Header Ads



லசந்த கொலைக்கு உத்தரவிட்ட, சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியா லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில், அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டுமென ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

லசந்த கொலை தொடர்பான உத்தரவு பிறப்பித்த குற்றச்சாட்டில் இராணுவ கட்டளைத் தளபதி அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வாறு எனில் அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் சரத் பொன்சேகாவையும் கைது செய்ய வேண்டும்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் சரத் பொன்சேகா பொறுப்பு சொல்ல வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே குற்றம் சுமத்தியிருந்தார்.

நாடாளுமன்றின் ஹன்சார்ட் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

லசந்த கொலைக்கு உத்தரவிட்ட குற்றச்சாட்டில் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, படைவீரர்களை இந்த அரசாங்கம் வேட்டையாடி வருகின்றது என முன்னாள் இராணுவ உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இதே தர்க்கத்தின் படி கோத்தாவும் ராஜபக்சவும் இறுதியில் பதிலளிப்பவர்களாகவோ, தண்டிக்கப்படுபவர்களாகவோ இருப்பார்கள்.

    ReplyDelete
  2. இதே தர்க்கத்தின் படி கோத்தாவும் ராஜபக்சவும் இறுதியில் பதிலளிப்பவர்களாகவோ, தண்டிக்கப்படுபவர்களாகவோ இருப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.