April 15, 2018

ஜுப்பா - அபாயாக்களை நீக்கிவிட்டால், பிரச்சினை முடிந்துவிடுமா..?

"முஸ்லிம்களது சமகால பிரச்சிணையும், தீர்வும்" - ஒரு ஆய்வு

-Nawas Dawood-

முஸ்லிம்களாகிய நம்மில் உள்ள சமூக நலன் விரும்பிகள் எவ்வாறு  தமது சமூகத்தைப்பற்றி கவலைப்படுகின்றனரோ அது போலவே,

பேரினவாதிகளினது அமைப்புக்களும் ஒரு சில பெரும்பான்மை இன கட்சிகளின் அரசியல்வாதிகளும் ஒருங்கிணைந்து  சோடிக்கப்பட்ட காரணிகளை சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம் மக்களுக்கு எதிரான அராஜக கட்டவிழ்ப்புக்களை மேற்கொண்டுள்ள போதும் 2012 களில் இருந்து இன்று வரை பொளத்த இன மக்களிடையே  முஸ்லிம் மக்களுக்கு விரோதமான இச்செயற்பாடுகளுக்கு  பலமான காரணியாக  ஊட்டி விடப்பட்டதொன்றாக பொதுவானதும்  வலுவானதுமான காரணியாக உள்ள அம்சம் எதுவெனில் ,

முஸ்லிம்கள் அரேபிய நாடுகளின் செல்வாக்கைப் பெற்று நமது இலங்கையை இஸ்லாமியப்படுத்த திட்டங்கள்  வகுக்கின்றனர் என்றும்  அவர்களுக்கு இவ்வாறான செயற்பாடுகளுக்கு கோடி கோடியாக பணம் சவூதி, குவைத் , ஈரான் போன்ற நாடுகளில் இருந்து  தருவிக்கப்படுகிறது  என்றும் அந்நாடுகளே பள்ளிவாயல்களையும். முஸ்லிம்களுக்கு ஏனைய அணைத்துவிதமான வாழ் வாதாரங்களையும் அமைத்துக்கொள்ள உதவுகின்றனவென்றும் கூறி இதை நாம் கவணிக்காது விடும் பட்சத்தில் நாம் துரத்தப்பட்டும் விடுவோம் என்றும் இதை நாம் கண்டும் காணாது இருக்கையில்  மக்களான நமக்கு இவ்விலங்கையை விட்டால் வேறு எந்த போக்கிடமும் இல்லை. என்ற ரீதியில் அம்மக்களை மூளைச்சலவை செய்து அவர்களது சிந்தணையில் ஓரு சில மக்களுக்கு பீதியையும் அம்மக்களில் மற்றொரு  சிலருக்கு முலையிலேயே கிள்ளி விட வேண்டும் என்ற கவலைகளும் அச்சமுமேயாகும் எனினும்  எஞ்சியுள்ள ஏனைய மக்கள் இது புரளி என அறிந்து அமைதியாக உள்ளனர்.

அதனால்தான் பொளத்த  மக்களிடையே  உள்ள ஒரு சில நல்லுள்ளங்களைக் கொண்ட சமூகத் தலைவர்களில் சிலர் முஸ்லிம்களில் உள்ள ஆண்களையும் பெண்களையும் அரேபிய கலாச்சார ஆடைகள் அணிவதை தவிர்க்கும்படியும் பள்ளிவாயல்களையும் நல்லிணக்க விடயங்களுக்கு பாவிக்குமாறும் அறிவுரை கூறி வருகின்றனர் . இதைக் கருத்தில் கொண்டே நமது மார்க்க போதகர்களும் இவர்களது அறிவுரையை செவிமடுத்து மக்களுக்கு ஆலோசணைகளையும் கூறிவருகின்றனர்.  இது வரவேற்கத்தக்க ஒன்றேயாகும்.

ஒரு வேளை இதனால் குறிப்பாக, சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பெண்கள் சொற்ப காலங்களுக்கு பேரினவாதிகளில் உள்ள காடையர்களிடம் இருந்து விதன்டா வாதங்களையும்  ஒரு சில அசொளகரியங்களையும் தவிர்த்துக் கொள்வதற்கு அரேபிய ஆடைகளை தவிர்ப்பதன் மூலமாக இசைவான காரணியாக இருக்கும். 

அது போலவே ஆண்களும் தமது ஜுப்பாக்களை களைவதன் மூலமாகவும் பள்ளிகளில் ஒலியை மட்டுப்படுத்துவதனினூடாகவும் அவர்களில் ஒரு சிலரை திருப்தியிற்குள்ளாக்கலாம்.  அத்துடன் அரேபிய கலாச்சாரம் நமது உடைமையும் இல்லை . அக்கலாச்சாரம் இலங்கை மக்களான நமக்கு ஏதுவான ஒன்றும் அல்ல. 


ஆனால், காடையர்கள்  நம்மீது படை எடுத்து தாக்குதலை ஏற்படுத்த  இவைகள் அல்ல காரணிகள் என்பதை நாம்  ஐயங்களின்றி மிகவும் தெளிவாக பரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமானதாகும் .

கவணியுங்கள்,
தாக்குதல்தாரிகளில் பலருக்கு நாம் ஏன் தாக்கினோம் என இதுவரை தெறியாதர்களும் உள்ளனர். ஆனால் தாக்கினர். இன்னும் ஏன் தாக்குகின்றோம் என்பதை அறியாமலேயே தாக்குவர் அது அவர்களுக்கு பொழுது போக்கும்  களவாட ஓரு அங்கிகாரமுமாகும்.

2012 இன் பொது பல சேனாவின் துவக்க காலப்பகுதியில் விற்பனை உணவுப் பண்டங்களில் ஹலால் முத்திரை பதிப்பதை ஹராம் என வாதிட்டு முரண்பட்டனர். அரசிடம் முறையிட்டோம் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள் என்றார்கள் . பேசியதற்கு இணங்க விட்டுக்கொடுத்தோம்.

தம்புல்ல பள்ளிவாயல் அவர்களது புனித பூமியில் உள்ள ஒன்றுவென வாதிட்டு  பள்ளியின் உள்ளே புகுந்து புனித அல் குர்ஆன் உற்பட அணைத்தையும் நாசம் செய்து விட்டு கைக்குண்டுகளையும் எரிந்து விட்டுப் போனார்கள். அரசிடம் முறையிட்டோம். அப்பள்ளியின் நிலத்தை கொடுத்து விடுங்கள் வேறு இடத்தில் அமைத்து தருகின்றோம் என அரசும் சமரசம் செய்து வைத்தது. நாமும் சரி என்று விட்டுக் கொடுத்தோம்..

2015யில் அலுத்கம நகரில் முஸ்லிகளுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட கட்டுக்காலிகளின் அட்டகாசங்களினால்  முஸ்லிம் இளைஞர் ஒருவருடைய உயிர் உற்பட(அவரை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக) பள்ளிவாயல் மற்றும் 72 இற்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் வீடுகளும் வாகனங்களும் உடைமைகளும் தீக்கிரையாகின,  அப்போதைய மஹிந்த அரசிடம்  முறையிட்டோம்.

மண்ணியுங்கள் எங்களுக்கும் கவலையாகவே உள்ளது. பொலிஸாரும் இராணுவமும் தமது கடமையை சரி வரச் செய்யவில்லை. நடவடிக்கை எடுத்துள்ளோம். 22 சிங்கள இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அன்றைய மஹிந்த அரசு கூறியதையே  இன்றும், இன்றைய  ஜனாதிபதி மைத்திரியும்  பிரதமர் ரனிலும் அச்சு பிசகாமல் கூறினார்கள்.

ஒரு வேளை அவ்22 காடையர்களும் 2018 இன் தாக்குதல்களிலும் அனுபவங்களுடன் வேகமாக அடித்தும்  கொழுத்திக் கொண்டும் முன்னேறி இருப்பார்கள் போலும்.  இவ்வாறு இது தொடர்கதையாகவே உள்ளது . எனினும்  நாம் விட்டுத்தான் கொடுத்தோம். ஏனெனில் நாம் சிறுபான்மையினர் என்பதனாலாகும். 

இன்னும் அதைத்தான் செய்தும் வருகின்றோம். எதுவரை எனில் பள்ளிவாயல்களில் இறை நிராகரிப்பாளர்கள் அவர்களது  மார்க்க அனுஷ்டானங்களை    ஏகத்துவத்திற்கு பதிலாக மாற்று விக்ரக கடவுள்களை  பிராத்தனை செய்யும் தருவாய்வரை நீடித்தது.

அத்துடன் நில்லாது அவர்களது  திருநாட்களின் போது சகவாழ்வு என்பதற்கமைய  குத்து விளக்குகளை ஏற்றி மார்க்க அனுஷ்டானங்களையும் நமது உலமாக்கள் செய்து வந்ததைக் காண்கிறோம்.   ஒரு வேளை அவ்வாறான செய்கைகளுக்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எனினும் இவ்வாறான செய்கைகள் நாளை நமது சமூகத்தில் தொற்றி அது ஒரு சாதாரண நிகழ்வாக கருதப்பட்டு ஷிர்க் வரை கொண்டு செல்லப்பட்டு இன்னும் இன்னும் இறை கோபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்பதை மார்க்க அறிஞர்கள் மறுப்பதற்கில்லை.  

சரி . இருக்கட்டும். நாம் சிறுபான்மையினர் அல்லவா , மாற்று வழியில்லை. ஒரு சில தவறுகள் நடந்து விட்டது .  எனினும் விட்டுக் கொடுப்போம். 

இங்கு நாம் சிந்திக்க வேண்டிய தொன்று என்னவெனில் நாம் யாருக்காக விட்டுக்கொடுக்கின்றோம்  என்பதுதான். எதனை அடிப்படையாகக் கொண்டு விட்டுக்கொடுப்புக்கள் செய்கின்றோம். 

அவ்விட்டுக்கொடுப்புக்கள் எதுவரை நிகழ்த்த வேண்டிய தேவை உள்ளது என்பதை நமக்கு கற்றுத்தருவது யார் ! 

உங்களது பிரதேசங்களில் வாழும் பெரும்பான்மை பொளத்த மக்கள் இவ்வாறான விட்டுக்கொடுப்புக்களை நீங்கள் செய்தால், உங்களது பள்ளிவாயலுக்கு அவர்களை வருவதற்கு  அனுமதித்தால், உங்களது ஜுப்பாக்களையும், தாடிகளையும், தொப்பிகளையும், அபாயாக்களையும் களைந்தால்தான் நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்வோம் என்றோ உங்களது வனிகத் தளங்களுக்கு விஜயம் செய்வோம் என்று உங்களது அண்டைய பொளத்த மத வீட்டார் கூறினார்களா ! என வினவினால் விடைகளை இல்லை என்பீர்கள். அவ்வாறெனில், நாங்கள் சிறுபான்மை என்பதற்கு அமைய யாருக்கு விட்டிக்கொடுப்பது!!

ஒரு வேளை இலங்கையில் உள்ள சுமார் ஒன்னரைக் கோடி பொளத்த மக்களில் குறைந்தது அறைக்கோடி மக்களேனும் இவ்வாறான கருத்தைத் தருவார்கள் எனில்  மகிழ்ச்சியாக விட்டுக்கொடுத்து விட்டு வாழ்ந்து விட்டுப் போகலாம்.

அதுவும் இல்லை, சரி,

பேரினவாத அமைப்புக்களான சண்டைக்காரர்கள் நிபந்தனைகளை இட்டு ஒரு உடன்படிக்கைக்கு வருவார்களேயானால் மீள் பரிசீலணை செய்யலாம். அதுவும் இல்லை.

எனில்,

மீண்டும் ஒரு முறை நம்மை நோக்கி தாக்குகையில், இனி ஹிஜாப் அணிய வேண்டாம் என அறிவுரை கூறுவர் , அதையும்தான் விட்டுக்கொடுப்போம். 

சில காலங்கள் சென்றதன் பின்னர்  மீண்டும்தான் அடிப்பார்கள். குட்டைப்பாவாடைகளை  அணிவோம் என்பார்களா!!.... 

திரும்பவும் அடிப்பார்கள். ! முஸ்லிம்களான நாம் இன்று நாதியற்ற சமூகமாக அல்லவா உள்ளோம். 
வீதியோரத்தால் செல்லும் கழுதைகளும் நமக்கு அறிவுரைகள் கூறி அதைக்காது கொடுத்து கேட்க வேண்டிய சூழ்நிலையில் அல்லவா உள்ளோம்.

இதை விட இலகுவான வழிமுறை அவர்களது மதத்தை தழுவி விட்டதாக பிரகடனம் செய்து கொள்வது. அணைத்தும் சுமூகமாக முடிந்து விடும்.

இன்றைய காலங்களில் உலகில் உள்ள முஸ்லிம்கள் பரவலாக அவல நிலையிலும், சொல்லனா துன்பத்திலுமே வாழ்கின்றனர் என்பதை நாம் கவணிக்க வேண்டும். அந்த வகையில் சிந்திப்போமானால் நாம் இழந்தது அற்பமேயாகும்.

இலங்கையில் உள்ள ஏனைய சமூகத்தவரிடமும் குடிகாரன், குடுக்காரன், கொலைகாரன், பாதாளக்குழு, திருடன் என எல்லாம் உள்ளார்கள் அவ்வாறே முஸ்லிம்களிலும் இவ்வாறானவர்கள் உள்ளார்கள் என்பதற்காக அவர்களை இனம் கண்டு ஒவ்வொருவரையும் கண்கானித்து சண்டை பிடிப்பது என்பது முஸ்லிம்களின் உடைமையா அல்லது நாட்டில் உள்ள காவல் உத்தியோகத்தர்களின் கடமையா!

குடுக்காரர்களையும் குடிகாரர்களையும்  பிடித்து அடையுங்கள் என்றுதான் நாங்களும் கூறுகின்றோம்.

சர்வதேச கண்களுக்குள்ளேயே விரல்களை விட்டு கதிகலங்க வைத்த சகலகலா இராணுவ அணைத்து துறைகளிலும் வல்லமை பொருந்திய 30 வருட கால அனுபவம் கொண்ட விடுதலை புலிகள் இயக்கத்தை கூண்டோடு அழித்த இராணுவப்படைகளை கொண்ட உங்களால், வடக்கில் புலிகளின் அதியுயர் பீடத்தினர் படு இரகசியமாக கருத்தரங்குகளை நடாத்திக் கொண்டு இருக்கையில் மோப்பம் பிடித்து வானில் இருந்து இலக்கு தவறாமல் குண்டுகளைப் போட்டு  அவர்களது அரசியல் பொறுப்பாளர் தமிழ் செல்வன் உற்பட இன்னும் பலரை சிதற வைக்க முடிந்த உங்களால் பாதாளக் குழுவை இல்லாமல் செய்ய மூன்று நாட்களே அதிகம் இல்லையா!!

குடிக்காரர்களின் டெலிவரியை துடைத்தெறிய ஓரு நாளே போதுமா இல்லையா!!!!

நிற்க,

மட்டக்களப்பு  பகுதியில் சமீபத்தில் ஓரு சில தமிழ் இளைஞர்கள் குடிபோதையில் போலிஸ்  உயர் அதிகாரி ஒருவரை  இருவருக்கும் ஏற்பட்ட கைகலப்பில் இவ்வதிகாரி மரணம் அடைந்து விட்டதனைத் தொடந்து நாட்டில் உள்ள பௌத்த மக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக படை திரண்டு அவர்களது உடைமைகளை சேதப்படுத்தினார்களா, அல்லது கோயில்களைத்தான் தீயிட்டு கொளுத்தினார்களா !

இல்லையே!! 

இல்லை எனில் பிரச்சிணை பொளத்த மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இல்லை அல்லவா !

அவ்வாறெனில்!!!

நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சிணை முற்றிலும் வேறுபாடானது,  சரியான முறையில் சிந்தனைகள் ஒருங்கிணைந்து தீர்வுகளை எட்டாது செயல்படாது விட்டால், 

மீண்டும் கவணியுங்கள்,

நாளை நாமும் பல ஆஷிஃபாக்களை இழக்க நேரிடலாம். ( அல்லாஹ் பாதுகாப்பானாக)

ஷைத்தான் அபூ ஹுரைராவிற்கு (ரலி) ஆயதுல் குர்ஷியை கற்றுக் கொடுத்தது போலவே, நமக்கு விரோதமான இனவாத அரசியல்வாதியொருவர் , முஸ்லிம்களுக்கு மட்டுமே சரியான தலைவர் ஓருவர் இல்லை எனக் கூறிச் சென்றதை மக்களாகிய நாம்  கவணிக்க வேண்டிய  இக்கட்டான காலத்திலேயே உள்ளோம்.

இன்ஷா அல்லாஹ்  தொடர்ந்நு அலசுவோம்.

6 கருத்துரைகள்:

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்குர்ஆன் : 33:21)
www.tamililquran.com

This article is more suitable in this situation of Sri Lanka. Awesome

Misleading article. Offers no new insights. There is no single answer to this complex issue , we are looking at components of the greater solution. Please do not confuse the public.

Fantastic! Please write more. ..

Dont mention aasifa case.they recusm people will follow that way.pls dont be fool.pls use your mind.

Why this all news have to mention public must know our cituvation news media can't be shellfish.

Post a Comment