Header Ads



அரசிற்குள் நுழைவதற்காக, நரிகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன - அஸாத் சாலி

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒன்றிணைந்து நல்லாட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். 

நேற்று (22) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நாங்கள் மஹிந்த ராஜபக்ஷ்விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது நல்லாட்சியை அமைப்பதற்காவே அன்றி அவருடைய ஆட்சியை போல நடத்தி செல்வதற்காக அல்ல என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் இரண்டு பிரபல கட்சிகள் ஒன்றிணைந்தே நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டது ஆனால் அந்த இரு கட்சியகளுக்கும் இப்போது ஒன்றாக இணைந்து செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

நல்லாட்சி அரசிற்கு இன்னும் இருப்பது 18 மாதங்கள் மாத்திரமே உள்ளது, அரசிற்குள் நுழைவதற்காக வெளியில் நரிகள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் எனவே நல்லாட்சியை தொடர்வதா அல்லது நரிகளுக்கு இடமளிப்பதா என்று இரு கட்சி தலைவர்களும் தான் தற்போது முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. எந்த அமைச்சர் இவர் 55௦

    ReplyDelete

Powered by Blogger.