Header Ads



சவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு


சவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலி அல் கபீஸ் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டுக்குள் சவூதி மக்களுக்கு வேலைவாய்பின்மையை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே இந்த புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவின் இந்த முடிவு, அங்கு வேலை செய்யும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டவருக்குத் தடை செய்யப்பட்ட 12 வேலைகள் பின்வருமாறு.
  1. கடிகாரக் கடைகள்
  2. கண்ணாடிக் கடைகள்
  3. மருத்துவ உபகரணக் கடைகள்
  4. மின்னணு மற்றும் மின்னியல் சாதன கடைகள்
  5. கார் உதிரபாகங்கள் விற்கும் கடைகள்
  6. கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
  7. தரைவிரிப்பான்கள் விற்கும் கடைகள்
  8. ஆட்டோமொபைல் மற்றும் மொபைல் கடைகள்
  9. வீடு மற்றும் அலுவலக உபயோகப்பொருட்களின் கடைகள்
  10. ரெடிமேட் ஆடையகங்கள்
  11. குழந்தைகள் மற்றும் ஆடவர் துணிக்கடைகள்
  12. வீட்டு பாத்திரக்கடைகள் மற்றும் பேக்கரிகள்
குறித்த துறைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
2018.09.11
  1. கார் மற்றும் இருசக்கர வாகன காட்சியகங்கள்
  2. ரெடிமேட் ஆடையகங்கள்
  3. வீடு மற்றும் அலுவலக உபயோகப்பொருட்களின் கடைகள்
  4. சமையலறை மற்றும் வீட்டு உபகரணக் கடைகள் என்பவற்றுக்கு 2018.09.11ஆம் திகதியிலிருந்து பணிக்கு எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
2018.11.09
  1. மின்னணு சாதன கடைகள்
  2. கடிகாரக் கடைகள்
  3. கண்ணாடிக் கடைகள் என்பவற்றுக்கு 2018.11.09ஆம் திகதியிலிருந்து பணிக்கு எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
2019.01.07
  1. மருத்துவ உபகரணங்கள் விற்கும் கடைகள்
  2. கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
  3. தரைவிரிப்பான்கள் விற்கும் கடைகள்
  4. வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் கடைகள்
  5. இனிப்புக் கடைகள் என்பவற்றுக்கு 2019.01.07ஆம் திகதியிலிருந்து பணிக்கு எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
சவூதியின் இந்த திடீர் முடிவால் சவூதிக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்று செல்ல எண்ணும் தொழிலாளர்களுக்கும், அங்கு வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பேரிடியாகவும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

5 comments:

  1. இதை எல்லாம் விட மிஞ்சியது வீட்டு சாரதிகள் வீட்டு பணிப்பெண்கள் மற்றும் சுத்தம் செய்யும் தொளிலார்கல்தான்

    ReplyDelete
  2. Most important thing that they will stop exporting Wahhabism mother of extremism and Terrorism.

    ReplyDelete
  3. No medicine for the hate in the heart of some groups in the name of Islam.

    Alhamdulillah paradise is for those who follow Islam in its pure form as it was practised by Muhammed sal. and his companions ( salaf ). people of Bida are those who practice matters as DEEN but we're not DEEN for salaf.

    May Allah guide u me and Saudi in salaf way.

    ReplyDelete
  4. "People of Bida are those who practice matters as DEEN but we're not DEEN in Salaf way"

    Alhamdulillah! Bro Rashid..... Exactly as you said.

    ReplyDelete
  5. "People of Bida are those who practice matters as DEEN but we're not DEEN in Salaf way"

    Alhamdulillah! Bro Rashid..... Exactly as you said.

    ReplyDelete

Powered by Blogger.