Header Ads



"ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே, நாங்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை"

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவரை பாதுகாக்கவும், அவருக்கு ஆதரவளிக்கவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எப்போது தீர்மானிக்கின்றதோ அப்போது அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த தரப்பினர் வெளியிட்ட சில கருத்துக்கள் வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.


கடந்த 4ம் திகதி காலையில் அரசியல் நிலைமைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டது எனவும், இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான தீர்மானத்தில் மாற்றம் செய்ய நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமரை தோற்கடிக்க முடியாது என்பது சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் எதிராக வாக்களிக்கத் தீர்மானித்திருந்த நிலையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வாக்களிப்பின் போது தாங்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை என மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.