April 17, 2018

இக்பால் அத்தாசுடன், ஒரு பேட்டி

Q உங்­க­ளது ஊட­கத்­து­றையின் ஆரம்பப் பயணம் எப்­படி அமைந்­தது?

சுமார் 50 வரு­டங்­க­ளுக்கு முன்னர், அதா­வது 1965 ஆம் ஆண்டு கொழும்பு தொழில்­நுட்பக் கல்­லூ­ரியில் விநி­யோக முகா­மைத்­துவப் பாட­நெ­றி­யொன்றை மேற்­கொண்டேன். அப்­போது அந்தத் துறை­யி­லே­தான் எனக்கு ஆர்­வ­மி­ருந்­தது. அந்தச் சந்­தர்ப்­பத்­தி­லே லேக் ஹவுஸ் நிறு­வ­னத்தில் நிரு­ப­ராக எனது நண்பர் ஒருவர் பணி­யாற்றிக் கொண்­டி­ருந்தார். நான் ஓர் ஊட­க­வி­ய­லா­ள­ராக வரு­வ­தற்கு அவ­ரது செயற்­பா­டுகள் என்னைத் தூண்­டின. அதன் விளை­வாக சண் ஆங்­கிலப் பத்­தி­ரி­கையின் அளுத்­கம செய்­தி­யா­ள­ராக விண்­ணப்­பித்தேன். அதனை ஏற்ற பத்­தி­ரிகை நிறு­வனம் அளுத்­கம – பேரு­வளை பகுதி நிரு­ப­ராக என்னை அமர்த்­தியது. அன்று முதல் சிறு சிறு செய்­தி­களை சமர்ப்­பித்து வந்தேன்.

அப்­போது களுத்­துறை, கட்­டுக்­கு­ருந்தை பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ரே­யுள்ள காலி வீதியில் பிர­மாண்­ட­மான ஆல­ம­ர­மொன்று கம்­பீ­ர­மாகக் காட்சி தந்து கொண்­டி­ருந்­தது. இது உல்­லாசப் பய­ணி­க­ளாலும் கவ­ரப்­பட்டு வந்­தது. காரணம் வீதியின் இரு மருங்­கு­க­ளிலும் ஆழ­மாக வேர் பதித்து நடுவே சுரங்கப் பாதை போன்று பிர­தான காலி வீதி ஊட­றுத்துச் செல்லும் அதி­சய கண்­கொள்ளாக் காட்சி தந்து கொண்­டி­ருந்­தது. அப்போது, அந்த ஆல­மரம் வேரோடு சாய்ந்த சம்­பவம் நிகழ்ந்­தது. நான் இந்த செய்­தியைத் தயா­ரித்­துக்­கொண்டு கொழும்­பி­லுள்ள சண் பத்­தி­ரி­கையின் ‘தவஸ’ காரி­யா­ல­யத்­திற்குச் சென்றேன். அங்­குள்ள சண் செய்­தி­யா­சி­ரி­ய­ரிடம் எனது செய்­தியை ஒப்­ப­டைத்தேன். அதனை வாசித்த அவர் உள்ளே சென்று மேல­தி­கா­ரி­யிடம் அத­னைக்­காட்டி ஏதோ குசு­கு­சுத்துக் கொண்­டி­ருந்தார். என் மீது ஏதோ பழி சுமத்தப் போகி­றாரோ என்று என் உள்ளம் பட­ப­டத்துக் கொண்­டி­ருந்­தது. என்னை நோக்கி வந்த செய்­தி­யா­சி­ரியர், நாளை முதல் அலு­வ­லக செய்­தி­யா­ள­ராக வந்து கட­மை­யாற்­றும்­படி என்னைக் கேட்டார். அப்­போ­துதான் எனக்கு நிம்­ம­தி­யான மூச்சு வெளி வந்­தது. உட­ன­டி­யாக ஏற்கும் நிலையில் நான் இல்லை. ஒரு வாரம் அவ­காசம் பெற்று அதன்­படி வேலைக்­க­மர்ந்தேன். இதுவே எனது ஊடகப் பய­ணத்தின் முதல் படி­யாக அமைந்­தது.

Q அன்­றைய சம்­பள நிலை எப்­ப­டி­யி­ருந்­தது?

தர்ஹா நக­ரி­லி­ருந்து கொழும்­புக்கு போக்­கு­வ­ரத்து செலவு மாதம் 24 ரூபா. எழுதும் செய்தி வரி­களைப் பொறுத்து மாதம் 18 ரூபாவே கொடுப்­ப­ன­வாகக் கிடைத்­தது. கஷ்ட நஷ்­டங்­களைத் தாங்­கிக்­கொண்டு கட­மை­யாற்­றினேன். சில சந்­தர்ப்­பங்­களில் செய்­திகள் சேக­ரித்துக் கொண்டு அலு­வ­லகம் வரு­வ­தற்குள் மாலை வேளை­யாகும். அதனை எழுதிக் கொடுப்­ப­தற்குள் இர­வா­கி­விடும். இரவு 10.30 மணி அளுத்­கமை புகை­யி­ர­தத்தில் பய­ணித்து அங்­கி­ருந்து கால்­ந­டை­யாக தர்­கா­நகர் சென்ற சந்­தர்ப்­பங்கள் பல.

Q சண் பத்­தி­ரி­கையில் உங்­க­ளுக்கு முதன் முதலில் ஒப்­ப­டைக்­கப்­பட்ட பொறுப்­புக்கள் என்ன?

1970 களின் ஆரம்­பத்தில் தமிழ் கட்­சி­க­ளது செய்­திகள் திரட்டி எழுதும் பொறுப்பு என்­னிடம் தரப்­பட்­டது. இது எனது வாழ்க்­கையின் ஒரு மைல் கல் என்றே நான் கரு­து­கிறேன். இதனால் தமிழ் அர­சியல் தலை­வர்­களைச் சந்­திப்­ப­தற்­காக பல தட­வைகள் வடக்கு, கிழக்கு சென்று அவர்­க­ளுடன் ஆழ­மான தொடர்­பு­களை வைத்­துக்­கொண்டேன்.

Q வடக்கு வாலி­பர்­களின் போராட்ட எழுச்­சியை நீங்கள் எப்­போது கண்­டு­கொண்­டீர்கள்?

1976 இல் துரை­யப்­பாவின் கொலைதான் வடக்கு வாலி­பர்­களின் போராட்ட முத­லா­வது சமிக்ஞை என்று நான் கரு­து­கிறேன். அதன் பின்­னரே பொலிஸ் அதி­கா­ரி­களைத் தாக்கி அவர்­க­ளி­ட­மி­ருந்து ஆயு­தங்­களை அப­க­ரிப்­பது, வங்கிக் கொள்ளை என்று தொடர்ந்­தன. 1980 களின் ஆரம்­பத்தில் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­த­னவின் இந்­திய விஜ­யத்­தின்­போது ஊட­க­வி­ய­லா­ள­னாக நானும் புது­டில்­லிக்கு சென்­றி­ருந்தேன். அப்­போது இலங்கை தமிழ் வாலி­பர்கள் அங்கு இரா­ணுவ பயிற்சி முகாம் நடத்திக் கொண்­டி­ருப்­பதை படங்­க­ளுடன் வெளி­யான தக­வல்­களை ‘இந்­திய டுடே’ பத்­தி­ரி­கையில் பார்த்தேன். அதே காலப்­ப­கு­தியில் இலங்­கை­யிலும் தமிழ் இளை­ஞர்­களின் எழுச்சி மேலோங்கி வரும் எதி­ரொ­லி­க­ளையும் கண்­டு­கொண்டேன்.
Q பாது­காப்­புத்­துறை தொடர்­பான புல­னாய்வு விட­யங்­களை ஆரம்­பத்தில் சண் பத்­தி­ரி­கையில் எழு­து­வதன் மூலம் தாங்கள் உள்­நாட்டில் மட்­டு­மன்றி சர்­வ­தேசம் வரை­யிலும் புகழ்­பெற்­றுள்­ளீர்கள். அக்­கால கட்­டத்தில் தமிழ் ஆயுதக் குழுக்­களால் எதிர்­நோக்­கிய அனு­ப­வங்கள் குறித்து….?

மறைந்த லலித் அத்­துலத் முதலி தேசிய பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்த கால­கட்­டத்தில் அன்­றி­ருந்த நிலையில் வடக்கு, கிழக்கு சென்று வரு­வ­தற்கு எனக்கு விசே­ட­மான அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இதனால் பல சந்­தர்ப்­பங்­களில் அங்கு சென்று வந்த நிலையில் ஒரு முறை யாழ். கோட்டை இரா­ணுவ முகா­முக்குச் செல்ல வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அப்­போது யாழில் பல பிர­தே­சங்கள் புலி­களின் பிடியில் இருந்­தன. அங்­குள்ள அர­சாங்க அதிபர் அலு­வ­லகம் தமிழ் போரா­ளி­களின் தலை­மை­ய­க­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருந்­தது. நான் ஹெலி­கொப்­டரில் அந்த அலு­வ­ல­கத்தின் மேலால் பறந்து கொண்­டி­ருக்­கையில் கீழி­ருந்து எம்மை நோக்கி துப்­பாக்கிப் பிர­யோகம் நடத்­தப்­பட்­டது. நாம் ஒரு­வாறு தப்பிப் பிழைத்தோம்.

Q  ஊடக ஈடு­பாட்டில் நீங்கள் முதன்­மு­த­லாக எதிர்­நோக்­கிய பயங்­கரம் அது­தானா?

ஆனால் உண்­மையில் இது நிகழ்ந்து சில மணித்­தி­யா­லங்­க­ளுக்குப் பின்­னரே பயங்­க­ர­மான அபாய அனு­பவம் ஒன்றை எதிர்­நோக்­கினோம் என்று கூறு­வதே பொருத்­த­மாகும்.

நானும் என்­னுடன் வந்­தி­ருந்த எமது புகைப்­படப் பிடிப்­பாளர் பேர்ட்டி மென்­டிஸும் யாழ். கோட்­டை­யி­லி­ருந்து யாழ். நூல் நிலையம் நோக்கி சென்று கொண்­டி­ருந்தோம். அப்­போது திடீ­ரென கோட்டைப் பக்­கத்­தி­லி­ருந்து இரா­ணு­வத்­தி­னரும் நூல் நிலையத் திசை­யி­லி­ருந்து தமிழ் ஆயு­த­தா­ரி­களும் பரஸ்­பரம் துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் ஈடு­பட்­டனர். இவர்­க­ளுக்கு இடையே அகப்­பட்டுக் கொண்ட நாம் இரு கைக­ளையும் உயர்த்­தி­ய­வாறு நகர முடி­யாமல் பீதியில் உறைந்து போய் நின்றோம். நல்ல வேளை வேட்டுப் பிர­யோகம் ஓய்ந்­தது. எமக்கு எதிரே இருந்த பதுங்கு குழியில் பதுங்­கி­யி­ருந்த தமிழ் வாலிப துப்­பாக்­கி­தாரி வெளியே வந்தார். பீதியில் நின்ற எம்மைப் பார்த்து வரும்­படி சைகை காட்­டினார். இப்­போது எமது பட­ப­டப்பு பன்­ம­டங்­கா­கி­யது. அடிமேல் அடி எடுத்து முன்­ந­கர்ந்தோம். எம்மை விசா­ரித்து விப­ரங்­களைக் கேட்­ட­றிந்தார். குளி­ரூட்­டப்­பட்ட குளிர்­பானம் தந்தார். எமது உள்­ளங்­களும் அப்­போ­துதான் குளிர்ந்து போனது.

Q அன்­றி­ருந்த தமிழ் ஆயுதக் குழுத் தலை­வர்­களை சந்­திக்கும் வாய்ப்புக் கிடைத்­ததா?

நான் அப்­போது யாழின் ஞானம் ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்த போதுதான் கொழும்பு புறக்­கோட்டை பஸ் நிலை­யத்தின் அருகே குண்டு வெடித்த சம்­பவம் நிகழ்ந்­தது. அதன் எதி­ரொ­லி­யாக யாழிலும் ஏதும் அசம்­பா­வி­தங்கள் சம்­ப­விக்கலாம் என்று நாம் எண்­ணினோம். அதனை உண்­மைப்­ப­டுத்தும் விதத்தில் சாவ­கச்­சேரிப் பக்­கத்தில் இரா­ணுவம் தாக்­குதல் நடத்­து­வ­தான தகவல் கிடைத்­தது. அந்த சந்­தர்ப்­பத்­தில்தான் தமிழ் ஆயுதத் தலைவர் ஒருவர் என்னைச் சந்­தித்தார். அப்­போ­துள்ள நிலையில் அவ­ருடன் அதிக நேரம் உரை­யாடக் கிடைக்­க­வில்லை. அப்­போதும் மேலே ஹெலி­மூலம் தாக்­குதல் தொடர்­வதை உணர்ந்தோம். எனவே நாம் தொடர்ந்து அங்­கி­ருக்­காது கோட்டை இரா­ணுவ முகா­முக்கு மீண்டோம். நாம் போகும் வழி­யிலும் இரு­பக்க துப்­பாக்கிப் பிர­யோ­கங்கள் நடந்து கொண்­டி­ருந்­தன. அதிலும் நாம் தப்­பித்தே இரா­ணுவ முகாமை அடைந்தோம்.

Q பிர­பா­க­ரனைச் சந்­திக்கும் சந்­தர்ப்பம் கிடைத்­த­தல்­லவா?

ஆம். இந்­திய இரா­ணுவம் இருந்த யுத்த நிறுத்த கால சந்­தர்ப்­பத்தில் பிர­பா­க­ரனைச் சந்­தித்தேன். எனது இரு கண்­களும் துணியால் கட்­டப்­பட்டே அவர் இருக்கும் இடத்­திற்குக் கூட்­டிச்­சென்­றனர். கண்­கட்டு அவிழ்க்­கப்­பட்ட பின்னர் பிர­பா­க­ரனைக் கண்டேன். நான் எடை போட்­டதை விடவும் அவர் கட்­டை­யான தோற்­றத்­து­ட­னே தான் காணப்­பட்டார். அப்­போது அருகே குண்­டுச்­சத்தம் கேட்­டது. பிர­பா­கரன் திடுக்­குற்றுப் போன­தையும் அவ­தா­னித்தேன்.

Q ஊட­கத்­துறை ஈடு­பாட்டில் யுத்த முனை செய்தி திரட்டும் சவாலை எவ்­வாறு நோக்­கி­னீர்கள்?

ஊட­கத்­து­றையில் யுத்த கள செய்தி சேக­ரிப்பு என்­பது சிக்­கலும் சவாலும் நிறைந்­த­தொரு பணி­யாகும். பொழுது போக்கு, அறி­வியல் துறை­க­ளுக்­கப்பால் சென்று செய­லாற்­றக்­கூ­டிய தகவல் திரட்­ட­லாகும். இது மனித உயிர்­க­ளையும் நாட்­டையும் பாது­காக்கக் கூடிய பொறுப்பு வாய்ந்த பணி­யென்றே இதனை நான் நோக்­கு­கிறேன். இது விட­ய­மாக நாம் ஒன்றை வெளி­யிடும் போது நிச்­ச­ய­மாக சம்­பந்­தப்­பட்ட இரு தரப்பில் ஒரு தரப்பின் அதி­ருப்­தியை சம்­பா­திக்க வேண்டி ஏற்­ப­டு­வதும் தவிர்க்க முடி­யா­த­தாகும். யுத்­த­கால தகவல் வெளி­யி­டு­வதில் பின் விளை­வுகள் பார­தூ­ர­மாக அமைந்­து­வி­டு­வ­துண்டு. நாம் வெளி­யிட்ட தக­வல்கள் சரி­யா­ன­வையா என்­பதில் கூட இப்­போதும் என் மனதில் ஐயப்­பாடு நில­வு­கி­றது. இன்று யுத்தக் குற்றம் தொடர்­பாக ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர்­க­ளிலும் பேசப்­பட்டு வரு­வதைக் காண்­கிறோம். யுத்த முனை செய்தி சேக­ரிப்­புக்­காக விசேட பயிற்சி தேவை. இது இலங்­கையில் இல்லை. இதனால் நாம் ஒரு­வ­ரை­ய­றைக்குள் இருந்தே எமது பொறுப்பை நிறை­வேற்ற வேண்­டிய நிலை­யிலே தள்­ளப்­பட்­டுள்ளோம். இந்­நி­லை­யிலும் நான் கட­மை­யாற்­றிய தவஸ நிறு­வ­னமோ டைம்ஸ் நிறு­வ­னமோ அவற்றின் பிர­தம ஆசி­ரி­யர்­களோ என் செய்­திகள் மீது நம்­பிக்கை வைத்­தி­ருந்­தனர். இதே­போன்றே நான் தகவல் அனுப்பும் சர்­வ­தேச ஊட­கங்­களும் என்னை நம்பி செய்­தி­களை வெளி­யிட்டு வந்­துள்­ளன.

Q யுத்த சூழ்­நிலை செய்தி திரட்­ட­லின்­போது நீங்கள் சந்­தித்த கசப்­பான அனு­ப­வங்கள் உண்டா?

உள்­நாட்டுப் போரின்­போது உண்­மை­யான தியாக மனப்­பான்­மை­யோடு இரா­ணுவ வீரர்கள் பங்­காற்­றி­யது போன்றே யுத்­தத்தை வைத்தே பிழைப்பு நடத்­திய முத­லா­ளி­மார்­களும் இருக்­கவே செய்­தனர். மிக் விமான கொடுக்கல் வாங்கல் மோசடி விவ­கா­ரத்தை இதற்கு உதா­ர­ண­மாக முன்­வைக்­கலாம். இதனை அம்­ப­லத்­துக்குக் கொண்டு வந்­ததன் விளை­வாக நாட்டை விட்டே வெளி­யேறி பதுங்கி வாழ வேண்­டிய நிலைக்கு நான் ஆளானேன்.

Q யுத்த புல­னாய்வு செய்தி திரட்­ட­லின்­போது எதிர்­நோக்­கிய பயங்­கர அனு­ப­வங்கள் உண்டா?

எனது வீட்­டினுள் நுழைந்து என்னைக் கொலை செய்­வ­தற்கு முயன்ற சந்­தர்ப்­பத்தைக் குறிப்­பி­டலாம். சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி­மன்­றத்தால் தண்­டனை வழங்­கப்­பட்­டது. ஆனால் புதிய அரசு வந்த பின்னர் குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் மூலம் மேற்­படி தீர்ப்பு மாற்­றப்­பட்­டது. அது குறித்து எனது மனதில் சந்­தேகம் நில­வு­கி­றது.

Q அன்­றைய கால­கட்­டத்தில் உங்­க­ளுக்கு விசேட பாது­காப்பு வழங்­கப்­பட்­ட­தல்­லவா?

ஆம், சந்­தி­ரிகா அம்­மை­யாரின் பணிப்­பு­ரைக்­க­மைய கமாண்டோ படை­ய­ணியின் பாது­காப்பு தரப்­பட்­டது. அவர்கள் அர்ப்­ப­ணிப்­போடு எனக்கு உயர்ந்த பாது­காப்பைத் தந்­தனர். ஆனால் அந்த நிலையில் அவர்­களில் ஒருவர் எனது நட­வ­டிக்கைகள் குறித்து மேல் மட்­டத்­தி­ன­ருக்கு துப்­புகள் வழங்கி வந்தார். எந்த வி.ஐ.பி. க்கும் வழங்­கப்­படும் பாது­காப்­பிலும் இத்­த­கைய ஒருவர் அமர்த்­தப்­ப­டு­வதும் சக­ஜம்தான் என்­பதை நான் அறிவேன்.

Q உள்­நாட்டு புல­னாய்வுத் துறை ஊட­க­வி­ய­லா­ளர்­களில் தங்­க­ளுக்கு நன்­ம­திப்புக் கிடைத்­த­மைக்­கான காரணம் என்­ன­வெனக் கரு­து­கி­றீர்கள்?

நான் அறிக்­கை­யி­டு­வ­தற்­குண்­டான விட­யத்தில் கவனம் செலுத்­து­வ­துடன் மட்டும் நின்று விடாது அத­னுடன் கூடிய விட­யங்­களை அணுகி ஆழ­மாகத் தேடிப் பார்த்தே பூர­ணப்­ப­டுத்­துவேன். அத்­துடன் முட்­டாள்­த­ன­மாக நடப்­ப­திலும் தவிர்ந்து கொள்வேன். இதுவே எனது புல­னாய்வு ஊட­கத்­துறை உயர்­வுக்­கான இர­க­சி­ய­மாகும்.

Q முன்னாள் பாது­காப்புத் துறை உய­ர­தி­கா­ரிகள் உங்­க­ளுடன் எப்­படி நடந்து கொண்­டார்கள்?

மிகவும் நல்ல நிலை­யில்தான் அவர்­க­ளு­ட­னான உற­வுகள் நிலவி வந்­தன. ஆனால் பாது­காப்புப் பிரிவில் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த ஊழல், மோச­டி­களை வெளிக்­கொ­ணர்ந்­ததன் மூலமே அவர்­களில் சிலர் என்­னுடன் முரண்பட்டனர். இதன் விளைவாக சிலர் பலவிதத்திலும் என்னைப் பழிவாங்க ஆரம்பித்தனர். எனது வீட்டில் விபசார விடுதியொன்று நடத்தப்பட்டு வருவதாக திட்டமிட்ட பிரசாரம் ஒன்றை முன்னெடுத்தனர். இதனை வைத்து ஒரு சில பிரபலங்கள் அந்த வார்த்தைகளை நம்பி எனது வீட்டிலிருந்து விலைமாது ஒருவரைப் பெற்றுக் கொள்ளலாமா? என்று வினவிய சந்தர்ப்பங்களும் உள்ளன.

Q  உங்கள் வாழ்க்கை வரலாறு மற்றும் தொழில் அனுபவங்களை நூலாக்கம் செய்யும் எண்ணமில்லையா?

உண்மையிலேயே அந்த முயற்சியில் நான் ஈடுபட்டுக் கொண்டுதான் வந்தேன். குறிப்பிடத்தக்களவு எழுதி வைத்திருந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக அனைத்து ஆவணங்களையும் தீக்கிரையாக்கினேன். ஏனெனில் இந்த ஆவணங்கள் அவர்களது கைகளில் சிக்கினால் மேலும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்ற பீதியிலேயே அவ்வாறு செய்தேன்.

Q மீண்டும் எழுதும் யோசனை இல்லையா?

அது மிகவும் சிரம சாத்தியமான விடயமாகும். ஒரு சில முக்கிய விடயங்கள், தரவுகள், காலம் என்பனவற்றை மீட்டிப் பார்ப்பதில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு கால, நேரம் இடம் தருவதாக இல்லை.

சிங்­களம்: சுனில் ஜய­சே­கர
தமி­ழாக்கம்: ஏ.எல்.எம்.சத்தார் (விடிவெள்ளி)

0 கருத்துரைகள்:

Post a Comment