April 29, 2018

சம்பந்தனுடன், அப்துர் ரஹ்மான் பேச்சு - வருத்தத்துடன் முடிந்தது

“திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூயில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளும் அதன் பின்னர் நிகழ்ந்து வரும் சம்பவங்களும் கவலையளிக்கின்றன. பாடசாலை மட்டத்தில் நிர்வாக ரீதியாக தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம் இரண்டு சமூகங்களுக்கிடையிலான விரிசலாக மாறிவிடக் கூடாது. இவ்விடயத்தில் ஒவ்வொருவரும்  தமது பொறுப்பினை தத்தமது சமூகங்களின் பக்கம் நில்லாது  நீதியின் பக்கம் நின்று அணுக வேண்டும். இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் நிலைப்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக  எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் NFGG வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் தனித்துவமான ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் மிகவும் கவலையளிக்கின்றன. சகலருக்குமான புதிய இலங்கையை கட்டியெழுப்பும் வகையில்  ஒவ்வொரு சமூகத்தவர்களினதும் கலாசார தனித்துவங்களை மதித்து பரஸ்பர அனுசரிப்புகளோடு எல்லோரும் நடந்து கொள்ள வேண்டிய தருணத்தில் இது போன்ற சம்பவங்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையினையும் தருகின்றன. பாடசாலை மட்டத்தில் நிர்வாக ரீதியாக கையாளப்பட்டு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டிய இவ்விடயம் இனவாத பிரதிபலிப்புகளைக் கொண்ட உடனடி ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டமையினை எந்த வகையிலும் எற்றுக் கொள்ள முடியாது. 

மட்டுமன்றி, முஸ்லிம் ஆசிரியையின் கணவரினால் அதிபர் மிரட்டப்பட்டார் என்ற ஒரு பிரதான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவசரமான இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு எவரும் தன்னை மிரட்டவில்லை என அந்த அதிபர் தற்போது பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். ஆக, இந்தப் பிரச்சினை திட்டமிடப்பட்ட வகையில் தீய நோக்கம் கொண்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பூதாகரமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளதாகவே நம்ப வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு இலங்கை குடிமகனும் தான் விரும்பும் ஒழுங்கில் ஆடை அணிவதற்கான சுதந்திரத்தினை இந்த நாட்டின் யாப்பு உத்தரவாதப்படுத்தியுள்ளது. அது போலவே குறித்த இந்தப் பாடசாலை மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசாங்கப் பாடசாலையாகும். இதற்கென கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபங்கள் இருக்கின்றன. இதன் பிரகாரம் சீரான உடைகளை அணிந்து வர வேண்டும் என ஆசிரியர்களுக்கு சொல்லப்பட்டுள்ளதே தவிர இதைத்தான் அணிந்து வர வேண்டும் என்ற நிபந்தனைகள் எதுவும் இல்லை. இதனை அனுசரிக்கும் வகையில்  சகல அரசாங்கப் பாடசாலைகளும் நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களது கடமையாகும். முஸ்லிம் கலாசார தனித்துவங்களைப் பேணும் பாடசாலைகள் அனைத்தும் பிற மத  ஆசிரியைகளின் ஆடை விடயத்தில் எவ்வாறு சட்டத்தையும் அடுத்தவர்களின் கலாசார தனித்துவங்களையும் மதித்து நடந்து கொள்கிறன என்பதனை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

இந்தப் பின்னணியில் இந்த விடயமானது ஒரு பாடசாலையின் உள்விவகாரமாகவும், நிருவாகத்துடன் தொடர்பான நடவடிக்கையாகவும் சொல்லப்பட்டாலும், அடிப்படை உரிமை மீறலாகவே இது அமைந்துள்ளது. எந்தவொரு பிரஜையினதும் அடிப்படை மற்றும் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். ஒரு தரப்பின் தனித்துவத்தை, இன்னொரு தரப்பினர் மீது திணிப்பது கலாச்சார அத்துமீறலாகவே  கருதப்பட வேண்டும்.

 இலங்கையின் பன்மைத்துவத்தை மதித்து, பல்லினக் கலாச்சாரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டை நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் கொண்டுள்ளோம். சக சமூகத்தினரதும், பிரஜைகளதும் சுயாதீனத்தை மதித்து நடக்க வேண்டிய தேவை முன்னெப்போதை விடவும் சம காலத்தில் மிக அதிகமாக உணரப்படுகிறது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இதில் தலையிட்டு, சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டிக் கொள்கிறது.

குறிப்பாக, தமிழ் அரசியல் கட்சிகள் இவ்விடயத்தில் தமக்கிருக்கும் பொறுப்பினை உணர்ந்து நியாயமாகவும் நீதியாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஆரவாரமான இனவாதப் கோசங்களுக்கு  முன்னால் தத்தமது சமூகங்களின் பக்கம் நில்லாது  நீதியின் பக்கம் நின்று இதனை அணுக வேண்டும். அரசியல் மற்றும் இனரீதியான பாரபட்சங்களைக் கடந்து  பேசப்பட வேண்டிய நியாயங்களை பேசுவதற்கு அவர்கள் முன்வர வேண்டும்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அவர்களோடு இரு தினங்களுக்கு முன்னர் இவ்விடயம் தொடர்பில்  தொலைபேசியில் உரையாடினார். அவசர தொலைநகல் செய்தியொன்றையும் அனுப்பி வைத்திருந்தார். அதன் பின்னர் நேரில் சந்தித்து இந்த விடயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், அவசரமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார். எனினும், இரா.சம்பந்தன் அவர்களது பதில்கள் திருப்தியளிக்கக் கூடிய வகையில் அமையவில்லை. அத்தோடு நாட்டின் சட்டத்தின் படி அவர்களுக்கிருக்கின்ற உரிமைகளின் அடிப்படையில் முஸ்லிம் ஆசிரியைகள் பக்கமுள்ள நியாயங்களை ஏற்றுக் கொள்ளவும் அவர் தயாராக இருக்கவில்லை. இதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றது. 

பொறுப்புள்ள சமூக அரசியல் தலைவர்களின் இது போன்ற மனோநிலை எந்தவொரு சமூகத்திற்கும் நல்ல விளைவுகளைக் கொடுக்கப் போவதில்லை. நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கும் இது ஏற்புடையதல்ல. இந்நிலையில் தற்போது நாட்டில் இனங்களுக்கிடையிலே பரவலாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைவதற்கும், தீர்வுகளைக் காண்பதற்கும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிகளை துரித கதியில் முன்னெடுக்க வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வலியுறுத்துகிறது.

இவ்விடயத்தில் நிரந்தரமான நியாயமான தீர்வொன்றினைக் காண்பதற்கான சகல முயற்சிகளையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தொடர்ந்தும் மேற் கொள்ளும்.” என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 கருத்துரைகள்:

we shouldn't let it go down , we all Muslim need to continually work together to kike off this racist idiot who got some support from anti Muslim culprit to spark this mater on innocent Muslim women

பாடசாலையில் மாணவர்கள் முக்கியமாக படிப்பது “ஒழுக்கம்”, பாடசாலை ஒழுக்கம் தான் மிக முக்கியம். சில பாடசாலைகளில், பாடசாலைக்குள் ஆங்கிலம் மட்டும் தான் பேச முடியும். அதற்க்காக இவர்கள் அரச மொழி கொள்கைக்கு எதிரானவர்கள் என வழக்கு போட முடியுமா? பாடசாலை பக்கம் மழைக்கு கூட ஒதுங்காதவர்களுக்கு இது எப்படி புரியும்?

இனத்துவேச அரசியல் செய்பவர்களின் கடிதங்களுக்கு பதில் சொல்லப்போனால் இதுதான் பிரச்சனை.

“வடக்கு, கிழக்கு இணையவேண்டும் அதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும்” ஐயா உங்கள் அரசியல் அனுபவம் வயது முதிர்ச்சி உங்கள் பக்குவம் இவை எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருந்த அந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள் நியாயத்தின் பக்கம் இருக்க வேண்டிய நீங்களும் இனவாதிகளோடு கைகோர்த்து அநீதியின் பக்கம் சென்றுவிட்டீர்களே!!!

எங்கள் சமூகத்தை சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் அதிகாரத்திற்காக உங்கள் வால்பிடிக்கின்றதுகள் இதற்காக வெட்கப்படுகின்றேன் நாட்டில் முஸ்லிம்களுக்கு எங்கு பிரச்சினை என்றாலும் உங்க இல்லத்திலும், பாராளுமன்றத்திலும் உங்கள சந்தித்து பலமுறை எங்கள்பிரச்சினையை உங்களிடம் சொன்னார்களே உலகம் அறியாதவங்க.

வடக்கு கிழக்கு பிரிந்திருக்கும்போதே ஓர் அடிப்படை நம்பிக்கை சார்ந்த விடயத்துக்கு நீதியான தீர்வு சொல்லமுடியாத நீங்களா வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு தீர்வுத்திட்டத்தில் பங்கு கொடுக்கப்போகிறீர்கள்? எங்களது சந்தேகத்தை நீங்கள் உறுதிப்படுத்திவிட்டீர்களே.....

சிறுபான்மை சமூகங்களான நாங்கள் ஒற்றுமைப்பட்டு வாழவேண்டும் என்ற கனவுக்கு பல இனவாதிகள் கல்லைதூக்கிப்போடும்போது தடுக்கவேண்டிய நீங்கள் இப்படி தட்டிக்கொடுக்கிறீர்களே.

This is a litmus test for the place of Muslims in the North+East amalgamated Tamil Eelam

உங்களைப்போன்ற அரசியல் தலைவர்களுக்கு கொஞ்சம் லேட்டாத்தான் எல்லாம் விளங்குது. அதாவுல்லாவின் நேசறியிலயாவது கொஞ்ச காலம் சேருங்கள்.

சம்பந்தன் ஐயா அவர்களுக்கு.
உங்களுக்கு மறந்தாலும் எங்களுக்கு மறக்காது..

1995 களில் சந்திரிக்கா அரசில் ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்தில் ஒரு சம்பவம். செய்தி வாசிக்கும் போது யாரும் தமது மத அடையாளத்தை வெளிக்காட்ட கூடாது என்று ஒரு உத்தரவு கூட்டுத்தாபனத்தின் மேலிடத்திலிருந்து பிறப்பிக்கப்படுகிறது.

இதனால் தமிழ் பெண்கள் பொட்டு வைத்து கொண்டு செய்தி வாசிக்க தடை ஏற்படுகிறது. இதற்கெதிராக குரல் எழுப்ப ஆளுங்கட்சியில் தமிழ் சமூகம் சார்ந்த அமைச்சர் யாரும் இருக்கவுமில்லை.

அரசில் பலம் வாய்ந்த அமைச்சராக விளங்கிய SLMC ன் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் துணிந்தார், நியாயங்களை எடுத்துக்கூறி தமிழ் பெண்களுக்கு பொட்டு வைக்கும் உரிமையை பெற்றுக்கொடுத்தார். இந்த செயல் SLMC க்குள்ளே சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

முஸ்லிம்களின் உரிமையை பெற்றுக்கொடுக்காமல் தமிழர்களுக்காக உழைத்தார் என்று. கொள்ளுப்பிட்டி மேமன் மண்டபத்தில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் இதற்கான பதிலையும் வழங்கினார்.

அவர் சொன்னார் ' தமிழர்களுக்கு கிடைக்காவிட்டால் முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்காது ' . இந்த பதிலால் சர்ச்சையும் அடங்கியது.தலைவர் அஷ்ரப் எங்கே? ஐயா சம்பந்தன் எங்கே? அவரல்லவோ தலைவர்.

Sampanthan is a Tamil racist.

He should step down from Opposition leader.

Dear,
Why you need to approach Sampanthan, Try to do the righteous / legal action.
No need to go behind someone to follow our rights, Government clearly mentioned the everyone right.

Dear,
Why you need to approach Sampanthan, Try to do the righteous / legal action.
No need to go behind someone to follow our rights, Government clearly mentioned the everyone right.

அருகதையானவர் என்று நாம் நினைப்பது மூடர்களை இவர்களின் நயவஞ்சக பதிலையும் இவர்களையும் நம்பினால் இவர்களின் பின்னாலேயே எமது நேரமும் வீனாகும் தமிழ் சமூகம் ஏமாறுவதை போல

தமிழீழம் என்று அவர்களின் ஓட்டு வங்கி கூடைக்குள் இந்து மக்கள் வாழ்கை என்றால் என்னெவென்று தெரியாமல் உலகமே அறியாமல் சிக்கித்தவிக்கிறார்கள் இவர்கள் வாழ்கிறார்கள் எமக்கும் அதே பாணியில் இழுத்து அடித்து காலம் கடத்துவார்கள் இனி இது ஒரு அரசியல் வியூகம் ( ABAYA )

Step on to legal path where constitution approved freedom for dress of ethnics.

அரசியல் முதிர்ச்சி பெற்ற உங்களை முஸ்லிங்கள் எப்போதும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள்,ஆனால் இப்போது எல்லாமே போயிடிச்சி,

Post a Comment