Header Ads



"ரோ" ஒற்றர்களாக இலங்கை, அரசியல்வாதிகள் செயற்படுவதாக குற்றச்சாட்டு

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலர் இந்தியாவின் ரோ புலனாய்வு அமைப்பினால், வழிநடத்தப்படுதாக தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மற்றும் கலாநிதி தயான் ஜயதிலக்க ஆகியோர் ரோ அமைப்பின் ஒற்றர்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரோ ஒற்றரான தயான் ஜயதிலக்க, கூட்டு எதிர்ககட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏமாற்றி, பந்துல குணவர்தன போன்றவர்களை அதில் நேரடியாக தலையிட வைத்துள்ளார் எனவும் வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கு சொந்தமான இணையத்தளம், வரலாற்றில் மிகப் பெரிய காட்டிக்கொடுப்புக்கு தயாராகும் கூட்டு எதிர்க்கட்சி என்ற தலைப்பில் இந்த செய்தியை வெளியிட்டிருந்தது.

இதன் மூலம் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பசில் ராஜபக்ச அணியினருக்கும் விமல் வீரவங்சவுக்கும் இடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகள் வெளிப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

விமல் வீரவங்ச உட்பட சிலரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து பசில் ராஜபக்சவுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

கூட்டு எதிர்க்கட்சியில் பேதங்களை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகும் அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

1 comment:

  1. இந்திய நாய் தேசத்தின் தலையீடு இலங்கையிலிருப்பது நீண்ட கால ஆபத்தான விடயமாகும். இந்திய ஒற்றர்களாக பல கடும்போக்கு தமிழ் அரசியல்வாதிகளும், எச்சை ஹிந்துத்துவ அமைப்புக்களும் செயற்படுகின்றனர். இவற்றை அடுத்துவரும் அரசாங்கம் முற்றாக துடைத்தெறிய வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.