Header Ads



ஜனாதிபதியை வெவ்வேறாக சந்திக்கும், சுதந்திர கட்சி அமைச்சர்கள்

அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் வாக்களிப்பில் பங்கேற்காத ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் வெவ்வேறாக ஜனாதிபதியை சந்தித்துப் பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்களிப்பில் பங்கேற்காத ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஜனாதிபதி சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சந்திப்பின் பின்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்துப் பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சந்திப்பு இன்று இரவு 07.00 மணியவில் இடம்பெற உள்ளதாக அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே செனவிரத்ன கூறினார்.

No comments

Powered by Blogger.