Header Ads



"இந்துக்கல்லூரி இந்துக்களுக்கு, என்று சொல்றதே பெரிய இனவாதம்"



வலயக்கல்விப்பணிப்பாளர். - 
என்ன எழுதி வச்சிருக்கீங்க மிஸ்டர்??
.
ஐயா - 
முதற்கண் ''மிஸ்டர்" போட்டு அழைக்காதீர். திரு என்று அழைக்கவும். சரி விடயத்துக்கு வருகிறேன்.
"இந்துக் கல்லூரி இந்துக்களுக்கே. இனவாதம் இங்கே வேண்டாமே"
.
வலயக்கல்விப்பணிப்பாளர். - 
'இந்துக்கல்லூரி இந்துக்களுக்கு' என்று சொல்றதே பெரிய இனவாதம். அதென்ன அதுக்கு கூட முரணா இனவாதம் இங்கே வேண்டாமே.?? நீயே இனவாதம் பேசிட்டு இனவாதம் வேண்டாம்னு சொல்றயா??
.
ஐயா - 
அட ஆமால்ல. உணர்ச்சி வசப்பட்டு எழுதிட்டேன். இப்பவே 'இனவாதம்' என்ற சொல்ல அழிச்சிட்றேன்.
.
வலயக்கல்விப்பணிப்பாளர். - மீதிய வாசி
.
ஐயா - "இந்துக் கல்லூரி இந்துக்களுக்கே! இங்கே வேண்டாமே"
.
வலயக்கல்விப்பணிப்பாளர். -
இந்துக்கல்லூரி இந்துக்களுக்கே இங்கே வேண்டாமா. அப்ப இங்க இருக்கிற இந்துக்கல்லூரிய இடிச்சி உடுவமா?
.
ஐயா - 
தாழ்மையுடன் மன்னிக்கவும். "இங்கே" சொல்லை அழிச்சிட்றேன்
.

வலயக்கல்விப்பணிப்பாளர். - மீதி என்ன எழுதிருக்கு?
.
ஐயா - "இந்துக் கல்லூரி இந்துக்களுக்கே வேண்டாமே"
.
வலயக்கல்விப்பணிப்பாளர். - 
என்னாது இந்துக்களுக்கு இந்துக்கல்லூரி வேண்டாமா.??
.
சேர் -
ஐயோ!! மறுபடி மிகத் தாழ்மையுடன் மன்னிக்கவும் .. 'வேண்டாம்' என்ற சொல்லை அழிச்சிட்றேன்.
.
வலயக்கல்விப்பணிப்பாளர். - இப்ப வாசி
.
ஐயா - "இந்துக் கல்லூரி இந்துக்களுக்கே"
.
வலயக்கல்விப்பணிப்பாளர். - 
இந்துக்கல்லூரி இந்துக்களுக்கு என்டா பௌத்த நாடு பௌத்தர்களுக்குத்தானே? 
.
ஐயா - 
ஆஹா அறிவுக்கண்ண திறந்து விட்டீங்க .. இப்பவே 'இந்துக்களுக்கு' என்ற சொல்லை அழிச்சிட்றேனுங்க
.
வலயக்கல்விப்பணிப்பாளர். - இப்ப படி
.
ஐயா - இந்துக்கல்லூரி
.
வலயக்கல்விப்பணிப்பாளர். -. அப்ப இது இந்துக்கல்லூரி இல்லாம அந்தாட்டிக்கா கல்லூரியா?
.
ஐயா -  🙏🤫😥🚶‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

(வட்ஸ் அப்பில் வந்தது - எழுதியவருக்கு Abdur Rahman நன்றி)

2 comments:

  1. I would say there will be another disaster will begin from Sri Lankan muslims side against this racist terrorist

    ReplyDelete
  2. schools are the best place to teach right and wrong to children. here teachers are teaching and displaying RACISM. scary.

    ReplyDelete

Powered by Blogger.