April 25, 2018

‘ஷரீஆ’ வைக் கடைப்­பி­டித்தால், சரி­யா­கவே எதுவும் நடக்கும்...!

பெரும்­பாலும் எல்லா மதங்­களும் பெரும்­பாவம் செய்­யாதே என்­றுதான் போதிக்­கின்­றன. நாஸ்­தி­க­னைத்­த­விர, “இறைவன் ஒருவன் இருக்­கின்றான்” என்­பதை அனை­வரும் நம்­பு­கின்றோம். புனித இஸ்லாம் மனித சமு­தாயம் நெறி­யோடு வாழ்­வ­தற்­கான எளி­மை­யான வழி­மு­றை­களை ‘ஷரீஆ’ என்ற சட்­டத்­தின்­மூலம் ஒழுக்க விழு­மியக் கட்­டுப்­பா­டு­களை நமக்குக் கற்­றுத்­த­ரு­கி­றது.

முஸ்­லிம்­க­ளா­கிய நாம் முற்­று­மு­ழு­தாக இஸ்­லா­மிய ‘ஷரீஆ’ வைத் ­தெ­ளி­வாகத் தெரிந்­தி­ருக்க வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும். ஷரீஆ பற்­றிய சந்­தே­கங்­களைப் பெரும்­பான்மை சமூ­கத்­தினர் நம்­மிடம் வந்து கேட்­கின்­ற­போது நாம் அவர்­க­ளுக்கு ஷரீ­ஆவைப் பற்றித் தெளி­வாக விளக்கம் தரத் தயங்­கு­வோ­மே­யானால் நாமும் குற்­ற­வா­ளி­க­ளாகி விடுவோம்.

வஹா­பிகள் என்­ப­வர்கள் யார்? ஹராம் என்றால் என்ன? இறைச்­சியைப் பற்­றிக்­கூற முடி­யுமா? 4 திரு­ம­ணங்கள் செய்­து­கொள்­வதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்­கி­றது? இப்­ப­டி­யெல்லாம்  தங்­க­ளு­டைய சந்­தே­கங்­களை அவர்கள் நம்­மிடம்  கேட்­பார்கள். ‘ஷரீஆ’ வின் சட்­ட­திட்­டங்­களை நாம் சரி­யாக அவர்­க­ளுக்கு விளக்­க­மாக எடுத்துச் சொல்­லி­விட்டால் மீண்டும் மீண்டும் அவர்கள் நம்­மிடம் வந்து முறை­யி­டவும் மாட்­டார்கள்.

இஸ்­லாத்தைப் பற்றிக் குறை­கூ­றவும் மாட்­டார்கள். உதா­ர­ண­மாக ‘பர்தா’ வைப் பற்றிக் கேட்டால் நாம் அவர்­க­ளுக்கு இப்­படிப் பதில் கூறலாம். ‘பர்தா’ ஒழுக்­க­மான ஆடை.10 ஆயி­ரத்­தி­லி­ருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை சாரிகள் விற்­கப்­ப­டு­கின்ற இக்­கா­லத்தில் ‘பர்தா’ மிகக் குறைந்த விலையில் வாங்­கிக்­கொள்ள முடி­கி­றது. 3 அல்­லது 4 ஆயிரம், ஆகக்­கூ­டினால் 6 ஆயிரம் ரூபாவுக்குள் வாங்­கி­வி­டலாம். அதிலும் கறுப்பு பர்தா என்றால் மிகவும் பொருத்தம். காரணம் எத்­தனை தடவை அணிந்­தாலும் அது பழசா, புதுசா என்று யாருக்கும் தெரி­யாது.

மழை எப்­போது பெய்யும்? பிறப்பு எந்த நிமிடம் நிகழும்? மரணம் எப்­போது வரும்? யாருக்குத் தெரியும்? அனைத்து  ரக­சி­யங்­க­ளையும் அறிந்­தவன் அந்த இறைவன் ஒரு­வன்தான். அவ­னுக்­குத்தான் தெரியும் ஒரு ஆரம்­பமும் அதன் முடிவும்.

நவீன யுகத்தில் எத்­த­னையோ ‘புதிய கண்­டு­பி­டிப்­பு­களைக்’ கண்­டு­பி­டித்த விஞ்­ஞா­னத்தால் சிறி­ய­தொரு கடுகு மணியைப் பூர­ண­மாகக் கண்­டு­பி­டிக்க முடி­கி­றதா? நம் கண்­ணுக்குப் புல­னா­காத மறை­பொ­ரு­ளாக அசைக்க முடி­யாத மாபெரும் சக்தி ஒன்று இயற்­கை­யாக இருந்து இயங்கிக் கொண்­டுதான் இருக்­கி­றது.

மறை­பொ­ரு­ளாக இயங்­கு­கின்ற இறை­வனைப் பற்­றிய பரி­பூ­ர­ண­மான விளக்கம் இஸ்­லாத்தில் இருக்­கி­றது. பிறப்பு தொடங்கி மனிதன் அவ­னு­டைய வாழ்நாள் வரை­யிலும் சிறுநீர் கழிப்­ப­தி­லி­ருந்து தாம்­பத்­திய உறவு வரை­யி­லான இயற்கைத் தேவை­களை அவன் எவ்­வி­த­மாகப் பரி­சுத்­த­மாகப் பேண­வேண்­டு­மென்று இஸ்லாம் மிக அழ­காகக் கற்­றுத்­த­ரு­கி­றது.
‘ஹராம்’ என்று விலக்­கப்­பட்­ட­வற்றைத் தவிர்த்து ‘ஹலால்’ என்று விதிக்­கப்­பட்­ட­வற்றை மட்­டுமே நாம் உட்­கொள்­ள­வேண்டும் என்­பதே இஸ்­லாத்தின் ‘ஷரீஆ’ இட்ட கட்­டளை. நாயின் இறைச்சி நமக்கு ஹராம். நஜீஸ் தூய்­மை­யற்­றது. விலக்­கப்­பட்ட விலங்கு அது. அரு­வ­ருக்­கத்­தக்க ‘நஜீஸ்’ களை உண்ணும் நாய், புதிய சஹனில் அதற்கு புரி­யாணி போட்­டாலும் வேறொரு நாய் வந்து அதைச் சாப்­பிட விடாமல், குரைத்துக் கடித்து விரட்டும். பொறாமைக் குணம் கொண்­டது நாய். தன் இனத்­தையே விரட்டும். தன் இனத்­தையே அது காட்­டியும் கொடுக்கும். செத்த பிரா­ணி­களை உண்ணும்  இந்த நாய், அதற்கு ‘விஷர்’ வந்து விட்டால் தன்னை வளர்த்த எஜ­மா­ன­னையே கடித்துக் குதறும். இத­னால்தான் யாரேனும் நன்றி கெட்­ட­த­ன­மாக நடந்து கொண்டால் சக மனி­தனைப் பார்த்து ‘நாயே’ என்று மனிதன் திட்­டு­கின்றான். கார­ண­மின்றி இறைவன் எதையும் தடை செய்­ய­வில்லை.

இஸ்­லா­மிய 4 திரு­மண விடயம் கூட சமூக நலன் கரு­தியே தவிர, ‘இச்சை’ தீர்க்கும் முழு நோக்கம் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்­கள்­கூட. விதவைப் பெண்­க­ளைத்தான் விவாகம் செய்­தார்கள். அதிலும், அன்னை சபியா (ரழி) அவர்­களை நபி­ய­வர்கள் மண­மு­டித்­த­போது, சபியா (ரழி) அவர்கள் 80 வய­தையும் தாண்­டி­ய­வர்­க­ளாக இருந்­தார்கள் என்­பது வர­லாறு.

நம் சமூ­கத்தில் 4 திரு­ம­ணங்கள் இவ்­வா­றான ஏழை அபலை வித­வை­க­ளுக்­காக அமை­கி­றதா?

துளி­ய­ள­வேனும் ஈமான், இஸ்லாம் இல்­லா­த­வர்கள், ‘இபாதத்’ என்றால் என்ன என்று தெரி­யா­த­வர்கள் பெய­ர­ளவில் முஸ்­லி­மாக இருப்­ப­வர்கள். சித்தீக், அமீன் என்று பெயரை வைத்­துக்­கொண்டு முடிக்­கின்ற இவ்­வா­றான 4 திரு­ம­ணங்கள் எந்­த­வி­தத்தில் சத்­தியத் தூதரின் வழி­மு­றையில் லட்­சியத் திரு­ம­ணங்­க­ளாகும்-? நெறி­யான இஸ்­லாத்தைப் பற்­றிய நிறை­வான போத­னை­களைக், கட­மை­களைப் பற்றி நிறை­யவே பேசலாம்.

இஸ்லாம் விவ­சா­யத்­திற்கு முத­லிடம் தந்த மார்க்கம். அதற்குப் பிற­குதான் வியா­பாரம், கைத்­தொழில் எல்லாம். வரு­கின்ற காலங்­களில் அவர்கள் நமக்கு ‘மரக்­கறி’ தர மறுப்­பார்­க­ளே­யானால் நம் நிலை என்ன? யோசிக்­க­வேண்டும். எதிர்­கால சவால்­களை சமா­ளிக்கக் கூடி­ய­வி­த­மான முன்­யோ­ச­னை­களை முன்­வைத்து இவ்­வா­றான ஆக்கபூர்­வ­மான ஆலோ­ச­னை­களை குத்­பாக்கள் மூல­மா­கவும், துண்டுப் பிர­சு­ரங்­க­ளா­கவும் சமூ­கத்­திற்கு விழிப்­பு­ணர்­வூட்ட வேண்­டி­யது நம் கட­மை­யல்­லவா? தென்னை தொடங்கி, பசளி, கறி­வேப்­பிலை, கத்­தரி, மிளகாய் என ‘வீட்டுப் பயிர்ச்­செய்­கையை’  செய்­வ­தற்கு ஊக்­கு­விக்­க­வேண்டும். குத்­பாக்­களில் ஓதப்­படும் சொல்­லப்­படும் பயான்கள் அந்­தந்தக் கால கட்ட சம­கால சூழ்­நி­லைக்­கேற்ற பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு தரத்­தக்க காத்­தி­ர­மான கருத்­துக்­க­ளாக அமைய வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மா­கி­றது.

ஏனென்றால், அண்­மைய காலங்­க­ளி­லி­ருந்து இஸ்­லாத்தின் மீதான ‘அவர்­க­ளது’ பார்வை வித்­தி­யா­ச­மா­கவே விரி­கி­றது. நமது இறைச்சி விஷ­யத்தில் இறுக்­க­மான மன­நி­லையில் அவர்கள் இருக்­கி­றார்கள். ஆனால், நம்மில் 75 வீத­மா­ன­வர்கள் இறைச்சி உண்­ப­தில்லை என்ற உண்­மையை அவர்கள் உண­ர­வில்லை. இப்­போது முஸ்­லிம்கள் மத்­தி­யி­லி­ருந்து இறைச்சி வியா­பாரம் வீழ்ச்­சி­யுற்று அந்தத் தொழிலே விடு­பட்டு வரு­கி­றது.

1987 ஆம் ஆண்டு, மாடுகள்  ஏற்­றி­வந்த லொறி ஒன்றைக் கைப்­பற்­றினர். மர்ஹூம் அமைச்சர் அஷ்ரப், மர்ஹூம் அமைச்சர் ஏ.ஸீ.எஸ். ஹமீட் இரு­வ­ரது கொடும்­பா­வி­க­ளையும் எரித்­தனர். ஆனால், லொறியின் சார­தியும், கிளி­னரும் முஸ்லிம் மதத்தைச் சார்ந்­த­வர்கள் அல்லர். ஜா–எலப் பகு­தியைச் சேர்ந்த ‘மெடம்’ ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான லொறி அது. அவரும் முஸ்லிம் அல்ல என்­ப­துதான் உண்மை. இப்­ப­டித்தான் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது அவர்­க­ளது இன­மு­று­க­லுக்­கான அடிப்­படைக் குழப்ப ஆர­வார அட்­ட­கா­சங்கள். எங்கள் பெயரில் அவர்கள் லொறிகள் குள­று­ப­டிகள். துவேச அலைகள்...

ஒருவர் நமக்கு ஓங்கி அடித்தால் நாமும் பதி­லுக்கு அவர் ஓங்கி அடித்த அதே அள­வுக்­குத்தான் ஓங்கி அடிக்க முடியும். ஒருவர் நம்­மு­டைய மேற் பற்­களில் ஒன்றை உடைத்தால்  நாமும் அடித்­த­வ­ரு­டைய மேற்­பல்லை மாத்­தி­ரம்தான் உடைக்க வேண்டும். சின்னச் சின்னச் சண்­டை­க­ளுக்கும் ‘ஷரீஆ’ தரு­கின்ற சட்டம் சரி­யா­கத்தான் இருக்­கி­றது. சரி­யாக ‘ஷரீஆ’ வைக் கடைப்­பி­டித்தால் எதுவும் சரி­யா­கவே நடக்கும்.

முஸ்­லிம்கள் கடும் போக்­கு­வா­திகள், போரா­ளிகள், குழப்­பக்­கா­ரர்கள் என்ற பயங்­க­ர­மான ஒரு சித்­தி­ரத்தைப் பெரும்­பான்­மை­யி­னரின் எண்­ணங்­களில் விஷ­வி­தை­க­ளாகத் தூவி விருட்ச­மாக்கி விட்­ட­வர்கள் அவர்­க­ளுக்­குள்ளே இருக்­கின்ற கெட்­ட­வர்கள். இஸ்­லாத்­திற்கு எதி­ரான விஷ­மிகள். ஆனால், அவர்­க­ளுக்­குள்­ளேயும் 90 வீத­மான நல்­ல­வர்­களும் இருக்­கத்தான் செய்­கின்­றனர்.

அத­னால்தான் துவேச மழை தூற­லோடு நின்று போய்­வி­டு­கி­றது.

அவர்­க­ளுக்­கெல்லாம் தெளி­வாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்­பு­கின்றேன். அன்­பா­ன­வர்­களே! 50 வரு­டங்­க­ளுக்கு மேற்பட்ட அரச ஊடக ஒலிப்பதிவு நாடாக்களைத் தேடி எடுத்துத் தேடினாலும் எங்கள் இஸ்லாமிய மதப் பெரியார்கள், உலமாக்கள், பேச்சாளர்கள் என்று எவராக இருந்தாலும், யாராவது ஒருவர் அன்றுதொட்டு இன்று வரைக்கும் எந்த மதத்தையாவது அல்லது அவர்களுடைய மனதை புண்படுத்தியாவது உரை நிகழ்த்தியதாக எங்கேயாவது ஏதாவது ஒரு சாட்சி, அத்தாட்சி, ஆதாரம், ஆவணம் இருக்கிறதா? சொல்லுங்கள். இதுவரை காலமும் மாற்று மதத்தினரை இழிவுபடுத்தி அவர்களது மதங்களுக்கு அபகீர்த்தி  ஏற்படுத்தி, மனதுகளைப் புண்படுத்தி எந்த ஊடகங்களிலும் எந்த உரைகளுமே நிகழ்த்தப்படவில்லை. இனியும் நிகழாது. எங்கள் மார்க்கம். சாந்தி மார்க்கம் அன்பு, ஈகை, மனித நேயம், இவைகள் தாம் எங்கள் உயர் பண்புகள். அன்பாய் இருப்போம். மனித நேயத்தோடு வாழ்வோம்.

வை.எம். இப்­றாஹிம்
கொழும்பு வர்த்­தக சங்கத் தலைவர்

0 கருத்துரைகள்:

Post a Comment