Header Ads



பிரதி சபாநாயகர் பதவி, முஜீபுர் ரஹ்மானுக்கு விருப்பமில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் பிரதி சபாநாயகராக முஜீபுர் ரஹ்மானை நியமிக்கும்படி பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் பிரதி சபாநாயகர் பதவியில், தமக்கு விருப்பமில்லை என முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

ஜப்னா முஸ்லிம் ஆசிரியர் உள்ளிட்ட மற்றும் சிலரும் இதையொத்த தமது அபிப்பிராயத்தை முஜீபுர் ரஹ்மானுக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.

முஜீபுர் ரஹ்மான் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டால், முஸ்லிம் சமூகத்திற்கான அவரது குரல் மட்டுப்படுத்தப்படலாமெனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

2 comments:

  1. தற்போதைய அரசியல் வாதிகளில் வாதத்திறமையும், அரசியல் திறமையும், இனஉணர்வும் உள்ள ஒரு அரசியல்வாதியான முஜிபுர் ரஹ்மான் அவர்கள் நிட்சயமாக பிரதிசபாநாயகர் பதவியை ஏற்றுக் கொள்ளவே கூடாது. Jaffana Muslim மிகச் சரியான விடயத்தை எடுத்துக் கூறியுள்ளது. நன்றி.

    ReplyDelete
  2. UNP is trying to stop his voice at the Parliament.

    ReplyDelete

Powered by Blogger.