Header Ads



சண்முகா கல்லூரியில் ஆர்ப்பாட்டம், ஒரு இனத்திற்கு எதிரானது இல்லையாம்...!


திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் எந்த ஒரு இனத்திற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் ஆசிரியர்கள் அணியும் ஆடை தொடர்பாக பாடசாலை அதிபருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் கணவன்மாருக்கும் இடையில் எழுந்த முரண்பாட்டை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் சார்பாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதி அருசா ஜெயராசா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து ஆசிரியைகளுக்கும், அவர்கள் விரும்பும் பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்க, கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமையைத் தொடர்ந்து இந்த விவகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாவட்ட வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்படி நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில், பழைய மாணவர் சங்க பிரதிநிதி அருசா ஜெயராசா மேலும் தெரிவித்தார். 

5 comments:

  1. So the male teachers of this school must be wearing vetting and kurtha , I believe. For Shirt and trousers are alien Englishman's culture. Racism at its peak.

    ReplyDelete
  2. So it is the old boys association which is creating racial decisions and now saying something else. What is Hindu teachers in Muslim Schools were asked to adhere to Muslim culture in those schools? Will they do that?

    ReplyDelete
  3. எது இனரீதியானது இல்லை. பாடசாலை அதிபருக்கு எந்த அதிகாரமும் இல்லை, ஒரு மத ரீதியான ஆடையை அணிய வேண்டாம் என்று கூறுவதட்கு. அதிபர் சார்பாக இயங்கிய அனைவரும் அருசா ஜெயராசா உட்பட மாபெரும் இனத்துவேசிகள். இந்த பிரச்சினையில் கல்விவளைய அதிகாரிகளும் அந்த ஆசிரியர்களின் உரிமைக்கும் முஸ்லிம்களின் மத உணர்வுக்கும் எதிராகவே தங்களது அதிகாரத்தை பாவித்துள்ளார்கள். அந்த அதிபர் நிட்சயம் ஒழுங்கு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தங்களது இனத்துவேசத்தை சேலையயை காட்டி முன்னெடுத்துள்ளார்கள். மனிதமும் பகுத்தறிவும் உள்ள எவரும் பெண் ஆசிரியர்கள் சேலைதான் அணிந்து வரவேண்டும் என்று கூற மாட்டார்கள். ஒரு கன்னியாஸ்த்திரி ( சிஸ்டர் ) அந்த பாடசாலையில் ஆசிரியராக வந்தால் சேலை அணியவா கூறுவார்கள்?? இவர்கள் மாபெரும் துவேஷிகளும், இஸ்லாம் மார்க்கத்தையும் அந்த ஆசிரியர்களின் இஸ்லாமிய உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளார்கள். நிட்சயம் அந்த அதிபர் ஒழுங்கு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது முடிந்ததாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த ஆசிரியர்களுக்கும் முஸ்லீம் இனத்தின் உணர்வுக்கும் அவர்களது உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. சிந்திப்பார்களா முஸ்லிம்களும், முஸ்லீம் தலைவர்கள் என்று பீற்றிக்கொள்பவர்கள். தனிக்கட்சி நடத்துபவர்கள்.

    ReplyDelete
  4. This is a clear sign of law and order break down in this country under this racial rulers.

    People must have the freedom of wearing what they want. Also must have the freedom of their religion to practice.

    I think these barbarians should understand this at the first point.

    ReplyDelete

Powered by Blogger.