Header Ads



ஹபாயா வேண்டாம், சேலை போதும்..!!

இந்த பதிவின் தலைப்பின் ஒரு பகுதியை மட்டும் தந்துள்ளேன் இதன் மிகுதி பகுதியை சரியான வார்த்தைகளை கொண்டு பூர்த்தி செய்யும் பொறுப்பை மதம் கடந்து வேண்டுகிறேன்

தற்காலம் நாம் வாழும் பகுதிகளில் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு இல்லாத நிலை காணக்கூடியதாக இருக்கிறது இது சிறிய அளவில், அரசியல் லாபத்திட்காக செய்யக்கூடிய ஒன்றாக இருந்த போதிலும் பெரும்பாலும் சில தர்க்க ரீதியான உண்மைகளை நாம் மறந்து அதட்கு எதிராக செயல்படுவதுதான் வருத்தத்தை தருகின்றது இன்னும் இது படித்த கல்விமான்களிடத்தில் காணக்கூடியது, இன்னும் பேரதிர்ச்சியை தருகின்றது.

கடந்து போன வாரங்களில் ஆடை சம்பந்தமாக சில பிரச்சினைகள், வாதப்பிரதிவாதங்கள் போராட்டங்கள் போன்றவற்றை நாம் கண்டோம் இது எந்த அளவு முட்டாள்தனமானது என்பதை நாம் சிந்திக்க தவறிவிட்டோம் அதை இங்கு சுட்டிக்காட்டவே நான் விரும்புகிறேன்.

முதலில் ஒரு மனிதனது ஆடையை எந்த காரணிகள் தீர்மானிக்கின்றன என்று நாம் பார்ப்போமேயானால் பிரதான காரணியாக அவன் வாழும் நாட்டினது அல்லது தேசத்தினது தட்ப வெப்ப நிலையில்தான் தங்கியிருக்கின்றது அதட்கு ஏற்றாற்போல்தான் ஒவ்வொரு மனிதனும், விலங்கும் தன்னை தயார்படுத்திக்கொள்கின்றன. உதாரணமாக கடும் குளிர் பிரதேசங்களான அந்தாட்டிக்கா போன்ற இடங்களில் நாம் ஆடையை பற்றி சர்ச்சை செய்வோமா? அங்கு நம்மை காத்துக்கொள்ளும் கடினமான கம்பளி ஆடைகளைத்தான் அணிவோம். இன்னும் வெப்ப வலய தேசங்களில் இந்த கம்பளியினால் ஆன ஆடையை அணிவதில்லை மாறாக சூரிய வெப்பம் உள்வாங்காத ஆடைகளை தெரிவுசெய்து அணிவோம்.

மற்றுமொரு பிரதான வாதமாக கலாச்சாரம் என்ற ஒரு கருப்பொருளை வைக்கின்றனர். இந்த கலாச்சாரம் எதன் அடிப்படையில் எழுகின்றது என்று பார்ப்போமேயானால் மதத்தை வைத்துத்தான் சொல்கிறார்கள். நாங்கள் இந்து எங்களுக்கு என்று ஒரு தனி கலாச்சாரம் உண்டு என்று சொல்கிறார்கள். இவர்களிடத்தில் ஒரு கேள்வியை நாம் கேட்க விரும்புகின்றோம். அதாவது நீங்கள் இந்துவாக பிறக்க வேண்டும் என்பதை தீர்மானித்தது யார்? அத்தோடு நீங்கள் இந்துவாகத்தான் பிறக்கவேண்டும் என்பதட்காக நீங்கள் செய்த முயட்சிதான் என்ன? இந்த இரண்டு கேள்விகளுமே  விடை தெரிந்த ஒரு சிறந்த சிந்தனையாளனுக்கு போதுமானதாகும்.

இந்த பூமியில் வாழும் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவன் இருக்கும் தேசமோ, பேசும் மொழியோ, சார்ந்த மதமோ அவனால் தீர்மானிக்க படுவதும் இல்லை அதட்காக யாரும் எந்த முயட்சியும் போராட்டங்களும் செய்வதில்லை இது யதார்த்தமான உண்மை அல்லவா? இதில் என்ன வேடிக்கை என்றால் திருகோணமலை உள்ள அந்த பாடசாலையில் சேலைக்கு ஆதரவாக  போராட்டம் நடத்தியவர்கள், வேறு மதம் சார்ந்து பிறந்து இருப்பார்களேயானால் சேலைக்கு எதிர்த்து போராட்டம் அல்லவா நடத்தியிருப்பார்கள்? எனவே பிறப்பு, இறப்பு என்பது நாம் தீர்மானிப்பதில்லை அதட்கு இடைப்பட்ட வாழ்வே நம் கையில் உள்ளது அது நமக்கும் பிரமனிதனுக்கும் நன்மை உள்ளதா? என்பதை கவனத்தில் கொள்வதுதான் மனித நேயம்.
மனிதனுடைய வாழ்க்கை கட்காலத்தில் இருந்து நவீன காலம் வரைக்கும் முன்னேறி வந்து கொண்டுள்ளதே தவிர மனிதனும் அவனுடைய உணர்வுகளும் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாத ஒன்று. ஒரு ஆணின் அங்க அவயங்களும் ஒரு பெண்ணின் அங்க அவயங்களும் மாறாத ஒன்று. இது காலத்தால் மாற்றம் அடைந்துள்ளதா? இந்த அங்க அவயவங்கள் இருவருக்கும் சமமானதாக கருத முடியாது. பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை இருந்தாலும் சில விடயங்களில் அந்த சம உரிமை இல்லாது போகின்றது அதில் ஒன்றுதான் இந்த ஆடையாகும்.  ஒரு பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்னவெனில் ஒரு வயது வந்த  ஆண் அணிந்துகொள்ளும் குறைந்த பட்ச ஆடையை ஒரு வயது வந்த பெண்ணுக்கு போதுமானதா? என்று கேட்போமேயானால் எந்த ஒரு ஒழுக்கமுள்ள மனிதனும் இல்லை என்ற பதிலே சொல்வார்கள். வீடாக இருந்தாலும் சரி தந்தைக்கு முன்னாள் வயது வந்த மகன் ஒரு கால் சட்டையை மாத்திரம் அணிந்து கொண்டு இருக்க முடியும் அதே கால் சட்டையை மட்டும் ஒரு வயதுக்கு வந்த மகளால் இருக்க முடியுமா? ஒரு தந்தைக்கு முன்னாடியே இந்த நிலைமை என்றால் அப்போ அந்நியர்களுக்கு முன்னால்?

கடவுள் எல்லா இனங்களுக்கும் இனவிருத்தி செய்தல் என்ற ஒரு செயல்பாட்டை வைத்துள்ளார் இந்த இனவிருத்தி இல்லை என்றால் மனித குளம் பல்கி பெருகாது. இந்த இன விருத்தி   செய்வதட்காகவே ஆண் இனத்தை பெண் இனம் கவரும் வகையிலும், பெண் இனத்தை ஆணினம் கவரும் வகையிலும்  இயற்கையாகவே சில பிரத்தியோக அம்சங்கள் காணப்படுகின்றன இது தாவர விலங்குகளிடத்திலும் உண்டு தன் மகரந்த சேர்க்கை, அயன் மகரந்த சேர்க்கை என்றெல்லாம் உண்டு என்பது படித்த மாணவர்களுக்கு தெரியும் .

கடவுள் மனித இனத்தை பொறுத்தவரையில் இந்த ஈர்ப்பு தன்மையை பெண்ணுக்கே அதிகளவில் கொடுத்திருப்பது நாம் சொல்லாமலே எல்லோரும் அறிந்துகொண்ட ஒரு விடயம். இந்த அடிப்படையில் ஆணை விட  பெண்ணுக்கு உடலில் கவரக்கூடிய கணபரிமாணங்களை வைத்திருப்பது அந்த கவர்ச்சிக்கு பெரும்பங்கை வழங்குகின்றது.

இந்த கவர்ச்சியை நாம் யாருக்கு காட்டவேண்டும் என்பதைத்தான் இந்த சமூகம் சிந்திக்கவில்லை. விலங்குகள் போன்ற ஒரு வாழ்க்கையை மனிதன் வாழவில்லை. விலங்குகளுக்கு ஒரு குடும்பம், சமூகம் என்ற ஒரு கட்டமைப்பு  இல்லை.  எந்த விலங்கும் அதன் இனத்துடனுன் எத்தனை  விலங்குகளுடனும் கலவியில் ஈடுபடும். மனிதன் அவ்வாறில்லை அவனுக்கு குடும்பம் என்ற கட்டமைப்பும், அதைத்தாண்டி சமூகம் என்ற கட்டமைப்பும் உண்டு. இன விருத்திகூட கண்டபடி செய்வதில்லை அதட்கு நெறிப்படுத்தப்பட்ட முறைமை உண்டு அது திருமணம் என்ற பந்தத்தில் கட்டுண்டு இருப்பதை நாம் அறியாத ஒன்றல்ல.

எனவே எந்த ஒரு பெண்ணும் தன உடல் அழகை தன் கணவனுக்கு அன்றி வேறு எவரையும் கவரவோ, எவருக்கும் காட்டவோ முடியாது என்ற ஒரு நிலையை ஏற்றுத்தான் ஆகவேண்டும். மாறாக பெண் சுதந்திரம் என்று பேசுவது முற்றிலும் இயற்கைக்கு முரணானது. இயற்கையை எந்த இடத்தில் மீறப்படுகின்றதோ அங்கு ஆபத்து உண்டு அதனால்தான் நான்கு சுவருக்குள் இருக்கவேண்டிய பெண்களின் கவர்ச்சிகள்  பெரு வழியில் மலிந்து காணப்படும்போது ஆண்கள் கவரப்பட்டு விபச்சாரம் என்ற சமூக சீர் கேட்டையும், பெண் இணங்காத பட்சத்தில் கடத்தல், கற்பழிப்பு, கொலை இது போன்ற மா பாதக செயல்கள் இடம்பெறுகின்றன. இத்தனைக்கும் பகுத்தறிவுள்ள  சிறந்த சிந்தனையுள்ள  எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வு ஒன்று உண்டு என்று சொன்னால் அது ஆடையை தவிர வேறில்லை. ஆண்களின் ஆடை, அது எந்த விதத்திலும் சமூகத்தை சீரழிப்பதில்லை ஆனால் பெண்களின் ஆடையில்தான் சமூக சீர்கேட்டின் ஆரம்ப புள்ளியாக இருக்கின்றது.

ஆடை என்பது குறைந்த பட்சம் இரண்டு விடயங்கள்  கவனத்தில் கொண்டாக்கவேண்டும்
1.        கணபரிமாணங்கள் தெரியும்படி இறுக்கமான ஆடை அணியக்கூடாது
2.        உள் உறுப்புகள் தெரியும்படியான  மெல்லிய ஆடை அணியக்கூடாது 

இந்த இரண்டுமே போதுமானதாகும். சாரி என்றழைக்கு சேலையை பொறுத்தவரையில் இது 100% முற்று முழுதாக கவர்ச்சிக்காக கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஆடை என்பது ஆணித்தரமாக சொல்ல முடியும் இதனால்தான் திருமணம் முடித்த அன்றைய முதல் இரவில் பெண்ணுக்கு சேலைக்கட்டி அனுப்புகிறார்கள். இந்த நடைமுறையில் உள்ள உதாரணமே போதுமே சேலை எந்த ரகத்தில் உள்ளது என்று இதட்கு மேல் கொச்சையாக எழுத முடியாது. இன்னும் முஸ்லீம் சமுதாயத்தில் யாரும் முதல் இரவில் ஹபாயா போட்டு செல்வதில்லை காரணம் அங்கு ஹபாயாக்கு வேலை இல்லை இதை புரிந்து கொண்டால் சரி

எனவே எனது அன்பு சகோதரிகளே ஆடை என்பது உங்களது முண்ணேற்றத்துக்கு தடையான காரியம் அல்ல மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சேலை அணிந்து கொண்டு முதலமைச்சராக பல தடவைகள், பல வருடங்கள் இருந்துள்ளார்கள் அந்த சேலை மேற் குறிப்பிட்ட இரண்டு விடயங்களை உள்ளடக்கி இருந்தது இந்த சேலை அவர்களது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கவில்லை. உங்களது பாதுகாப்புக்கும், கண்ணியத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த உங்களது ஆடையில் கவனம் செலுத்துங்கள். இன்னும் அறியாமல் கலாச்சாரம், உரிமை என்று சொல்வீர்களானால் நீங்கள் ஒரு அறிவுள்ள ஒரு சமூகம் என்பதை ஏற்க முடியாது.

அன்புடன் உடன் பிறவா சகோதரன்
அப்துர் ரஹ்மான்

5 comments:

  1. Good advice for educated society

    ReplyDelete
  2. நீங்கள் ஆண்கள் எல்லோரையும் காமுகனாகவும் கெட்டவனாகவும் அடையாளப்படுத்த பார்குகிறீர்கள் ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு வாழ்கை வழிமுறைகளை கடைப்பிடிக்குகிறார்கள் நல்ல பெற்றோர்களின் வளர்ப்பு உணவுப் பழக்கம் இன்னும் நிறைய விடயங்கள் உள்ளது உதாரணமாக நான் என்னைப்பற்றி குறியாக வேண்டும் தற்பொழுது திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் நான் எந்த பெண் பிள்ளைகளை கண்டாலும் என் மகள் வளர்ந்தால் இப்படிதான் இருப்பார் என மகளை முன்னிருத்துவேன் ஆண்கள் காமுகண் அல்ல

    ReplyDelete
  3. Varan அவர்களே உங்கள் கருத்து சரியானதே எல்ல ஆண்களும் காமுகணல்ல.நாம் நமது வீட்டின் கதவை அடைப்பதன் அர்த்தம் பக்கத்து வீட்டார் கள்வன் என்பதற்காக அல்ல.

    ReplyDelete
  4. samookathil ellorum kaamukaraai irukka vendum enru avasiyamillai. aasifa ponru oreyoru kulanthai kooda seeralikkap padak koodaathu enkinra perunthanmai koodavaa unkalidam illai.neenkal thoondi viduveerkal atharku veru yaaro vilai kodukka vendum. enna logic thambi ithu.

    ReplyDelete
  5. Mr. Varan; ஐந்து விரலும் ஒரே அளவிலா இருக்கின்றது. எல்லோரும் றோட்டில் நடந்து செல்லும் போது வலது பக்கமாக செல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? அதனை பொது சட்டமாக கொண்டு வந்தால் சரிதானே! மனித உணர்வுகளிலும் ஏற்றத்தாழ்வு உண்டு என்பதை புரிந்து, அறிந்து கொள்ளும்.

    ReplyDelete

Powered by Blogger.