Header Ads



பஸ் - ஆட்டோ கட்டணம், அதிகரிக்கும் வாய்ப்பு


அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துச் செல்லும் நிலையில், அதற்கேற்ற வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படுமென அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பல்வேறு விலை அதிகரிப்புகள் காரணமாக, தனியார் பஸ் தொழிலும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த, பஸ் கட்டண மறுசீரமைப்பின்போது எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைய, பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

2

பெற்றோலின் விலை 150 ரூபாவைவிட அதிகரிக்குமாயின் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்படுமென, அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய தாம் செயற்படத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக பெற்றோலின் விலை அதிகரிக்கப்படுமாயின் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது எனவும், எனினும் 150ரூபாவை விட விலை அதிகரிக்கப்படுமாயின் அதற்கேற்ப, தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.