Header Ads



மிருக ஆசாத் மற்றும் ரஷ்யா - ஈரான் அதிக விலை கொடுக்க நேரிடும் அமெரிக்கா எச்சரிக்கை

கடந்த சனிக்கிழமையன்று கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் டவுமா நகரில் டஜன் கணக்கான மக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இன்று விசாரணை நடத்துகிறது

சிரியா மற்றும் ரஷ்யா ரசாயன தாக்குதல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்றன. ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அடுத்து பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில்,

"தற்காப்பு இல்லாத மக்கள் மீது இத்தகைய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்துவதை எதை கொண்டும் நியாயப்படுத்த முடியாது" என போப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகள் இது குறித்து பேச வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிரியாவின்  ராணுவ விமான நிலையத்தில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.பல ஏவுகணைகள் தய்பூர் விமான நிலையத்தை நோக்கி வீசப்பட்டு உள்ளன. எங்கள் விமான பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணை தாக்குதலை தடுத்துள்ளன.  "இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்" துல்லியமான கணக்கு தெரியவில்லை என கூறி உள்ளன.

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில்,  மிருக ஆ சாத் மற்றும் அவரின் கூட்டாளியான ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு "அதிக விலை கொடுக்க நேரிடும்" என எச்சரித்துள்ளார்.டிர்மப் தனது டுவிட்டரில்  சிரியாவில்  நடந்த  இரசாயன தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல உயிரிழந்து உள்ளனர். என கூறி உள்ளார்.

1 comment:

  1. ஓனாய் ஏன் அழுகின்றது?

    ReplyDelete

Powered by Blogger.