளைக்கு ஒரு தூதுக்­கு­ழுவை அனுப்பி அங்­கி­ருந்த காதி­யா­ரிடம் தமது தேவையைக் கூறி­னார்கள். உடனே ஓர் அர­புத்­த­லைவர் தெரி­வாகிப் பல்­லக்கில் முகத்­து­வா­ரத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்டு பள்­ளி­வாசல் கதீ­பாகக் கட­மை­யாற்­றினார். அவ­ரது சந்­த­தி­யி­னரும் அதே பள்­ளி­வா­சலில் கதீ­பு­க­ளா­கவே இருந்­தனர். 1505 ஆம் ஆண்டு இலங்­கைக்கு வந்த போர்த்­துக்­கே­யரின் அட்­டூ­ழி­யத்தின் கார­ண­மா­கவே கொழும்பு முஸ்­லிம்கள் மாயா­துன்­னையின் ஆட்­சிக்கு உட்­பட்ட பக்­கத்து நக­ரங்­க­ளுக்குப் போய் குடி­யே­றினர். மல்­வானை திஹாரி, கஹட்­டோ­விட்ட, உடு­கொடை, பூகொடை, ஒகொ­ட­பொலை ஆகிய நக­ரங்­களில் குடி­யே­றினர்.

இக்­கா­ல­கட்­டத்தில் போர்த்­துக்­கேயர் முஸ்­லிம்­களைக் கிறிஸ்­த­வ­ராக மாற்­று­வதில் தீவி­ர­மாக ஈடு­பட்­டனர். எனினும் இஸ்­லா­மிய ஆன்­மீக ஞானி­களின் கடும் முயற்­சியால் அது கைகூ­ட­வில்லை. பணத்­தையும் பத­வி­யையும் கல்­வி­யையும் காட்­டியே அவர்கள் அம்­மு­யற்­சியில் ஈடு­பட்­டனர். மற்ற மதத்­தினர் மாறி­ய­போதும் முஸ்­லிம்கள் மாற­வில்லை. இஸ்­லா­மிய ஆன்­மீக ஞானி­களின் ஆளு­மையே இதற்குக் கார­ண­மாகும். தமது தனித்­து­வத்­துக்­காகப் போரா­டிய முஸ்­லிம்கள் கொழும்­பிலும் காலி­யிலும் மாத்­த­றை­யிலும் வெலிகாமத்திலும் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

எனினும் ஒல்­லாந்தர் பேரு­வளை முஸ்­லிம்­களால் அழைக்­கப்­பட்டு ஒப்­பந்தம் செய்­து­கொண்ட பின் தமது ஆட்­சிக்கு உட்­பட்­டி­ருந்த ஜாவா தீவின் முஸ்லிம் வீரர்­களை அழைத்து வந்து இலங்கை முஸ்­லிம்­களைக் காப்­பாற்­றினர். ஒல்­லாந்தர் முஸ்­லிம்­களை மத­மாற்றம் செய்­ய­வில்லை. மத உரி­மை­களை முழு­மை­யா­கவே வழங்­கினர். முஸ்லிம் பகு­தி­களில் முஸ்லிம் சமூகத் தலை­மை­களை நிய­மித்­தி­ருந்­தனர்.

போர்த்­துக்­கே­யரின் காலத்தில் முடங்­கி­யி­ருந்த இஸ்­லா­மிய அறிவை விருத்தி செய்­வ­தற்­காக மக்தப் எனும் திண்ணைப் பள்ளிக்கூடங்களும் உருவாக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் கட்டப்பட்டன. எனினும் அரசியல் விடயங்களில் ஈடுபடக்கூடாது. ஆன்மீகத்தோடு மட்டுமே இருக்க வேண்டும் எனும் நிபந்தனையோடுதான் இத்தகைய அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன. 1806 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களோடு ஒப்பந்தம் செய்த ஆங்கில ஆட்சியாளரும் கூட இத்தகைய நிபந்தனையையே முன்வைத்திருந்தனர்.

அராபிய, பாரசீக, தமிழக, மலையாள தஸவ்வுப் கருத்துகளும், சடங்கு சம்பிரதாயங்களும் நாட்டுக்குள் ஊடுருவின. இந்நிலையில் முஸ்லிம்களின் ஆன்மீகத்தைக் கட்டுக்குள் வைக்கும் தேவை ஏற்பட்டது. இஸ்லாம் துறவறமல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில்தான் ஷெய்குமுபாரக் மௌலானாவும் ஷெய்குமுஸ்தபா மௌலானாவும் இலங்கைக்கு வந்து பேருவளையைத் தளமாகக் கொண்டு காதிரிய்யதுல் நபவிய்யா எனும் தரீக்காவை ஸ்தாபித்தார்கள். அது இப்போது 18 நகரங்களில் இருக்கிறது. அத்தோடு காதிரியா, ஷாதுலியா போன்ற தரீக்காக்களும் தஃவத் அமைப்புகளும் வந்தன.

-Vidivelli-

6 comments:

  1. இது காலத்துக்கு தேவையான கட்டுரை. இதை முடியுமானால் சிங்கள மொழியில் சகோதர பத்திரிகையில் வர வழி செய்வதாயின் ஓரளவு சகோதர மொழி பேசும் மக்களும் முஸ்லிம்கள் இலங்கையில் சிங்கள மக்களுக்கு சமமான காலம் தொட்டே வாழ்கின்றனர் என்ற செய்தியை விளங்கி கொள்ள சந்தர்ப்பமாகும் அதேநேரம் இலங்கை முஸ்லிம்கள் வந்தான் வருத்ததான் என்ற சந்தேகத்தையும் ஓரளவு தன்னிக்கலாம். இங்கு கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள கிரா சந்தேசய (கிளிவிடு தூது ) , ராஜவீர புஹ்மன் என்ற அரசனால் வழங்கப்பட்ட செப்பு பட்டயம் இது தபோது எங்கு உள்ளது அதன் ஒரு போட்டோ வடிவம் ,அரசன் மூன்றாம் புவனேக பாகுவின் தாயார் பற்றிய ஏற்றுக்கொள்ள கூடிய தகவல்கள்.மற்றும் இந்த கட்டுரையில் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று இல்லாமல் இக்கட்டுரைக்கு தேவையான அணைத்து உசாத்துணை நூல்கையும் ,இணைக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.இக்கட்டுரை விடிவெள்ளி பத்திரிகையில் வந்த ஆக்கம் என நான் கண்டு கொண்டேன் இதன் தலைவர் மதிப்புக்குரிய N.M. Ameen அவர்களுக்கு இச்செய்தி போகும் என நான் நினைக்கின்றேன்.

    ReplyDelete
  2. moodar koodam! yonar enpathu yavanar aakum (greeks and italians are called yavanas by tamils when they came to srilanka ,there are no muslims at that time ,the saudi and yemen people followed a hellenic type religion, please don't create confusion, kili vidu thoothu ,kakka vidu thoothu ellam manankatti.poiyum purattum.

    ReplyDelete
  3. இலங்கையின் முதலாவது இராசதானியாக உருவான அநுராதபுரத்தின் முதல் மன்னனான பண்டுகாபய மன்னனின் ஆட்சிக் காலத்திலும் கூட அரச நிர்வாக ஆலோசனையை வழங்குவதற்காக அரேபிய முஸ்லிம்கள் காணப்பட்டதாக மஹாவம்சம் குறிப்பிடுகிறது.மற்றும் அவர்கள் "யவணர்" எனும் பதத்திலே அழைக்கப்பட்டார்கள் என்பதும் முக்கியமான அம்சமாகும் கி.மு.377-307. எனும் காலப்பிரிவிலே பண்டுகாபய மன்னன் ஆட்சி செய்தான் இவற்றினை எடுத்து நோக்கும் போது இலங்கைக்கு அரேபியரின் வருகையானது மிகவும் பழமை வாய்ந்தொன்றாகவே காணப்படுகின்றது. (Reading BA Eastern university of Srilanka)

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. pandu kabaya is pandiya abaya,in sinhalease pandu is pandiya. from pandiyanadu.pandu vas nuwara in pandiyanin valvidam,700 people from vangaalam (Bengal ) did not come to srilanka they first got down at thamiraparani (sea port and river ) in tamil nadu.there they married 700 pandiya tamil women and one of them came to srilanka as pandyia abaya who was buddhist(tamil nadu was buddhist at that time and hinduism did not flourish in tamil nadu in AD 100 at thaty time. mathavi after the kannagi problem came to srilanka as a bigguni. landed in naga nadu (manipallavam )in north.Arabia was called petrea at that time and was ruled by romans ,the people in arabia a rodios campers had little population and followed a hellenic religion,Only Abissenian (Ethiopia) Black soldiers were hired by romans and other countries because they were very tall and strong, Egipt and syria and iran iraq were under greek from 335 B.C alexander time till 350 AD. There was no muslims or sonagar at that time. chandra gupta king married a greek Yavana prince daughter of Greek seleucus from Bacteria(afganistan ),

    ReplyDelete

Powered by Blogger.