April 12, 2018

கும்புக்கந்துறையில் மீண்டும், வேதாளம் முருங்கை மரத்தில்...

சென்ற திகன மதக் கலவரத்தில் #பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் #செய்வதில் திகன, கும்புக்கந்துறை தவ்ஹீத் #ஜமாத் மக்கள் ஊர்மக்களோடு இணைந்து பாரிய தொண்டு செய்தனர் என்பது நாம் அறிந்ததே!
#பொது விஷயத்தில் ஒன்று சேர்ந்த தவ்ஹீத் ஜமாத் மக்கள் 
---

சிங்கள இனவாதக் கும்பல் நமது சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியில் காழ்ப்புணர்ச்சி கொண்டு அரங்கேற்றிய கொடுமைகளை தவ்ஹீத் ஜமாத் மக்கள் களத்தில் இறங்கி எதிர்கொண்டனர்.
கருத்து சுதந்திரம்/ அரசியல் யாப்பு , இஸ்லாமிய அறிவு பற்றி எந்தப் பின்னணி அறிவும் அற்ற பள்ளி நிருவாகிகள்.
--

திகன பிரதேசத்தில் திகன டவுன், பள்ளேகல, கென்கல்ல, கும்புக்கந்துறை, ஹிஜ்ராபுர, #அம்பகஹலந்த, அளுத்வத்தை ஆகிய கிராமங்களில் அல்லாஹ்வின் மாளிகைகளில் #ஐங்காலத் தொழுகைகள், #ஜும்ஆ மற்றும் பல மார்க்க அம்சங்கள் பித்அத் அடிப்படையில் நடைபெற்று வருகின்றது.

இவற்றில் #வருடத்தில் ஒரு நாள் கோலகலமாக ஷிர்க் #அரங்கேறும் பள்ளிகள் இருக்கின்றன.

தென்னக் கும்புர பள்ளியில் B-பன+பிரித் (பாழி மொழியில் ) ஓதப்பட்டதும் இலங்கை தேசம் பத்தி எரிந்தது.

அதே (B)பனையும் , பிரித்தும் அரபு மொழியில், கவிதைகளாகப் வருடம் தோறுப் பாடப்பட்டு அல்லாஹ் அல்லாதோர் பெயரில் #ஆடு, #கோழி, #மாடுகள் அறுக்கப்பட்டு, உலமா சபையின் அடையாள அட்டைகள் பெற்ற, நீண்ட நீண்ட ஜுப்பாக்கள் அணிந்த மவ்லவிகளால் அரங்கேற்றப்படுவது பகல் சூரியன் போன்றதாகும்.

குர்ஆன் சுன்னா குர்ஆன் மத்ரஸா
-----
#இஸ்லாம் என்ற பெயரில் மதபோதகர்களாலும் , புரோகிதர்களாலும் #அரங்கேற்றப்படுவது கொஞ்சமும் கவலைப்படாமல் மௌன அமைதிகாக்கும் இஸ்லாமிய சிந்தனைப் பெயர்தாங்கிகள், #மௌலவிகள் என்போரின் செயல்களோடு நாம் உடன்ட வேண்டிய அவசியம் இல்லை #மார்க்க ரீதியாகவும், அரசியல் யாப்பின் அடிப்படையிலும், கருத்துச் சுதந்திரம் என்ற #அடிப்படையிலும் இலங்கை வாழ் தவ்ஹீத் இயக்கங்கள் தனியாக மத்ரஸாக்களையும், பள்ளிகளையும் நிறுவி தமது காரியங்களை சுதந்திரமாக முன்னெடுப்பது போன்று கும்புக் கந்துறையிலும் அதன் அயல் #கிராமங்களிலும் முன்னெடுக்க தப்லீக் ஜமாத் மற்றும் பழமைவாத பள்ளி நிருவாகங்கள் அனைவரும் முட்டுக்கட்டையாக இருந்தனர். 

#இங்குள்ள தவ்ஹீத் மக்கள் கைரிய்யா நலன்புரி சஙகம் , கைரியா குர்ஆன் மத்ரஸா என்ற அரச அங்கீகாரம் பெற்ற #நிருவணங்கள் ஊடாக தமது நடவடிகாகைகளை முன்னெடுத்த போது ஊரும் உலமாக்களும் சேர்ந்து அதற்கு எதிராகக் களம் இறங்கி இறுதியில் மூக்குடை பட்டனர்.
#இதற்கு மடவளை மகான் கண்டி மாவட்ட உலமா சபை தலைவராக இருந்த புர்ஹான் மவ்லவி நன்றாக தீனி போட்டு வளர்த்தார்.

#மேற்படி தவ்ஹீத் ஜமாத்தின் குர்ஆன் மத்ரஸாவின் மவ்லவி ஷாஜஹான் என்பவரை துல் ஹஜ் என்ற புனித மாதத்தில் கொலை செய்யவும் முயற்சி செய்து கறைபடிந்த வரலாற்றுத் தடயத்தை ஏற்படுத்தினர்.

#இவ்வளவு அநீதி இழைக்கப்பட்ட #தவ்ஹீத் மக்கள் திகன கலவரத்தால் ) #பாதிக்கப்பட்டதும் நாட்டில் உள்ள தவ்ஹீத் அமைப்புக்களின் தலைவர்களோடு தொடர்பு கொண்டு பெரும் தொகையான பணத்தை தருவித்துக் கொடுத்தும் அவர்கள் தமது #மத்ரஸாவில் அவர்களின் கடமைகளைச் அரச அனுமதியோடு செய்து வரும் போது #சில போத்தல் அடிமைகள் #கலவரத்தினால் எட்டப்பட்ட சமாதானத்தை மீண்டும் சீர்குலைக்க சில முஸ்தீபுகளில் ஈடுபட்டிருப்பது பற்றி கவலையடைகின்றோம். 

#இருப்பினும் கைரிய்யா நிர்வாகிகள் எதற்கும் தயாரக இருப்பது பற்றி #தும்பற #உலமா சபைத் தலைவர் சகோதரர் மவ்லவி ஷகூர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

#கருத்து, மற்றும் #மத சுதந்திரம் வழங்கி நமக்குள் எழும் பிரச்சினைகள் தீர்க்கப்படாததன் காரணமாக அரசியல் யாப்பு நல்ல தீர்வை தரும் என்பது கடந்த கால #அனுவனபவங்களாகும்.

கவனத்தில் கொள்வார்களா சம்மந்தப்பட்டவர்கள் ???

குறிப்பு : திகன மக்களுக்கு உதவ முன்வரும் தவ்ஹீத் #இயக்கங்கள் கைரிய்யா மத்ரஸா நிர்வாகிகளோடு தொடர்பு கொண்ட பின் தமது உதவிகளை செய்யவும் என கைரிய்யா தவ்ஹீத் குர்ஆன் மத்ரஸா நிர்வாகிகள் மூலம் பணிவாக வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

ரிஸ்வான் மதனி 12/ 04/2018

0 கருத்துரைகள்:

Post a Comment