Header Ads



கண்­டி இன மோதலினால், இலங்கை­ அவ­மா­னத்­திற்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது - சபா­நா­யகர்

நாட்டில் கடந்த காலங்­களில் ஏற்­பட்ட இன, மத மோதல்­க­ளினால் பிற நாடுகள் மத்­தியில் நாட்­டுக்­கான கீர்த்­தியில் அவ­தூறு ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யா­னது நாட்டில் பொரு­ளா­தார அபி­வி­ருத்திப் பாதையில் தடைக்­கற்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தற்­கா­லத்தில் ஏற்­பட்­டுள்ள இந்த இனப் பிரச்­சி­னையை நாம் எதிர்­கால சமூ­கத்­திற்கு விட்டுச் செல்­லாமல் இதற்­கான தீர்­வினை தற்­போதே ஏற்­ப­டுத்த நாட்டின் அனைத்து தரப்­பி­லி­ருந்தும் ஆத­ரவு வழங்­கப்­பட வேண்டும் என சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தெரி­வித்தார். 

இலங்­கையில் தேசிய மற்றும் மத சக­வாழ்வை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான பாரா­ளு­மன்றக் குழுக் கூட்டம் நேற்று பாரா­ளு­மன்ற குழு அறையில் இடம்­பெற்­றது. இதன்­போது கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கையில் சபா­நா­யகர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில், 

இன ரீதி­யி­லான மோதல்கள் நாட்டின் கீர்த்­தியில் அவ­தூறு நிலையை தோற்­று­வித்து விட்­டன. இதனை நிவர்த்­திக்க வேண்­டி­யது நாட்டின் அனைத்து மட்­டத்­தி­ன­ரி­னதும் கடப்­பா­டாகும். பாரா­ளு­மன்றம் மாத்­திரம் இதில் பங்­காற்ற இய­லா­த­வொன்று. 

கடந்த காலத்தில் கண்­டியில் ஏற்­பட்ட இன ரீதி­யான மோத­லினால் இலங்கை பிற நாடுகள் மத்­தியில் அவ­மா­னத்­திற்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. அப்­பி­ரச்­சி­னையே இன்று இவ்­வா­றா­ன­வொரு கலந்­து­ரை­யா­ட­லுக்கும் வித்­திட்­டுள்­ளது. 

தற்­கா­லத்தில் தேசம் முகங்­கொ­டுத்­துள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கும் இவ்­வா­றான இன மோதல்கள் அடித்­த­ள­மி­டு­கின்­றன. இப்­ப­டி­யான இன மோதல்­களை நாம் தற்­கா­லத்­தி­லேயே தீர்த்துக் கொள்ள வேண்டும். இப்­ப­டி­யான கீழ் மட்ட நிலைப்­பாட்டை எமது பரம்­ப­ரை­யி­ன­ருக்கு எடுத்துச் செல்­லா­தி­ருப்போம். 

மேலும் கண்டி பிரச்­சி­னையின் போது அர­சியல் தலை­வர்கள் சிலர் என்னை வந்து சந்­தித்து இவ்­வி­டயம் குறித்து கலந்­து­ரை­யா­டினர். இவ்­வா­றான பிரச்­சி­னை­களை ஆரம்­பத்­தி­லேயே தகர்த்­தெ­றி­வ­தற்­கான வழி­மு­றை­களை மேம்­ப­டுத்­தவும் எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் உரு­வா­காமல் தடுக்­கவும் வழி வகை­களை செய்ய வேண்டும் என்­றனர். 

இது ஓர் சிறந்த வெளிப்­பாடு எனினும், உயர்­மட்­டத்தில் மாத்­திரம் இதனை முன்­னெ­டுத்து செல்­வது சாத்­தி­ய­மற்­ற­வொன்று. நாம் அனை­வரும் இன, மத ரீதி­யாக வேறு­பட்­டாலும் தேசிய மட்­டத்தில் ஒரே குழு­வி­னரே. 

நாட்டின் அபி­வி­ருத்தி நிலையை கவ­னத்தில் கொண்டு தேசிய ஒழுக்­க­நெ­றி­யையும் பின்­ன­பற்றல் வேண்டும். எனவே இதற்கு அனைத்து மட்­டத்­தி­னரும் கரம்­கோர்க்க வேண்டும். 

நாட்டின் அனை­வ­ருக்கும் வாக்­க­ளிக்கும் உரிமை மாத்­திரம் உரித்­து­டை­ய­வொன்­றல்ல. அர­சாங்­கத்தால் வழங்­கப்­படும் அனைத்து சலு­கை­க­ளையும் பெற்றுக்கொள்ள இயலும். இதனை யாராலும் மறுக்க இயலாது. 

எனவே, பாடசாலை மட்டத்திலிருந்து ஒழுக்கநெறிகளை எதிர்கால சந்ததியினருக்கு பயிற்றுவிப்பதால், கடந்த காலங்களை போன்று இளைஞர்கள் இன ரீதியான பிரச்சினைகளுக்கு வித்திடாமல் நாட்டின் அபிவிருத்தியில் பங்குகொள்வர் என்றார். 

5 comments:

  1. Your Govt/UNP has failed to take the necessary steps, TO whom you are blaming????

    ReplyDelete
  2. சட்டம் ஒழூங்கு உங்கள் unp கையில் வைத்துக்கொன்டு வேடீக்கை பார்த்து விட்டு முஸ்லீம் இனத்திற்கு முழூ அட்டூழியங்களையும் பாதுகாப்பு உதவியுடன் செய்து விட்டு,கன்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.?????

    ReplyDelete
  3. @Gaffoor, your 21 Muslim MPs and Muslim Ministers are happy & fully accepted the Govt’s actions (as they are still part & support same Govt),

    Then...why do a few Muslim guys still blaming the Govt?

    Don’t you know that your Muslims MPs represent you (all SL Muslims) at the parliament?

    ReplyDelete
  4. இந்த விடயம் கருத்தில் கொல்லப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால் நாட்டுக்கு பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது, கீர்த்தி குறைகிறது, என்று தான் யோசிக்கிறார்களே ஒழிய ஒரு நாட்டின் அடித்தளமாகிய சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, ஒரு இனத்துவேசம் உள்ள சிங்கள போலீசும், பாதுகாப்பு படையும் இருப்பது எவ்வளவு பாரதூரமான விடயம் என்பது புரிந்தும் புரியாமல் இருப்பதுவும் ஒரு வகையான இனத்துவேசமே. இந்த விடயத்தை துணிந்து எடுத்துக் கூறுவதட்கும் தங்களுக்கான உரிமை, இந்த நாட்டின் அரசியல் சாசனம் போலீசாலும் பாதுகாப்பு படையாலும் மீறப்பட்டுள்ளது, அதை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களை எடுத்து கூற வக்கில்லாதவர்களாகவும், அவைகளை உறுதிப்படுத்துவதட்கு உரிய அரசியல் அதிகாரங்களை உபயோகிக்க முடியாதவர்களாகவே இந்த ஹக்கீமும், றிஷாத்தும் உள்ளார்கள். நமது இந்த நிலைக்கு முழுக்காரணமும் இவர்களையே சாரும். தலைவர் அஷ்ரப் அவர்கள் இருந்திருந்தால் நிட்சயம் தனது அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்து விட்டு எதிரணியில் இருந்து கொண்டு இருப்பார்கள். களநிலவரத்துக்கு ஏட்ப தனது அரசியல் காயை ( அரசை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ ) நகர்த்தியிருப்பார்கள். இவர்களுக்கு அந்த அளவு அரசியல் அறிவும் தூர நோக்கும், துணிவும் கிடையாது. தேர்தல்கள் வந்தால் மட்டும் பெரிய கட்சிகளிடம் இருந்து பணத்தையும் பதவிகளையும் பேசி பெற்றுக்கொள்வார்கள். நிட்சயம் முஸ்லீம் சமூகம் ஒரு மூன்றாவது அரசியல் சக்தியை ( சிங்கள, தமிழ், முஸ்லீம், மக்களை கொண்ட உதாரணமாக விஜயகுமாரதுங்கவும், சந்திரிக்காவும் சேர்ந்து உருவாக்கிய புதிய அரசியல் சக்தி) உருவாக்க வேண்டும். சிந்திப்பார்களா முஸ்லீம் புத்தி ஜீவிகளும், அரசியல் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும்..

    ReplyDelete
  5. இந்த விடயம் கருத்தில் கொல்லப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால் நாட்டுக்கு பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது, கீர்த்தி குறைகிறது, என்று தான் யோசிக்கிறார்களே ஒழிய ஒரு நாட்டின் அடித்தளமாகிய சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, ஒரு இனத்துவேசம் உள்ள சிங்கள போலீசும், பாதுகாப்பு படையும் இருப்பது எவ்வளவு பாரதூரமான விடயம் என்பது புரிந்தும் புரியாமல் இருப்பதுவும் ஒரு வகையான இனத்துவேசமே. இந்த விடயத்தை துணிந்து எடுத்துக் கூறுவதட்கும் தங்களுக்கான உரிமை, இந்த நாட்டின் அரசியல் சாசனம் போலீசாலும் பாதுகாப்பு படையாலும் மீறப்பட்டுள்ளது, அதை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களை எடுத்து கூற வக்கில்லாதவர்களாகவும், அவைகளை உறுதிப்படுத்துவதட்கு உரிய அரசியல் அதிகாரங்களை உபயோகிக்க முடியாதவர்களாகவே இந்த ஹக்கீமும், றிஷாத்தும் உள்ளார்கள். நமது இந்த நிலைக்கு முழுக்காரணமும் இவர்களையே சாரும். தலைவர் அஷ்ரப் அவர்கள் இருந்திருந்தால் நிட்சயம் தனது அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்து விட்டு எதிரணியில் இருந்து கொண்டு இருப்பார்கள். களநிலவரத்துக்கு ஏட்ப தனது அரசியல் காயை ( அரசை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ ) நகர்த்தியிருப்பார்கள். இவர்களுக்கு அந்த அளவு அரசியல் அறிவும் தூர நோக்கும், துணிவும் கிடையாது. தேர்தல்கள் வந்தால் மட்டும் பெரிய கட்சிகளிடம் இருந்து பணத்தையும் பதவிகளையும் பேசி பெற்றுக்கொள்வார்கள். நிட்சயம் முஸ்லீம் சமூகம் ஒரு மூன்றாவது அரசியல் சக்தியை ( சிங்கள, தமிழ், முஸ்லீம், மக்களை கொண்ட உதாரணமாக விஜயகுமாரதுங்கவும், சந்திரிக்காவும் சேர்ந்து உருவாக்கிய புதிய அரசியல் சக்தி) உருவாக்க வேண்டும். சிந்திப்பார்களா முஸ்லீம் புத்தி ஜீவிகளும், அரசியல் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும்..

    ReplyDelete

Powered by Blogger.