Header Ads



ரணில் சொன்ன நகைச்சுவை

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிற்கு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் பதவியொன்றை வழங்க அனுமதிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் குறித்த வாக்கெடுப்பின் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து பிரதமர் ரணில், மஹிந்தவிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டு வந்து தமது பலத்தை நிரூபிப்பதற்கு உதய கம்மன்பில உதவியதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனவே உதய கம்மன்பிலவிற்கு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவியொன்றை வழங்க விரும்புவதாகவும் அதுவே சரியான நன்றி பாராட்டுதலாக அமையும் எனவும் பிரதமர் கூறியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. அப்படியே இனவாதியும், விஷம்கக்கியுமான சம்'பக்க'யா க்கு ஜனாதிபதி சீட்டொன்றும் கொடுக்கனும்.

    ReplyDelete

Powered by Blogger.