April 25, 2018

தொப்பியுடனும், அபாயாவுடனும் சாட்சி சொல்ல முடியாதா..?? (கண்டியில் தொடரும், பௌத்த இனவாதம்)


தொப்பி தாடி வைத்தவர்களும்  அபாயா அணிந்த பெண்களும், தமிழ் மொழியில் உரையாடியவர்களும் கண்ணால் கண்ட உண்மையை சாட்சியமாகச் சொல்ல அருகதையற்றவர்களா?

மேற்படி வினாவிற்கு பின்வரும் சம்பவத்தை வாசித்துப் பாருங்கள்.

கண்டி வைத்திய சாலையில் கிளிக்கில் டாக்கடர் சிபாரிசு செய்த மருந்துகளை எடுக்க சுமார் நூறு பேர் அளவில் வரிசையில் காத்து நிற்கின்றனர். அதில் ஒருவர் புதிதாகப் போய் நிற்கிறார். ஏற்கனவே நூறு பேர்கள் இருப்பதால் புதிதாகப் போனவர் 101 வது நபர் என வைத்துக் கொள்வோம்.   

101 வது நபர் நின்ற உடன் 100 வது நபர் சற்று முற்றும் பார்த்து விட்டு நான் இயற்கை கடன் கழித்து விட்டு வருகிறேன் என்றும் அதன் பின்னர் தங்களுடன் இணைந்து கொள்கிறேன் என்று அந்த 101 வது நபரிடம் கூறிச் செல்கிறார்.  சிறிது நேரத்தில்  101 வது நபருக்கு பின்னால் 102 வது நபரும் சேர்ந்து விட்டார். 

சுமார் பத்து நிமிடத்தில்  ஏற்கனவே இயற்கை கடன் கழிக்கச் சென்றவர் திரும்பி வந்து தனது 100 வது இடத்தில் நிற்க முற்படுகிறார்.  102 வது நபர் 101 வது நபரை திட்ட ஆரம்பிக்கிறார். 101 வது நபர் கூறுகிறார் அவர் ஏற்கனவே இருந்தவர் என்று. அதற்கு புதிய நபரான 102 வது நபர் இல்லை இல்லை. அவன் உனது நண்பன். நீ நண்பனுக்கு இடத்தை ஒதுக்கிக் கொடுத்தாய் என்று கூறுகிறார். 

இச்சம்பவத்தை நேரில் நான் பாரத்துக் கொண்டிருக்கிறேன். 

97 வது மற்றும் 98 வது இடங்களில் நின்றவர்கள் முஸ்லிம்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்களது உடை பேச்சு முகபாவம் (தாடி) என்பன அதனை உறுதி செய்கிறது. 

அதே நேரம் பிரச்சினையுடன் தொடர்புடைய 100, 101, ம் நபர்கள் எந்த இனம் என்று கூற முடியாது. ஆனால் சரளமாக சிங்களம் பேசுகிறார்கள். 

பிரச்சினை உச்சமடைய எதிரில் பாதுகாப்புக் கடமையிலிருந்து பொலீஸ் பெண் ஒருவர் (சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்) வந்து என்ன என்று கேட்கிறார். அப்போது 102 வது நபர் கடும் கோபத்துடன் 101 வது நபர் ஒழுங்கு முறை தவறிற இடையில் ஒருவரைப் புகுத்திய தாகக் கூறுகிறார்.  வரிசையில் இருந்தவர்களிடம் பொலீஸ் அதிகாரி விசாரிக்கிறார். 

அப்போது முன் சொன்ன 97, 98ம் நபர்களிடம் கேட்ட போது ஓ.. அவர் வரிசையில் எற்கனவே இருந்தவர் என்று கூறினர். இதுவரையும் நடந்தவை எதுவும் தவறாகத் தெரியவில்லை. எல்லோரும் சொன்னது உண்மை. 

ஆனால் ஏற்கனவே பிரச்சினைப் படுத்திய 102 வது நபர் எடுத்த எடுப்பிலே குறிப்பிட்ட இனத்தை சாடி (97ம் 98ம் இலக்க நபர்களது சமய கோளத்தை பார்த்து) அவர்கள் எல்லாம் ஒரே இனம். அவர்கள் இப்படித்தான். நாட்டில் பிரச்சினையை உருவாக்குவதும் அவர்கள்தான் என்று தொடர்பில்லாத வகையில் இனத்தைக் கொச்சைப் படுத்தி பேச ஆரம்பித்து விட்டார். 

இதுதான் எமது நாட்டின் தற்போதைய நிலையா? எந்தத் தவறும் செய்யாவர்கள் உண்மையை சாட்சியாகக் கூறியதற்கும்  குறிப்பிட்ட இனச் சாயம் பூசி ஏச்சு நடக்கிறது. 

தொப்பி தாடி வைத்தவர். முக்காடு போட்ட பெண், தமிழ் மொழியில் உரையாடியவர்கள் உண்மையை சாட்சியாகச் சொல்லவும் அருகதையற்றவர்களா? என என்னத் தோன்றுதல்லவா?  இறுப்பினும் சிவில் பாதுகாப்பு பெண் பொலீஸ் அதிகாரி 'அவர் அங்கு ஏற்கனவே வரிசையில் இருந்தவர்தானே, பிரச்சினைப்பட வேண்டாம்' என்று கூறி விட்டுச் சென்றார். இருப்பினும் குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் உண்மையைக் கூறியதற்காக எதுவித சம்பந்தமும் இல்லாது அவர்களது இனம் கொச்சைப் படுத்தப்படுவது நியாயமாகுமா? என எண்ணத் தோன்றுகிறது.

4 கருத்துரைகள்:

Is this a story to be told here? Individual Mistakes should not be generalized.

Exactly... guys.. pls dont create hatred.. we are alrdy weak pls

இது இலங்கை நாட்டுக்கு பொதுவான பிரச்சினை. இதை நாங்கள் சொல்வதன் மூலம் பெரிதாக எதையும் சாதித்துவிட போவதில்லை. ஆனால் ஒன்று, நாம் முஸ்லிம்கள் இலங்கை போன்ற நாடுகளில் எமது இஸ்லாமிய விழுமியங்களை தங்களை வேறொரு இனமாக அடையாளப்படுத்துதலை தவிர்த்து தனது தனிமனித பேணுதலின் அடிப்படையில் இஸ்லாத்தை கடைபிடிப்பதில் ஆர்வம் காட்டினாள் அதுவே சாலச்சிறந்ததாகும், இதன் மூலம் இப்படிப்பட்ட சில சில துவேஷ செயல்பாடுகளை நாம் தவிர்த்து கொள்ளமுடியும்.

@ அப்துல்லாஹ்,
வேறு ஒரு இணமாக இல்லை என்றால் என்ன.. புரியவில்லை,
Dont be a slave for Survival

Post a Comment