Header Ads



"இலங்கையர்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பெற்றுக்கொண்ட சுதந்திரம் பற்றி புரிந்துணர்வுடன் செயற்படவில்லை"

சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் குறுகிய அரசியல் மற்றும் வர்த்தக நோக்கங்களுடன் உண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்ய முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, லண்டனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஸ்தாபித்து, நாட்டை அபிவிருத்தியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் பற்றிய சரியான தகவல்கள் நாட்டு மக்களை சென்றடைவதில்லை.

உண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தாய்நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக உள்ளது.

இந்தநிலையில், தாய்நாட்டின் உண்மையான நிலைமைகள் பற்றிய சரியான புரிந்துணர்வுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு குறித்த இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் சகல துறை சார்ந்தவர்களும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தாம் பெற்றுக்கொண்டுள்ள சுதந்திரம் பற்றிய சரியான புரிந்துணர்வுடன் செயற்படவில்லை.

நாட்டுக்கெதிராக இருந்த சர்வதேசத்தை மீண்டும் நாட்டை நோக்கி கொண்டுவர முடிந்துள்ளமையானது கடந்த மூன்று வருடங்களுக்குள் பெற்றுக்கொண்டுள்ள முக்கிய வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஒரு வெட்கக்கேடான ஜனாதிபதி பாதுகாப்பு படை வீரர்கள் பள்ளிவாசலையும், மெளலவிமார்களையும் தாக்குவது சுதந்திரம்...!!! வெட்கம்..வெட்கம்...!!! இனவாதம் பிடித்த சிங்கள போலீசும், பாதுகாப்பு படையும் இந்த நாட்டில் மாற்றி அமைக்கப்பட்டு, இந்த நாட்டிலுள்ள எல்லா இன மக்களும் சரிசமமாக உபாசரிக்கப்பட வேண்டும். அதட்கான வழிமுறைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது தான் சரியான சுதந்திரத்தை இந்த நாட்டு மக்களுக்கு கொடுக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.