April 28, 2018

ஹபாயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து, விஜயா பாஸ்கரன் சொல்லுவதை கேளுங்கள்

நான் ஒரு இந்து. சைவன். எங்களையே பாடசாலைக்கு வரவிடாமல் தடுத்த வரலாறு உண்டு.ஒரு ஒடுக்கப்பட்ட சாதி மாணவனை படிக்கச் சேர்த்ததால் பாடாசாலையே பகிஸ்கரித்த வரலாறுஉங்களுடையது.வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயம்,வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் வரலாறுகள் அதுதான்.1972 வரை புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியில் இந்து மத ஒடுக்கப்பட்ட சமூக மக்களை படிக்க அனுமதிக்கவில்லை.இதுதான் உங்கள் இந்து கலாச்சாரம்.நாகரீகம்.அதன் மறுவடிவமே இந்த ஆர்ப்பாட்டம்.

முப்பது வருட யுத்தம் இந்த மண்ணில் பல்லாயிர கணக்கான உயிர்களை பலியெடுத்துவிட்டது.அது எந்த இனத்தையும் விட்டு வைக்கவில்லை.அந்த யுத்தம் சாதி,மதம்,பணக்காரன்,பதவியில் இருந்தவன் எவனையும் விட்டு வைக்கவில்லை.

2009 மே 17 இல் முடிவுக்கு வந்தது. உரிமை கேட்டு போராடி இறுதில் உயிர்களையாவது காப்பாற்ற முடியாமல் திண்டாடினோம்.ஏதோ ஒரு வழியாக நாங்களாவது எஞ்சியுள்ளோம்.இனியும் சாதி,மத,இன, குரோதங்கள் வேண்டாம்.

திருகோணமலை பாடசாலை ஒன்றில் இஸ்லாமிய எதிர்பு தொடக்கியுள்ளார்கள்.நிச்சயமாக பாமர மக்கள் எவரேனும் இதை செய்ய மாட்டார்கள்.அவர்களுக்கு வாழ்க்கையோடு போராடவே நேரம்இல்லை.

பாடசாலை சீருடைகள் தமிழ் அல்லது இந்து கலாச்சாரமா? பான்ட் இசைக் கருவிகள் தமிழர் வாத்தியமா?ஆண்கள் யாரும் வேட்டி கட்டி பாடசாலைக்கு வருவதில்லை.அப்படி இருக்க ஏன் இந்த விதண்டவாத நியாயங்கள்.போராட்டங்கள்?

இது வெறும் சமூகத்துக்கு பயன்ற்ற படித்தவர்களின் செயற்பாடு என்பதே உண்மை.பாடசாலை என்பது பொதுவான ஒன்று.அதுவும் அரசாங்க பாடசாலை.இது எந்த மதம் இனத்துக்கும் சொந்தம் அல்ல.யாரும் படிக்கலாம்.படிக்கப் போகலாம்.

பேராசிரியர் சிவத்தம்பி படித்தது மருதானை ஷாகிரா கல்லூரி.மைத்திரிபால சேனநாயக்கா படித்தது யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி.கே.பி.ரத்னாயக்கா படித்தது பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி.மூதூர் மஜீத் படித்தது யாழ் இந்துக் கல்லூரி.செல்வநாயகம் படித்தது கொழும்பு சென் தோமஸ் கல்லூரி.பாடசாலைகள் எந்த மனிதருக்கோ இனத்துக்கோ மதத்துக்கோ சொந்தம் அல்ல.இந்திய அணு விஞ்ஞானி அப்துல் கலாம் படித்தது திருச்சி சென் ஜோசப் கல்லூரி.

அப்துல் கலாம்,ஏ.ஆர்.ரகுமான் எல்லாம் உலகப் புகழ் பெற்றவுடன் மதம் மறந்து தமிழன் என கொண்டாடுகிறோம்.ஆனால் சாதாரண இஸ்லாமிய மக்களை ஏற்கமுடியவில்லை.உணர்வுகளை மதிக்க விரும்பவில்லை.எங்களது பண்புகளை இனவாத கண்ணோட்டத்தால் தாழ்த்துகிறோம்.வேண்டாம் திருந்துங்கடா.

திருகோணமலையில் தமிழர்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது.அவை எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை.இது ஒரு பிரச்சினையா?சைவ கோவிலுக்குள் வந்து பௌத்த இராணுவம் தேர் இழுக்கிறது .ஆனால் இந்து மதம் சார்ந்த பக்தியுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் கயிற்றை தொடவே முடியாது.என்ன இந்து,சைவ,தமிழ் பண்பாடு? திருந்தவே மாட்டீர்களா?

முடிந்தால் கன்னியா சைவக் கோவிலை உடைத்து புத்தர் சிலைகள் முளைத்துள்ளன.குச்சவெளி கரடி மலை அருகே உள்ள சைவக் கோவிலை உடைத்து விகாரை எழுந்துள்ளது.முடிந்தால் அங்கே உங்கள்் உரிமையை நிலை நிறுத்துங்கள்.முடியாது.அதிகாரம் உள்ளவர்களோடு மோதும் துணிவு இல்லை.அதிகாரமே இல்லாத அப்பாவி சம மத உறவுகளோடு மட்டும் மோதுவீர்கள்.வீரத்தை காட்டுவீர்கள்.

அவர்கள் சகோதரர்கள்.எங்கள் தாய் மொழி ஒன்றே.மதம் ம ட்டுமே வேறு.கிறிஸ்தவர்களம் வேறு மதம்தான்.அவர்களோடு உறவாட முடியும் என,றால் இஸ்லாமியர்களோடு ஏன் உறவாட முடியாது.ஆசிரிய நியமனம் இஸ்லாமிய பாடசாலைகளில் கிடைத்தால் நிராகரிக்க முடியுமா? அப்படி செல்பவர்களை தடுக்க முடியுமா?கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்வி கற்பதை பெருமையாக நினைப்பவர்களே இந்த கலாச்சார இந்து,சைவ,தமிழர்கள்.

கல்வியிறிவில் முன்னேறியபோதும் பக்குவப்படாத மனிதர்களாக இருக்கிறோம்.வேண்டாம் இந்த முரண்பாடுகள்.ஏழைகளை மாணவர்களை பலிக்கடா ஆக்கவேண்டாம்.

 பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்க வேண்டாம்.உங்களுக்கு அரசியல் பிழைப்பு.மக்களுக்கு இழப்பு.

Vijaya Baskaran   

Madduvil mahavithyalayam

8 கருத்துரைகள்:

நீ தமிழன். அது மட்டுமல்ல மனிதனும்கூட

If this is the predicament of few Muslim Teachers in a Tamil School or a Muslim school for that matter what will be the position of Muslim Population in the FUTURE TAMIL HOMELAND ? M/s.SambandanAyyah,Mavai Senathirajah Ayyah,and Sumanthiran Ayyah.

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்பதற்கு நீங்கள் தான் உண்மையான சொந்தக்காரன்

I RESPECT YOU.THANK YOU VERY MUCH FOR YOUR OPINION

உங்கள் கட்டுரையை படிக்கும்போது எனக்கு கண்கலங்கியது, உங்களைப்போல் நல்லஉள்ளம் கொண்டோரால்தான் உலகம் இன்னும் சுத்துகிறது . நன்றி

அருமையான கட்டுரை, நல்லிணக்கம் உருவாகின்ற இடம் பாடசாலை. மதம்கள் ஒற்றுமையை போதிக்கின்றது அனால் மனிதர்களோ பிரிந்து வேற்றுமைகளை உருவாகின்றார்கள்

Post a Comment