Header Ads



"பலூன் விவகாரம்" படங்களை தவிர்த்து, பாவங்களை தடுக்கலாமே..!

-By - Shk TM Mufaris Rashadi

நமது தாயோ மனைவியோ சகோதரியோ ஒழுக்கச்சீர்கேடான ஏதாவது ஒரு தவறை செய்து விட்டால் அவர்களை படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அவர்களை பாவத்திலிருந்து தடுக்க முயற்சிப்போமா ?

அல்லது அந்த தவறை எவ்விதத்தில் அணுக வேண்டுமோ அப்படி அணுக முயற்சிப்போமா ?

சரி.. அவர்கள் தான் அறிவின்றி அதனை படமெடுத்து பகிர்ந்து கொண்டாலும் கூட நாம் அவர்களது படங்களை மென்மேலும் பகிர்ந்து அவர்களை சீரழிக்க முயற்சிப்போமா ? 

அல்லது உரியவர்களை தொடர்பு கொண்டு அழகிய முறையில் அதனை சுட்டிக்காட்டுவோமா ?

தவறுகள் நிகழ்வது யதார்த்தமானதே அதற்காக குறித்த பெண்களின் புகைப்படங்களை பகிர்ந்து அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்க முயற்சிப்பது பெரும்பாவம் இல்லையா ?

இதே நிலை எமது குடும்ப பெண்களுக்கு ஏற்பட்டிருந்தால் நமது நிலைப்பாடு என்னவாயிருக்கும் ?

முஃமின் தனக்கு எதனை விரும்புகிறானோ அதனையே பிறருக்கும் விரும்பாதவரை அவன் உண்மை முஃமினாக ஆக முடியாது என்ற நபி மொழியை சிந்தித்தோமா ?

நமக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயமா ?

பெண்களின் கற்பு, அவர்களின் எதிர்காலம் பிறரது மானம் போன்ற விடயங்களில் நாம் விளையாடிவிட்டால் குறித்த நபர்கள் எம்மை மன்னிக்காவரை அல்லாஹ் எங்களை மன்னிப்பதனை அல்லாஹ்வாகிய அவனே அவனுக்கு ஹராமாக்கி விட்டான், என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாவம் செய்தவர்கள் தௌபா செய்து விட்டால் உடனே அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகிறான், அதனை பகிரங்கப்படுத்தியவர்களின் நிலை ?

தவறுகள் தவறுகள் தான் அதனை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது எனினும் படங்களை தவிர்த்து பாவங்களை உரிய முறையில் தடுக்க முயற்சிக்கலாமே!

7 comments:

  1. These happen when parents and being careless about their family.

    ReplyDelete
  2. Current Part 1:அதிகூடிய நம்பிக்கையினதும் தேவயற்ற பணத்தினதும் தெளிவான வெளிப்பாடு
    Next Part 2: சுதந்திரம் இல்லையென சில கிளிகள் போராடும் இனி

    Note:- 1) ஆண்கள் நாம் சம்பாரிப்போம்
    2) குடிப்போம் ( islam பேசுவோம் )
    3) சண்டை பிடிப்போம் ( islam பேசுவோம்)

    பெண்களை கிளிபோல் வளர்த்து யாரோடையாவது test drive கு அனுப்பிவிட்டு பிறகு சிந்தித்து islam பேசிப்பேசி பொழுதை களிப்போம்

    ReplyDelete
  3. (முகநூலில் பணத்தோடு பகிரப்பட்ட இந்த விடயம் தொடர்பாக நான் எழுதிய கருத்துரை)ச்செய்தியை இன்னுமொரு சகோதரர் பகிர்ந்திருந்தார் ஆனால் அவர் படங்களில் காணப்பட்ட சம்பவத்திற்குரியவர்களின் முகத்தை மறைத்திருந்தார்.அதன் மூலம் செய்தி உண்மை என்பதை அடையாளப்படுத்திய அதேவேளை மானத்தோடு சம்பந்தப்பட்டது என்பதால் அவர்களின் முகங்களை மறைத்தார்.இதை சமூக அக்கறை எனலாம் ஆனால் இப்படி மானம் பாதிக்கும்படி பிரசுரித்தமை சமூக அக்கறை அல்ல பாவத்தை பகிரங்கப்படுத்திய பாவம் என்ற நிலை. ஷரீஆவின் நோக்கம் மார்க்கம் ,மானம்,உயிர்,உடல்,உடமைகளை பாதுகாத்தல் ஆகும். மானம் தொடர்பான ஹதீஸ்களை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள் அதன் பெறுமானம் எத்தகையது என்று புரியும்.அதேநேரம் இவ்வாறான நிகழ்வுகள் இனிமேல் இடம்பெறாதவாறு அனைவரும் ஒன்றித்த எதிர்ப்பை வெளியிடுவதோடு விழிப்புணர்வுகளை பலவழிகளிலும் ஏற்படுத்த வேண்டும்.குத்பாக்களிலும் பேசப்பட வேண்டும் குறிப்பாக கொழும்பில் அவசியம் அடிக்கடி இது தொடர்பாக பேசப்பட வேண்டும்.

    ReplyDelete
  4. எனது கருத்துரையில் பணத்தோடு என்று வரும் இடத்தில் புகைப்படத்தோடு என்று வாசிக்கவும்.

    ReplyDelete

Powered by Blogger.