April 26, 2018

சன்முஹா மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு, பின்னால் உள்ளவர்களை கண்டுபிடிக்கவும்

சன்முஹா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் – திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இம்ரான் எம்.பி உத்தரவு

சன்முஹா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார,  திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். திருகோணமலை சன்முஹா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சட்டம் ஒழுங்கு’ அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார ஆகியோருக்கிடையில் இன்று -26- நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த இம்ரான் எம்.பி,

இந்த கல்லூரியில் நடந்தாக கூறப்படும் பிரட்சனையை அதிகாரிகள் மட்டத்தில் பேசி தீர்வொன்றை கண்டிருக்க முடியும். ஆனால் இவ்வாறானதொரு ஆர்பாட்டம்ஒன்றை நடாத்த வேண்டிய தேவை யாருக்கு காணப்பட்டது.

அந்த ஆர்பாட்டத்தில் ஏந்தியிருந்த பதாதைகள் இந்த ஆர்பாட்டத்தின் நோக்கத்தை தாண்டி இனவாதத்தையே பிரதிபலித்தது. ஆகவே இந்த பிரட்சனையை பயன்படுத்தி யாராவது அரசியல் லாபம் தேட முயற்சித்தார்களா என ஆராய வேண்டிய தேவை உள்ளது.

ஏன் எனில் மூவினமும் ஒற்றுமையாக வாழும் இந்த மாவட்டத்தில் இந்த ஆர்பாட்டத்தின் பின் இனவாத கருத்துக்கள் பரப்பபடுகின்றன. முஸ்லிம் ஆசிரியர்கள் தமது கலாச்சாரஆடை அணிந்து வர மறுக்கப்பட்டுவதால் இன்று முஸ்லிம் பாடசாலைகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் காலச்சார பிரதிபலிக்கும் ஆடை அணிகலன்களை அணியக்கூடாது என கூறி இரு இனங்களுக்கு மத்தியில் முறுகல் ஒன்றை ஏற்படுத்த மூன்றாம் தரப்பொன்று முயல்வதாகவே தோன்றுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர் ஆர்பாடட்டம் முஸ்லிம் பிரதேசங்களிலும் நடாத்தப்பட்டு இது நாடு முழுவதும் பரவுகின்ற அபாயம் காணப்படுகிறது. இது இரு சமூகங்களுக்கு மத்தியில் முறுகல் நிலையை தோற்றுவிப்பது மட்டுமல்லாமல் இரு சமூகங்களின் கல்வி நடவடிக்கைகளையும் பாதிப்புக்குள்ளாக்கும்.

எனவே இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யார்? இந்த ஆர்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா? அவ்வாறாயின் யாருக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது? என கண்டுபிடித்து அவர்களுக்கு பின்னால் அரசியல் லாபம் ஏதும் உண்டா என விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் திருகோணமலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் இதே போன்ற ஒரு பிரட்சனை சிறிஜெயவர்தனபுற ஜனாதிபதி வித்யாலயத்திலும் ஏற்பட்டு அது உயர் நீதிமன்றம் வரை சென்றது அந்த’ மதத்தவர் தமது மதத்தை பிரதிபலிக்கும் கலாச்சார ஆடைகளை அணிவதில் எந்த தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்பளித்தது நினைவுகூறத்தக்கது என தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு

9 கருத்துரைகள்:

உங்களின் பாரம்பரியத்தை நீங்கள்தான் கட்டி காக்க வேண்டுமே தவிர நாங்கள் இல்லை உங்கள் பாரம்பரியத்தை நீங்கள் விட்டு கொடுக்காத போது நாம் மட்டும் விதிவிலக்கா

கல்லூரி அதிபர், இந்துத்துவா, சிவ சேனாக்களுடன் தொடர்பு உள்ளவரா என்று பொலிஸாரைகொண்டு தீர விசாரிக்க வேண்டும்.

Yes, please arrest and bring those radical islamic criminal front of justice.We may
See the double game of Imran also to got to know the real face of racial fundamendalism.

மஹ்ரூப் அவர்களின் பொதுநல உணர்வை மதிக்கிறோம். ஆனால் அந்த பாடசாலையின் அதிபர் இந்த நாட்டின் சட்டத்தையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி உள்ளார். அவர் ஒரு இனத்துவேச அதிபர். அவர் நிட்சயம் கேள்விக்குட்படுத்தப்படுவதோடு. அவர் மீது சட்ட நடவெடிக்கையும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் அடிப்படை உரிமையில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடம் இல்லை. இதில் மஹ்ரூப் அவர்கள் உறுதியாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

The racist Principal should be arrested soon.

And the racist teachers who protested on the street without any permission from Police also should be arrested and should be produced in the court.

Sampanthan tna,

சிவா சேனா ஒன்றும் ஐஸ் ஐஸ் தீவிரவாதிகள் அல்ல. அது ஒரு அரசியல் கட்சி மட்டுமல்லாது இஸ்லாமிய தீவிரவாதத்தை மகாராஷ்டிரா மண்ணில் அழித்தொழிக்க வந்த மக்கள் சேனை தான். அதில் அங்கத்தவராக இருந்தால் அதுவொன்றும் இலங்கை சட்டத்தின் பிரகாரம் குற்றம் அல்ல. மீறி இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரித்தால் அதட்கு இலங்கை மக்களே தக்க படம் புகட்டுவார்கள். கருத்தடை மாத்திரை கலந்தால் போல , அப்பாவி வேற்றினத்தவர்களை கொன்றால் போல. அனுபவித்து ஒரு மாதம் கூட இல்லை. அதட்குள் நீஙகள் ஜிஹாதை இலங்கையில் கொண்டுவர முட்படுகிண்றீர்கள்.

When someone talks about law, order, fundamental rights enshrined in the constitution he is called Muslim Extremist by RSS, BJP and LTTE backers in this country. CID should look into this from all angles and taken those responsible into custody.

The way of intervention of Mr. Anushath Chandrabal seems to be something wrong here. His statement may be make it true what Hon. Member of Parliament said.

We will eradicate Hindu terrorism from this country very soon.

Post a Comment