April 26, 2018

பெண்களுக்கான பாதுகாப்பே அபாயா

-மஹிபால் எம் பாஸி-

புனித குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிகாட்டலின்படி பெண்கள் தமது பாதுகாப்புக்காகவும் தம்மிலிருந்து ஆண்கள் பாதுகாக்கப்படவும் நபிகளார் காலம் முதலே 'அபாயா' என்ற கருப்பு நிற ஆடை வழக்கத்தில் உள்ளது.  

ஏனைய நிறங்கள் அலங்காரங்கள் எதுவுமின்றி மேலாடையாக எளிமையாக கருப்பு நிறத்தில் இவ்வாடை இருப்பதே  பாதுகாப்பு காரணங்களினாலாகும்.

பெண்கள் தம்மை முறையாக மறைப்பது குறித்த இறை கட்டளை வந்த மறுநாளே பெண்கள் மதீனத்துத் தெருக்களில் காகங்கள் போன்று கருப்பு நிறத்திலேயே அணிந்து வந்தார்கள் என்று வரலாறு உள்ளது.

இவ்வாடை முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல நடுநிலையில் இருந்து  சிந்திக்கும் இதர சகோதரிகளுக்கும்  இது நன்மை அளிக்கக்கூடியதே.

அண்மைக் காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் உருவான இயக்கங்களின் போட்டித் தன்மையான செயல்பாடுகளால் அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்போருக்கு இஸ்லாத்தின் அடிப்படைகளை அறிந்து அவற்றைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்க நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்தன.  

அவற்றின் ஒரு குறிப்பிடத்தக்க நன்மையே இந்த 'அபாயா' மற்றும் 'பர்தா' என்ற பாதுகாப்பு ஆடைகளாகும்.

இறைவன் புனித குர்ஆனில் கூறுகிறான்:

"இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்". (அல்குர்ஆன் : 24:31) www.tamililquran.com


எந்த மதத்தினராக இருந்தாலும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ள நல்ல குடும்பவியலோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை ஏற்று நடப்பதால் அதன் நன்மைகள் அவரவருக்கே.

அவர்கள் இவ்வாறு செய்வதால் இஸ்லாத்துக்கு முஸ்லிம்களுக்கும் எவ்வித குறையும் வந்திடாது.  ஆனால், நாட்டிலும் குடும்பங்களிலும்  ஆரோக்கியமும் அமைதியும் நிறைந்ததோர் சமுதாயமொன்றை  எதிர்பார்க்கலாம்.

காரணம், ஆடைகள் பற்றி மட்டுமன்றி ஓர் எளிய அமைதியான வாழ்வுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் இஸ்லாம் கொண்டிருக்கிறது.  அது அனைவரினதும் நேரிய மார்க்கமாகும்.

7 கருத்துரைகள்:

Abaya is a curse . Muslims did not wear this dress in 1990 and before. Earlier female Moulavis wore saris and they attended schools without head cover. Females attended training college in Half saris. Next Communal clash will erupt on newly introduced fundamental dress

Jamal Deen sultan, who are you to decide my dress code?

Are you still wearing the dress which you woren before 1990?

Changes will come in every decade, don't make your Asshole argument.

Who is this hindu terrorist to decide my dress codes?

கிறீஸ்தவ நாடுகளில் பெண்கள் அபாயா அணியாமலே ஆபத்துகள் இன்றி வாழ்கிறார்கள். இந்த நாடுகளில் உள்ள ஆண்கள் இசுலாமிய நாடுகளில் உள்ள ஆண்களை போலன்றி பெண்களையும் மனிதர்களாக மதித்து அவர்களுக்கு பாதகம் செய்வதில்லை. ஆகவே இங்கு அபாயா தேவை இல்லை.

கிறிஸ்தவ நாடுகளில் பெண்களுக்கு பாதுகாப்பா? இந்த புள்ளிவிரபங்களையாவது படித்து உலகில் நடப்பதை உணர்ந்துகொள் நண்பா...

அமொிக்கா, தென்னாபிரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் பெண்களைக் கற்பழிப்பதில் முதல்நிலையிலுள்ளன.

கற்பழிப்பதில் முதன்நிலையிலுள்ள 10 நாடுகளின் பட்டியல் –
https://www.wonderslist.com/10-countries-highest-rape-crime/

https://www.nsvrc.org/sites/default/files/publications_nsvrc_factsheet_media-packet_statistics-about-sexual-violence_0.pdf

https://en.wikipedia.org/wiki/Rape_statistics

வாய் எதனையும் பேசும் என்பதற்காக எடுத்ததற்கெல்லாம் பொய் பேசக் கூடாது.

முஸ்லிம் நாடுகள் கற்பழிப்பு புள்ளி விபரங்களை இணையத்தளங்களுக்கு வெளிவிடுவதில்லை. ஆதலினால் சவூதி அராபியா இந்த புள்ளிவிபரங்களில் இல்லை. முஸ்லிம் நாடுகளில் அபாயா இல்லாமல் பெண்கள் நடமாடினால் இந்த கற்பழிப்பு தொகைகளிலும் பன்மடங்கு பெண்கள் கற்பழிக்க படுவது தெரியவரும். முஸ்லிம் ஆண்கள் அப்படி ஆபத்தானவர்கள். பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தால் கற்பழிப்பு சாத்தியம் குறைவு தான். முஸ்லிம் ஆண்களிடம் இருந்து பெண்களை வேறு எப்படி பாதுகாப்பது? பூட்டி வையுங்கள்.

Post a Comment