Header Ads



கண்டி சிங்கள - முஸ்லிம் முறுகல் பற்றி, பொய் பரப்பப்பட்டுள்ளது - லண்டனில் மைத்திரி வேதனை

இச்செய்தி Jaffna Muslim  இணையத்திற்கு ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் உத்தியோகபுர்வமாக அனுப்பி வைக்கப்பட்டதாகும்

அனைவருக்கும் வணக்கம். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகைதந்த இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களான உங்கள் அனைவரையும் சந்திக்க கிடைத்ததில் மகிழ்ச்சியடைகின்றேன். பதில் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டதைப் போன்று இங்குள்ள சுமார் நான்கு இலட்சம் இலங்கையர்களின் பிரதிநிதிகளாகவே நான் உங்களை காண்கின்றேன். அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாட முடியாவிட்டாலும் அவர்கள் சார்பாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். 

ஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு துறைகளில் சேவையாற்றும் இலங்கையர்கள் வசிக்கின்றனர். இதனால் ஐக்கிய இராச்சியத்திற்கு நீங்கள் சேவையாற்றுவதைப் போலவே தாய் நாட்டிற்கும் பெருமை சேர்க்கின்றீர்கள். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் எந்த நாட்டில் எத்தகைய தொழிலில் ஈடுபட்டிருப்பினும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையின் வெற்றி, அவர்கள் சேவையாற்றும் நாட்டின் வெற்றி, அதேபோல் அவர்களது தாய்நாடான இலங்கையின் கௌரவத்தினை பேணுவதில் அவர்கள் தமது சேவையில் வெளிக்காட்டும் ஆற்றல்கள், திறமைகள் என்பவையே காரணமாக அமைகின்றன. இலங்கையர்கள் இன்று உலகளாவிய ரீதியில் கல்விமான்கள் புத்திஜீவிகள், விஞ்ஞானிகள், விசேட நிபுணர்கள் என பல துறைகளில் கடமை புரிகின்றனர். அதன் மூலமாக அவர்கள் தமது தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது. உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு இனங்களுக்கிடையிலும் இலங்கையர்கள் விசேட ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்காட்டுகின்றனர். அவர்களுக்கு நாம் எமது அரசின் சார்பில் மதிப்பளிக்கின்றோம். 
நீங்கள் இந்த நாட்டில் வாழ்ந்த போதிலும் எமது தாய் நாட்டைப் பற்றிய தகவல்களை நீங்கள் அறிவீர்கள். ஆனால் அவை எந்தளவுக்கு உண்மையானவை என தெரியாது. இன்றும் என்னை சந்திக்க வந்த சில இலங்கையர்களுடன் நான் கலந்துரையாடினேன். தனிப்பட்ட ரீதியிலும் நிறுவன ரீதியிலும் அவை அமைந்திருந்தன. அதனூடாக எவ்வளவு தவறான, உண்மைக்கு புறம்பான தகவல்களை நீங்கள் அறிய முடிகின்றது என்பதை நான் புரிந்துகொண்டேன். இணையத்தினூடாக பெற்றுக்கொள்ளும் பிரகடனங்கள், செய்திகள் என்பவற்றுள் 75% இற்கும் அதிகமானவை உண்மையானவையல்ல. நானும் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரும் இன்று பல கலந்துரையாடல்களில் ஒன்றாக பங்குபற்றினோம். அவரும் என்னுடன் இருந்ததால் சில விடயங்களுக்கு என்னால் உறுதியான ஆதாரங்களை கூட முன்வைக்க கூடியதாக இருந்தது.

அண்மையில் எமது நாட்டில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட சிங்கள – முஸ்லிம் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையின்போது இடம்பெற்ற சில சம்பவங்களும் அதற்கான பின்னணி பற்றிய விடயங்களும் எந்தளவிற்கு பொய்யாக பரப்பப்பட்டுள்ளன. அதேபோல் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் உண்மையான தகவல்கள் எவ்வளவு குறைவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. பொய்யான தகவல்கள் எவ்வளவு வேகமாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அறியக் கிடைக்கின்றது என்பதை என்னால் உணர முடிந்தது. 
நீங்கள் சிலவேளைகளில் தினமும் உங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடுபவராக இருக்கலாம். ஆனால் உண்மையான விடயங்கள் மூடி மறைக்கப்பட்டு பொய்யான தகவல்கள் வேகமாக சமூகத்தை சென்றடைகின்றது என்பதாகவே நான் கருதுகின்றேன். நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் சரியான தகவல்கள் அறியக் கிடைக்காமை, அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமை போன்ற பல விடயங்கள் உள்ளன. புதிய தொழில்நுட்ப உபகரணங்களை வடிவமைத்த விசேட நிபுணர்களும் விஞ்ஞானிகளும் சமூகத்தின் நிலவுகை, நீடித்து நிலைத்திருக்கும் தன்மை மற்றும் அவற்றின் எதிர்காலத்திற்காகவே அவற்றை உருவாக்கினார்கள். ஆயினும் அவை எந்தளவிற்கு முறையற்ற விதத்தில் உபயோகிக்கப்படுகின்றன என்பதை இன்று எமது நாடு மட்டுமன்றி முழு உலகுமே காண்கின்றது. சமூக வலைத்தளங்கள் ஐக்கிய அமெரிக்காவிற்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. பல உலக நாடுகளுக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 
கண்டியில் ஏற்பட்ட சம்பவத்தின்போது ஒரு சில மணித்தியாலத்திற்குள் நாம் அரசாங்கம் என்ற வகையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினோம். ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தினோம். முப்படைகளை சேவையில் ஈடுபடுத்தினோம். சமூக வலைத்தளங்களை முற்றாக முடக்கினோம். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இவற்றை நாம் மேற்கொண்டபோதும் பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் என்மீது குற்றம் சாட்டினர். சில வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமது எல்லையை மீறி கருத்துக்களை வெளியிடத் தொடங்கினர். இவை எதற்கும் நாம் சளைத்து விடவில்லை. அச்சப்படவில்லை. எமது தீர்மானங்களை உரிய முறையில் மேற்கொண்டோம். ஒரு நாடு என்ற வகையில் ஏற்படவிருந்த பாரிய அழிவினை எம்மால் தவிர்த்துக்கொள்ள முடிந்தது. 

ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனம் ஒன்று, அமெரிக்க அரசாங்கத்திற்கு முடியாதவொரு விடயமாக காணப்படும் சமூக வலைத்தளங்களை முடக்கும் செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக செயற்படுத்தியதாக அப்போது தெரிவித்தது. மேலுமொரு நிறுவனம் கண்டி சம்பவத்தின்போது இலங்கை அரசாங்கம் செயற்பட்டதைப் போன்று மியன்மார் அரசாங்கம் மியன்மாரில் முதலாவது சம்பவம் இடம்பெற்றபோதே மேற்கொண்டிருந்தால் மியன்மாரில் இன்று இடம்பெறும் மோசமான சம்பவங்கள் இன்று அந்த நாட்டில் இடம்பெறாது இருந்திருக்கும் எனத் தெரிவித்தது. 

சர்வதேச அமைப்புக்கள் எமது செயற்பாட்டை ஏற்றுக்கொண்டன. எமது நாட்டிலும் பெற்றோர் அதனை மிகவும் வரவேற்றனர். முடியுமாயின் நிரந்தரமாகவே அவற்றை தடை செய்யுமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர் தரம் என்பவற்றில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் என்னோடு உரையாடினார்கள். தந்திகளை அனுப்பினார்கள், கடிதங்களை அனுப்பினார்கள், எனது அந்த செயற்பாட்டை பாராட்டினார்கள். நாம் சிறந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் போன்ற அம்சங்கள் அவசியமாகுமென்பதை அறிவோம். அவ்வனைத்து விடயங்களிலும் கிடைத்துள்ள சுதந்திரத்தை நற்பண்புகளையுடைய மக்கள் முறையாக பயன்படுத்துகின்ற போதிலும் தீய குணங்களை உடையோர் அவற்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றனர் என சகலரும் அறிந்துள்ளோம். தொழில்நுட்பம், மானிட சுதந்திரம் என்பன வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்திற்கு கிடைக்கும்போது அங்கு வாழும் மக்களுள் ஒரு சாரார் அவற்றை முறையாக பயன்படுத்துகையில் மறு சாரார் முறையற்று உபயோகிக்கின்றனரா என்ற பிரச்சினை எழுந்துள்ளது. இந்த நிலைமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். 
புத்த பெருமான் முக்தி பெறும்போது பாரத நாட்டில் அன்றைய சமூகத்தில் காணப்பட்ட சிக்கலான நிலையை நீங்கள் அறிந்திருப்பீர்களென நான் அறிந்திருக்கிறேன். அதுபோலவே நபி அவர்கள், ஜேசு பிரான் ஆகியோர் உதித்த சமூதாய பின்னணி தொடர்பிலும் உங்களுக்கு புரிந்துணர்வு உண்டு. அநகாரிக்க தர்மபால, ஹென்றி ஸ்டீல் ஓல்கொட் ஆகியோர் பௌத்த மதத்தை பாதுகாக்க அளப்பரிய சேவைகளை ஆற்றினார்கள். இறுதியில் நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக ஹென்றி ஸ்டீல் ஓல்கொட் அவர்கள் அமெரிக்காவுக்கு சென்றார். அநகாரிக்க தர்மபால அவர்களும் நாட்டை விட்டு இந்தியாவிற்கு சென்று மீண்டும் இலங்கையர்கள் வாழும் நாட்டின் பக்கமே செல்லப்போவதில்லை எனத் தெரிவித்தார். அன்று அந்த சமூகத்தின் மீது காணப்பட்ட வெறுப்பே அதற்கு காரணமாகும். 

சிலர் அரசியல் முறுகல் நிலை எமது நாட்டில் மட்டுமே காணப்படுகின்றதென நினைக்கின்றனர். பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அம்மையார் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அரச தலைவர்களை இன்று நண்பகல் 12.00 மணிக்கு சந்திப்பதாக இருந்தது. ஆயினும் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட நிலைமை காரணமாக அவசரமாக அந்த சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது. 

கடந்த மாதம் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சருடன் இணைந்து நான் ஜப்பானுக்கு சென்றபோது ஜப்பான் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாம் பங்குபற்றினோம். அப்போது சுமார் 2000 பேர் அளவில் ஜப்பான் பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் ஜப்பான் பிரதமரை பதவி விலகுமாறு கோரி கொடி பிடித்து கொண்டு இருந்தார்கள். நான் இலங்கையர்கள் குழுவொன்று தவறுதலாக அங்கு வந்திருக்கின்றனவா என்று பார்த்தேன். அந்த உத்தியோகபூர்வ சந்திப்பு முடிவடைந்து திரும்பி வருகையில் சுமார் 5000 பேர் அளவில் கொடி பிடித்துக்கொண்டிருந்தார்கள். தற்போது சகல நாடுகளிலும் இதுபோன்ற அரசியல் பிரச்சினைகளும் பொருளாதார நெருக்கடிகளும் காணப்படுகின்றன. 

அரசாங்கம் என்ற வகையில் நாட்டிற்கான எமது பொறுப்பை நாம் தவறாது நிறைவேற்றுகின்றோம். சகல இனங்களுக்கிடையிலும் சமாதானத்தை கட்டியெழுப்ப சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வன்முறைகளற்ற சமூகத்தை கட்டியெழுப்ப மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் செயற்பட நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த மூன்றரை வருடங்களில் எமது அரசாங்கம் பாரிய செயற்பாடுகளை ஆற்றியுள்ளது. அதற்கான பெறுபேறுகள் தற்போது கிடைத்துள்ளன. அந்த தகவல்கள் சரியான முறையில் மக்களை சென்றடைவதில்லை. பொய்யான விடயங்களே விரைவில் பரவுகின்றன. இலங்கையர் என்ற வகையில் ஐக்கிய இராச்சியத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றவர்களின் ஒத்துழைப்பினை நாம் எப்போதும் எதிர்பார்க்கின்றோம். எமது நாட்டிற்கான உங்களது உண்மையான உணர்வுகளை நாம் அறிவோம். 

எமது நாட்டில் உள்ள சில அச்சு ஊடகங்களும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களும் நாட்டில் காணப்படும் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை எந்தளவு முறையற்ற விதத்தில் உபயோகிக்கின்றன என்பதை நாம் அறிவோம். பொய்யான தகவல்களும் முறுகல் நிலையை ஏற்படுத்தும் விடயங்களும் அவற்றில் அடிக்கடி ஒளிபரப்பப்படுகின்றன. ஊடகம் ஒன்றில் காணப்பட வேண்டிய பண்புகளை அவர்கள் எந்தளவிற்கு மதிக்கின்றனர் என்பதில் பிரச்சினை உள்ளது. அதனால் முறையற்ற விடயங்களை மக்களுக்கு வழங்குவதனால் நாட்டில் ஏற்படக்கூடிய பின்னடைவிற்கு அவர்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள். எமது தாய் நாட்டின் எதிர்காலத்திற்கான தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொருளாதார திட்டங்கள் உண்மையிலேயே சாதகமான பெறுபேறுகளை தரும். நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் எந்தவித குறைபாடுகளும் இல்லை. அதேபோல் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் சர்வதேச மட்டத்தில் நாம் பல வெற்றிகளை பெற்றுள்ளோம்.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திற்கு நான் வருகை தந்ததை நீங்கள் அறிவீர்கள். 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சர்வதேசத்தில் எம்மிடமிருந்து விலகியிருந்த நாடுகளின் நன்மதிப்பை பெற்றுக்கொள்வற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். எமது வெளிநாட்டு கொள்கைகளுக்கு அமைவாக எந்தவொரு நாட்டினருடனும் நாம் பகைமை கொண்டிருக்கவில்லை. அனைவரும் எமது நண்பர்களே. அனைவரும் எம்முடன் நட்பாக இருக்கின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளும் எமது நண்பர்களே. சுதந்திரத்தின் பின்னர் முன்னொருபோதும் இந்தளவு சர்வதேச நட்புறவுடன் இலங்கை காணப்படவில்லை என நான் கருதுகிறேன். 

இதை நான் ஜனாதிபதி என்பதற்காக கூறவில்லை. ஏனெனில் பெரும்பாலும் உலகில் காணப்பட்ட அரசியல் அதிகார கோட்டைகளுள் ஒரு பிரிவின் ஆதரவை பெரும்போது மறுபிரிவினரிடமிருந்து விலகி காணப்படுதலே அன்று முதல் இடம்பெற்று வருகின்றது. 50, 60 ஆம் தசாப்தங்களில் உலகில் அரசியல் அதிகாரவாதம் மிகப் பிரபலமாக காணப்பட்டது. ஐக்கிய அமெரிக்க குடியரசும் முதலாளித்துவ நாடுகளும் ஒருபுறமும் அதேபோல் சோவியத் ஒன்றியமும் அதனுடன் இணைந்த கொமியூனிச நாடுகளும் மறுபுறமும் காணப்பட்டன. அன்று காணப்பட்ட அதிகாரவாதத்தில் எம்மைப் போன்ற சிறிய நாடுகளுக்கும் உலகில் குறிப்பிடத்தக்க ஒரு மதிப்பு காணப்பட்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் சிறிய நாடுகளின் வாக்கிற்கு பாரிய மதிப்பு காணப்பட்டது. அவர்களது. அதிகார மோதல்களின்போது நாம் நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதால் எமது மதிப்பு அதிகரித்திருந்தது. ஆயினும் 92,93ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் உலகம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஒரு திசையில் பயணிக்க தொடங்கியது. 

முழு உலகும் தனியொரு அதிகாரத்தின் கீழ் வந்தமையினால் ஈராக், இந்தியா போன்ற நாடுகள் முற்றாக வீழ்ச்சியடைந்தன. ஈராக்கில் இன்றும் எவ்வளவு மக்கள் உயிரிழக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவரை சுமார் 20 இலட்சம் மக்கள் அளவில் உயிரிழந்துள்ளனர். லிபியா மூன்றாக பிளவடைந்துள்ளது. ஈராக்கும் மூன்றாக பிளவடைந்துள்ளது. அவற்றின் பெறுபேறாகவே இன்று காணப்படும் சர்வதேச தீவிரவாதம் உருவானதென நாம் நம்புகின்றோம். அதனால் இந்த அதிகார வர்க்கத்தின் அதிகாரங்களுடன் சனத்தொகை குறைந்த சிறிய நாடான போதிலும் தலைசிறந்த இனமாக கௌரவத்துடன், சர்வதேசத்தின் முன்னால் நாம் எமது கொள்கைகளுடன் காணப்பட வேண்டும். அதனூடாக நாம் அனைவரையும் வெற்றி கொள்ளலாம். நடுநிலையான வெளிநாட்டு கொள்கையுடன் அதிகாரவாதத்திற்கு அப்பாற்பட்டு விசேடமாக அணிசேரா கொள்கையுடன் எமது நாடு சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளது. சகலரும் எமக்கு ஆதரவளிக்கின்றனர். உதவியளிக்கின்றனர். நாம் நேர்மறையான எண்ணங்களுடன் எமது நாட்டை அவதானிக்க வேண்டும். ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான எதிர்மறையான விடயங்களை நிராகரித்து நாட்டின் எதிர்காலத்திற்காக, எமது நாட்டில் எதிர்காலத்தில் பிறக்கவுள்ள சந்ததியினரின் நலனிற்காக சிறந்தவொரு நாட்டை கட்டியெழுப்ப நாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். 

உங்கள் அனைவருக்கும் நான் எனது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவிக்கின்றேன். எமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த சந்தர்ப்பத்தில் இந்த சந்திப்பினை ஏற்பாடு செய்த எமது பதில் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அவரது பணிக்குழாமிற்கும் வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மரியாதை கலந்த நன்றிகளை தெரிவித்து நம் அனைவரினதும் தாய் நாட்டிற்காக அர்ப்பணிப்போடு செயற்பட்டு பயனுறுதிமிக்க சிறந்தவொரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான எமது பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றுவோம் என்ற கோரிக்கையை முன்வைத்து  உங்களிடம் இருந்து விடை பெறுகின்றேன். 
நன்றி.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.04.18

6 comments:

  1. ஏய் பொய்யெனே எதுடா பொய்?
    ஒரு சிங்களவன் தாககப்பட்டு ஆஸ்பத்திரியில் உன் இன டாக்டர்களினாலே கொள்ளப்பட்டது பொய்யா?
    ஒருவன் இறந்ததுக்காக முழு முஸ்லிம் ஊரையும் அழித்தது பொய்யா?
    பல நாட்களுக்கு முன்னமே நடக்கப்போகும் தாக்குதலை அறிந்து இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது பொய்யா?
    முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு தருவதாக ஆமிக்கார நாய்களை போட்டு முஸ்லிம்களையே தாக்கியது பொய்யா?
    ஊரட‌ங்கு உ‌த்தரவு போட்டு காடையர்ளுக்கு தாக்குவதற்கு மேலும் வசதி செய்து கொடுத்தது பொய்யா ?
    இவ்வளவும் செய்து விட்டு ஊரு சுற்றி வரும் நாய் நீ அங்கேயும் அதே பொயயை வாய் கூசாமல் சொல்லுகிறாயே.

    ReplyDelete
  2. The usual blah...blah... My3 the worst of inefficient leaders.

    ReplyDelete
  3. இன்னும் இந்த கூறு கெட்ட ஜனாதிபதியுடன் கதைப்பதில் எந்த பிரயோசமும் இல்லை. உடனடியாக சிங்கள போலீசையும், சிங்கள பாதுகாப்பு படையையும் இந்த நாட்டில் இனத்துவேஷிகளாக பணியாற்றும் வரை இந்த நல்லிணக்கத்துக்கு சந்தர்ப்பம் கிடையாது. பலசேனாக்களும், சாம்பிகைகளும் சட்டத்தின் நிறுத்தப்படாதவரை நல்லிணக்கத்துக்கு எந்த சந்தர்ப்பமும் கிடையாது. ஹகீமுக்கும், ரிசாத்துக்கும் சலுகைகளும், பதவிகளுமே பெரிதாக தெரிகிறது. உரிமையும், தேசிய அரசியலும் புரியாதவர்களாகவே இது வரை செயட்பட்டு வந்துள்ளனர். முஸ்லிம்கள் நிட்சயம் மூன்றாவது ஒரு அரசியல் சக்தியை ( சிங்கள, தமிழ், முஸ்லீம் இணைந்து - பலசேனாக்களுக்கும், சம்பிக்கைகளுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய ) உருவாக்க வேண்டும். சிந்திப்பார்களா.. சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், புத்திஜீவிகளும்.

    ReplyDelete
  4. ஒரு சமூகத்தின் ஒழுக்கத்ததை அச்சமூகத்தில் உள்ள ஒரு சிலரைக் கொண்டே எடை போடுவார்கள். எழுத்திலும் ஒழுக்கம் இருக்க வேண்டும் றிஸ்வான்

    ReplyDelete
  5. இவர் சொல்வதைப் கேட்டுக் கொண்டிருந்தவர்களை என்னவென்று சொல்வது?

    ReplyDelete

Powered by Blogger.