Header Ads



நேற்றைய இரவுநேர சு.க. கூட்டத்தில், நடந்தது என்ன..?

கூட்டரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் எதிரணியில் அமர்வதற்கு அனுமதி வழங்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கோரிக்கை விடுத்தனர் என்று கொழும்பு ஊடகம்ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், அரசிலிருந்து விலகினாலும் ஜனாதிபதிக்கான ஆதரவு தொடரும் என்றும், ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியை கைவிட்டு செல்ல மாட்டோம் என்றும் அவர்கள்உறுதியளித்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மஹிந்த அணியால் முன்வைக்கப்பட்டநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள் உட்பட 16பேர் ஆரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து பிரேரணையை ஆதரித்த சு.க. உறுப்பினர்கள் கூட்டரசிலிருந்து வெளியேறவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியதுடன், அக்கட்சியின்பின்வரிசை எம்.பிக்களால், சு.கவின் அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும்இடையே நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போதே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த கூட்டரசிலுள்ள சுதந்திரக் கட்சிஉறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஐ.தே.கவின் முடிவு ஜனாதிபதிக்குஅறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக நாளை மறுதினம் (நேற்று) நடைபெறும் மத்தியசெயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என ஜனாதிபதியால்பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதியின்இல்லத்தில் நேற்றிரவு 7 மணிக்குக் கூடியது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களும் மத்திய குழு கூட்டத்துக்குஅழைக்கப்பட்டிருந்தனர்.

கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னர் பிரதமருக்குஎதிரான பிரேரணைக்கு ஆதரவளித்த சு.க. உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன்யாப்பா அபேவர்தனவின் இல்லத்தில் கூடி பேச்சு நடத்தியுள்ளனர்.

அமைச்சுப் பதவிகளைத் துறந்து கூட்டரசிலிருந்து வெளியேற வேண்டும், பொதுஎதிரணியான மஹிந்த அணியுடன் இணையாமல் எதிரணியில் மட்டும் இருக்க வேண்டும்,எதிரணியில் இருந்தாலும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும், சுதந்திரக் கட்சியைவிட்டு வெளியேறக் கூடாது போன்ற தீர்மானங்கள் இந்தச் சந்திப்பில் ஏகமனதாகஎடுக்கப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மத்திய செயற்குழுக் கூட்டத்தில்முன்வைத்துள்ளனர். இது பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியில் ஒரு குழு கூட்டரசில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கும்என்றும், பிரதமரை எதிர்த்து வாக்களித்தவர்கள் மஹிந்த அணியுடன் எதிரணியில் மட்டும் அமர்வார்கள் என்றும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள்தெரிவிக்கின்றன.

எனினும், இறுதி முடிவெடுப்பதற்காக சு.கவின் மத்திய செயற்குழு நாளை புதன்கிழமைமீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றுள்ளது.

No comments

Powered by Blogger.