Header Ads



"ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சி அமைக்க சந்தர்ப்பம் வழங்குவது நகைப்பிற்குரியது"

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வார இறுதி ஊடகமொன்றுக்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்...

தலைமத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஐக்கிய தேசியக் கட்சி சிக்கியுள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சி அமைக்க சந்தர்ப்பம் வழங்குவது நகைப்பிற்குரியது.

ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சிறுகட்சிகளுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு 102 ஆசனங்களே உண்டு.

சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி ஆட்சி அமைக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.

எனவே, சுதந்திரக் கட்சியின் ஆதரவு இன்றி ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆட்சி அமைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.