Header Ads



தங்கத்திற்கு வரி அறவிடத் தீர்மானித்தமை, ஏன் தெரியுமா..?

நாட்டின் தேவைக்கு அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவதால் நேற்று (17) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத வரியை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு 9000 கிலோகிராம் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு 15,000 கிலோகிராம் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 8000 கிலோகிராம் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவிற்கு தங்காபரண உற்பத்தி இடம்பெறவில்லை என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக இறக்கமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத வரியை அறவிடத் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

3 comments:

  1. உங்களைப்போல பிச்சைக்கார அரசாங்கம் பெண்ணொருத்தி ஆண்ட அரசாங்கத்திலும் காண க் கிடைக்கவில்லை.
    வாழ்க்கையில் இனியொரு யானை ஆட்சிக்கு வருவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும்.
    மக்களை சுரண்டும் கோலை அரசாங்கமாக இல்லாமல் உங்களது படிப்பு அணுபவங்களை வைத்து நேர்மையாக தேடும் வழிகளை காணவேண்டும்.
    மக்களுக்கு சேவைசெய்ய வரும் அரசாங்கம் இப்படியா மக்களின் பொருளாதாரதில் சார்ந்தும் அதனை கொள்ளையிட்டும் பிளைப்பது?
    பொது மக்களை கொள்ளையிட்டு நீங்கள் அரசியல் வாதிகளல்லவா சொகுசாகவும் தங்களது பா க் கட்டு க் களையும் நிரப்புகிறீர்கள்?.
    இந்த மோடத்தனமான சிங்கள முடிவு நாட்டின் பொருளாதார த்தை மேலும் படுகுழியில் தள்ளும். தகுதியற்றவர்கள் ஆட்ச்சிப்பொருப்பில் இருக்கூடாது.

    ReplyDelete
  2. இன்று அக்ஷயை திருதி அதனால் தான் இந்த விலை ஏற்றம் என்று நேரடியாக சொல்லுங்கள். இலங்கையின் நகை கொள்வனவில் சுமார் 10% வழமையாக இந்த வாரத்தில் தான் ஆண்டு தோறும் நடை பெறுகின்றது. ஒரு நீண்டகால வேலைத்திட்டம் இல்லாத அரசு இவாறு தான் சிக்கல்களை எதிர்நோக்கும். நீங்கள் வரியை கொண்டு வருகிறீர்கள் என்றால் குறைந்தது ஓராண்டுக்கு முன்னே அறிவிக்க வேண்டும்.வேண்டுமென்றே தமிழ் வியாபாரிகளையும் தமிழர் கலாசாரத்திலும் கை வைத்தது போலிருக்கின்றது.

    ReplyDelete
  3. சகோதர தமிழினத்தின் பண்டிகையை கருத்தில் கொண்டு இந்த அரசு இவ்வாறு வேண்டுமென்று வரி விதிப்பதாக இருந்தால் இது ஏற்புடையதல்ல. இது அநியாயமான கொள்ளையாகும். இதை விட அரசு பிச்சை எடுக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.