Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையாளர்களை, விடுவிக்க தீவிர முயற்சி


கண்டி மாவட்­ட­மெங்கும் இடம்­பெற்ற இன ரீதி­யி­லான வன்­மு­றை­க­ளின்­போது முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடாத்தி தீ வைத்­தமை தொடர்பில் 32 பேரை எதிர்­வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு தெல்­தெ­னிய நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது.  கைதான, குண்­ட­சாலை பிர­தேச சபைக்கு இம்­முறை பொது­ஜன பெர­முன சார்பில் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தேச சபை உறுப்­பி­ன­ரான அர­லிய வசந்த எனப்­படும் குமார மொஹட்­டிகே சமந்த பெரேரா உள்­ளிட்ட 8 பேர், கல­வ­ரங்­களின் பின்­ன­ணியில் இருந்த பிர­தான சூத்­தி­ர­தாரி எனப்­படும் மஹ­சொஹொன் பல­காய தலைவர் அமித் வீர­சிங்க உள்­ளிட்ட 8 பேர், வன்­முறை தொடர்பில் புதி­தாக நேற்று மன்றில் ஆஜர் செய்­யப்­பட்ட  எட்டு பேர் உள்­ளிட்ட 32 சந்­தேக நபர்­க­ளையே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்க  தெல்­தெ­னிய தீதிவான் எம்.எச். பரிக்டீன் உத்­த­ர­விட்டார்.

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் விதிகள், தண்­டனை சட்டக் கோவையின் கீழ் அவர்­க­ளுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ்­வி­சா­ர­ணைகள் இன்னும் நிறை­வ­டை­ய­வில்லை என்றும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் நீதி­வா­னுக்கு அறி­வித்த நிலை­யி­லேயே நீதிவான் சந்­தேக நபர்­களின் விளக்­க­ம­றி­யலை நீடித்தார்.

நேற்­றைய தினம் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­ன­போது, அனு­ரா­த­புரம் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அமித் வீர­சிங்­கவும்  பல்­லே­க­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஏனைய 23 பேரும்  மன்­றுக்கு சிறைக்­கா­வ­லர்­களால் அழைத்து வரப்­பட்­டனர். அத்­துடன் நேற்று புதி­தாக மேலும் 8 பேரும் பொலி­ஸாரால் மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டனர்.

 இந்­நி­லையில், வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­ன­போது, சந்­தேக நபர்­களின் உற­வி­னர்கள் பெரு­ம­ள­வானோர் நீதி­மன்ற வளா­கத்தில் ஒன்று கூடி­யி­ருந்­தனர். பின்னர் சந்­தேக நபர்கள் விளக்­க­ம­றி­ய­லுக்கு அழைத்துச் செல்­லப்­படும் போது அவர்கள் கதறி அழு­த­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது.

 வழக்கு விசா­ர­ணை­களின் போது, கடந்த தவ­ணையில் சந்­தேக நபர் ஒருவர் மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் எனக்­கூறி அவரை விடு­தலை செய்ய முயற்­சிக்­கப்­பட்ட போது, அது தொடர்பில் நீதிவான் மருத்­துவ அறிக்­கை­யினைக் கோரி­யி­ருந்தார். நேற்று அந்த அறிக்கை கிடைக்­கப்­பெற்­ற­தா­கவும் அதில் அவர் மன­நலம் குன்­றி­யவர் அல்ல என்­பது தெளி­வான நிலையில், அவரை விடு­விக்க நீதிவான் மறுப்புத் தெரி­வித்­த­தா­கவும் பாதிக்­கப்­பட்ட தரப்பு சார்பில் பேச­வல்ல சட்­டத்­த­ரணி சரூக் தெரி­வித்தார்.

 இத­னி­டையே நேற்று முச்­சக்­கர வண்­டி­யொன்­றினை விடு­வித்­துக்­கொள்ளும் முயற்­சிகள் இடம்­பெற்­றுள்ள நிலையில், அதற்கு பாதிக்­கப்­பட்ட தரப்பு சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணி­க­ளான அமா­னுல்லா மற்றும் முனீர் ஆகியோர் கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர். அந்த முச்­சக்­கர வண்­டியை மையப்­ப­டுத்தி விசா­ர­ணைகள் இடம்­பெறும் நிலையில் அதனை உரி­மை­யா­ள­ருக்கு விடு­விப்­பது விசா­ர­ணை­களைப் பாதிக்கும் என அவர்கள் நீதி­வா­னுக்கு அறி­விக்­கவே நீதிவான் முச்­சக்­கர வண்­டியை விடு­விப்­பதை நிரா­க­ரித்­துள்ளார்.

 எவ்­வா­றா­யினும் அமித் வீர­சிங்க உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் அமித் வீர­சிங்­கவை சமூக ஆர்­வ­ல­ராக சித்­தி­ரித்­த­துடன், அவரை பொலிஸார் திட்­ட­மிட்டு இதில் சிக்­க­வைத்து மோச­மாக செயற்­ப­டு­வ­தா­கவும் கூறி­யுள்­ளனர்.

 எனினும் கண்டி இன­வாத வன்முறைகளின் பின்னணியில் உள்ள பிரதான சந்தேக நபரை சமூக ஆர்வலராக சித்திரிப்பதை பாதிக்கப்பட்ட தரப்பு கண்டித்துள்ளது.

 இந் நிலையிலேயே வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் மேலதிக விசாரணைகளுக்கு காலஅவகாசம் அளித்து சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் மே 2 ஆம் திகதிவரை நீதிவான் நீடித்துள்ளார்.

-vidivelli

1 comment:

  1. Yahapalanaya will release and even pay the compensation to them.

    ReplyDelete

Powered by Blogger.