Header Ads



இன, மத பாகுபாடுகளைத் தடுக்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

இன, மத பாகுபாடுகள் குறித்து முறையிட புதிய குறும் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய சகவாழ்வு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் முன்னெடுத்த முயற்சிகளின் பலனாக குறித்த குறும் தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இன, மதரீதியிலான பாகுபாடுகள் மற்றும் ஏனைய வழிகளிலான வதைகளை எதிர்கொள்வோர் அது தொடர்பாக 1956 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

இன மற்றும் மதரீதியில் ஏற்படும் கலவரங்களை முன்கூட்டியே தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் கிராமங்கள் தோறும் நல்லிணக்க சபைகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், அரசாங்க ஊழியர்கள், கலைஞர்கள், மதத்தலைவர்கள், பாகுபாடுகளை எதிர்கொண்டுள்ள இனப்பிரிவினர் மற்றும் பெண்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக அனைத்து அரச நிறுவனங்களிலும் இருமொழி ஆற்றல்களைக் கொண்ட மொழிபெயர்ப்பாளர்களை பயிற்றுவித்து சேவையில் அமர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.